கொஞ்ஜ நாளா இந்த வலைப்பூக்களில் வியர்டு விளையாட்டு ஓடிக்கிட்டு இருக்கு சரி நாம புதுசு நம்பள யாரும் கூப்பிடமாட்டாங்கனு இருந்தேன் ஆனால் நம்ப சிவபாலன் அழைப்பு விடுத்துட்டார்( பக்கத்து மாவட்டத்துகாரர் என்கிற பாசம், பாசக்கார பயலுபா) சரினு ஒத்துக்கிட்டேன். யோசித்துபார்த்தால் என்கிட்ட என்ன இருக்குனு ஒன்னும் தெரியல. கொசுவர்த்தி சுருள் சுழல உக்காந்தா ஒரு சிலது நியாபகம் வருதுங்க இது வியர்டு ஆட்டத்துல வருமானு தெரியல. நீங்கதான் சொல்லனும்.
விளையாட்டு: நானெல்லாம் ரொம்ப நல்லா கிரிக்கெட் விளையாடினேன், எப்போ தெரியுமா? 4 வது படிக்கும் போது. இப்பலாம் கிரிக்கெட்ட நினைத்துகூட பார்க்கிரது,நினைக்கிறது இல்லை. ஏன் தெரியுமா அப்படி ஒரு மோசமான அம்பயரை பார்த்ததால்.எல்லாரையும் போல எங்க ஊரு பசங்கலாம் கிரிக்கெட் விளையாடினோம், பேட்ஸ்மேன் பீம்பாய் அடித்த பந்து பௌவுன்டிரி நோக்கி சென்றது. ஓடியது ஓடியது எல்லைக்கோட்டை நோக்கி ஓடியது..ஆ..........யாரந்த காதகன் எல்லைக்கோட்டிர்க்கு சற்று முன் நிறுத்திவிட்டான், பீம்பாயின் வாழ்க்கையை திசை திருப்பிய நிறுத்தம் அது. அந்த பந்தை எடுத்து வீசி எறிந்தான், ஆனால் பீம்பாய் ஓடினான், ஓடினான் ஆனால் எல்லைக்கோட்டை தொடமுடியவில்லை, அவன் மூளையில் ஒரு மின்னல், மட்டையை தூக்கிஎரிந்தான், அவனுக்கு முன் அது அங்கு போய் சேர்ந்தது. ஆனால் பாழாய் போன அம்பயர் அவுட் கொடுத்துவிட்டான்.வாதம் செய்தேன் நான் இருந்தால் என்ன, மட்டை இருந்தால் என்ன என்று. விவாதம் புரிந்தேன் நானும் மட்டையும் ஒன்று என்று. அன்றே எனது வியர்டு ரூலால் நான் ஆட்டம் இழந்தேன்( அன்னிக்கே வியர்டு வாழ்க்கையில் விளையாடியது) அழுது கொன்டே வெளியே வந்த நான் அன்று முதல் கிரிக்கெட் பேட் தொடுவதில்லை. அது மட்டும் இல்லை ஏனோ தெரியவில்லை எந்த விளையாட்டுமேலும் விருப்பபம் வரவில்லை. ஆனால் கிரிக்கெட் பற்றி மட்டும் அப்டேட் செய்துகொள்வேன், ஏனென்றால் 4 பேரிடம் பேசும்பொழுது விவாதிக்க, இல்லைனா நம்பள ஒரு மாதிரி பார்க்கரானுங்க (பாசக்கார பயலுங்க சார்)
கோபம்/மரியாதை:பொதுவா பார்த்தீங்கனா கொங்கு நாட்டு மக்கள் மரியாதை ஆக பேசுவாங்க. பேசும் போது கூட தேனுங்னா/சரிங்க/ செஞ்ஜிடலாம்ங்கனு தான் அதிகம் உபயோகிப்பாங்க. இளம் சிறுவர்கள் கூட!!!!!! வாலிப வயதினர் சரிங்க மாப்ளை பார்த்துடலாம்ங்க அப்படினு.தான் வார்த்தை உபயோகிப்பாங்க.இப்படி வளர்ந்த எனக்கு யாராவது ஒருமையில் பேசினால் முகத்தில் அடித்தார் போல் சொல்லிடுவேன். (ஏங்க நான் உங்களை வாங்க போங்கானு தானே சொல்றேன், நீங்க ஏன் ஒருமையில் பேசரீங்கனு) இதனால் இழந்த நட்பு சில, பெற்ற நட்பு பல.(விதி விலக்கு 4 பேர் மட்டும், என்னை டேய் என்று அழைப்பவர் ஒருவர், நான் டேய் என்று அழைப்பது 3 பேர், இது ஏனோ தெரியவில்லை)அதே மாதிரி நாலுகால் உள்ள பிரானியுடன் ஒப்பிட்டு பேசுவது இருப்பதிலேயே மரியாதை குறைவாக நினைக்கிறேன்.( டேய் அந்த நா....வந்துட்டு போச்சுடா) இது வியர்டான குனமானு தெரியல பா..
