28 Mar 2007

ஹெல்ப் பிளீஸ்

எங்க வீட்டுல எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியும் பார்ப்பதில்லை( கனெக்ஸன் இருந்தாதான) அவள் விகடன் படிக்கும் நேரம் லாம் ஒரு விளம்பரம் கண்ணில் படுகிறது அதுல வேண்டுவதுலாம் கிடைக்குதாம். ஒருத்தருக்கு படித்து முடித்தவுடன் 20 K-ல வேலை கிடைத்ததாம்,( why because he is a IT guy, does anyone got Job after done their Bsc zoo?) நோய் தீர்ந்ததாம், கடன் அடைந்ததாம். இதை விஜய் தொலைக்காட்சியில் பார்க்கலாமாம், (ஒன்னெஸ் நிகழ்ச்சி) காலை 7- 30 முதல் 8 மணி வரை. ஞாயிறு காலைல யார் வீட்டுக்கு போனாலும் அடி பின்னிடுவாங்க. அதனால யாராவது ரெக்கர்ட் பன்னி யூ- டியுப் ல போட்டு லின்க் அனுப்பினால் பார்த்தி ரசிப்பேன்.

எனக்கு கூட அமெரிக்க அதிபர் ஆக ஆசை, மறைந்து போகும் மனிதனாக ஆசை, உலகில் திராவிடம், பார்ப்பணீயம் ஒழிய ஆசை, தனிமனித தாக்குதல் தவிர்க்க ஆசை, தனி மணித துதி பாடும் போக்கு மார ஆசை( அது சரி இதுவே ஒரு தனி மனித துதிபாடும் நிகழ்ச்சிதானே) எந்த ஒரு முயற்ச்சியும் செய்யாமல் பில் கேட்ஸை முந்த ஆசை( பணத்திலபா)
சரி இதுலாம் முடியாதுனா அட்லீஸ்ட் பின் லேடன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க ஆசை.

இதுல ஒரு ஆசை நிறைவேரிச்சுனா எனது பிளாக் படிப்பவர்க்கெல்லாம் வரிக்கு ஒரு டாலர் கொடுக்கறனுங்க.

இன்னும் புரியலயா? நான் யாரை சொல்லுகிறேன் என்று அதாங்க நம்ப கல்கி பகவான்னு திரியும் முன்னால் இன்சூரன்ஸ் ஊழியர். அது சரி கடவுளுக்கே விளம்பரமா? சரி சரி எங்க தாத்தா சொன்னாமாதிரி பூக்கடைக்கும் இக்காலத்தில் விளம்பரம் தேவைப்படுகிரது.இவர் மட்டும் விதிவிலக்கா என்னா?

2 comments:

aravindaan said...

Naan Bsc(Zoo) ippa it field irukken. BSc zoo appadina romba elakarama pochu ungalukku..

Beemboy-Erode said...

அரவிந்துனா..நான் அப்படி சொல்லலைங்கனா, நீங்க ஐ.டி ல இருங்க சந்தோசம். Freshers Bsc zoo la யாருக்காவது வேலை கிடைச்சுருக்கா இந்த சம்பளத்துல?