புகைப்பிடிப்பது:எனக்கு சிகரெட் பிடிப்பது அறவே பிடிக்காது, என் எதிரில் நன்பர்கள் யாராவது பிடித்தால் சிகரட்டை பிடிங்கி வாயிலிருந்து உருவி கீழே போட்டு அனைத்துவிடுவேன், அதே நேரம் சிகரட்டிர்கு உன்டான காசை கொடுத்டுடுவேன். இதனால் கன்னத்தில் அடி வாங்கியது கூட உண்டு. நனபர்கள் கூட நேரம் செலவிடும் பொழுது/கடைக்கு போகும் பொழுது சிகரெட்- கு மட்டும் காசுசெலவழிக்கமாட்டேன்/கொடுக்கமாட்டேன். பட்ஜட்டில் சிகரெட்டின் விலை அதிகம் ஆனால் முதன் முதலாக சந்தோசபடும் நபர் நானாகதான் இருப்பேன்.இதிலும் விதி விலக்கு ஒரு நன்பர்க்கு மட்டும். வெளிநாடு சென்று திரும்மும் போது ஒருவர்க்கு சுருட்டு ஒரு பாக்கட் வாங்கி கொடுத்தேன். அதுவே முதலும் கடைசியும் நான் செய்த சிகரட் சிலவு.நாட்கள் ஆக ஆக இவர்கள் திருந்த மாட்டார்கள் என்று கன்டிப்பதை விட்டுவிட்டேன், பின்னாலில் எனது பாஸ் புகை பிடிப்பவராக அமைந்து விட்டார், ஒரு நாள் விவாதித்த பொழுது சிகரெட் பிடித்தால் மூளை வேலை செய்யும் என்றும், காலை மலம் கழிக்கும் பொழுது ஈஸியாக போகும் என்றும் கதை விட்டார். அனால் இன்றும் யாராவது புகைத்தால் (என்னருகில்) ஒரு பத்தடி நகர்ந்து கொள்வேன். இது என்ன வினோதமான பழக்கம் என்று தெரியவில்லை. ஒரு வேளை இதுதான் வியர்டா?
பொழுதுபோக்கு:ஈரோட்டிலிருந்து ஊட்டி/கொடைக்கானல்/ஏற்காடு/ மூனார்/ செல்ல சற்றேரக்குறய சம தூரம் தான். Erode-Ooty 180 Kms, Erode-Kodaikannal 180 Kms, Erode-Yercad 95Kms, Erode-Munnar 200Kms, Erode-Valparai 180 Kms.எங்கள் நன்பர்கள் குழு 3 மாதத்திற்கு ஒரு முறை கிளம்பிவிடுவோம் 2 இரவுகள் தங்குவதர்கு. அதிகம் போக விருப்பபடுவது கொடைக்காணல் மற்றும் வால்பாறை.மோட்டார் சைக்கிளை எடுத்க்கொன்டு 4 அல்லது 5 மனி நேரத்தில் இலக்கை அடைந்துவிடுவோம். நன்பரின் நன்பர் என்று யாராவது ஒவ்வொரு முறையும் சேர்ந்து கொள்வார்கள். ஜாலியாகத்தான் பயனம் ஆரமிக்கும், வீடு திரும்பும் பொழுது புது நன்பர்கள் ஏன்டா போனேம் என்று ஆகிவிடும். பின்னே என்னங்க யாரவது இந்த மாதிரி மலை பிரதெசத்திர்க்கு போனால் சுத்தி பார்த்துட்டு தூங்குவாங்க. ஆனால் நாங்க என்ன பன்னுவோம் தெரியுமா? போய் சேர்ந்த உடன் நல்லா சாப்பிட்டு தூங்கிடுவோம், மறுபடி எழுந்து சாப்பிட்டு தூங்கி, மறுபடி எழுந்து ஒரு சின்னதா வாக் போயிட்டு மறுபடி தூங்கிடுவோம். இப்படிதான் எங்கள் டிரிப் இருக்கும். ( 95 % தூங்கிடுவோம்)சில புதிய நன்பர்கள் விதி விலக்கா மறுமுறையும் வருவாங்க.ஒரு சிலர் (புதுசா வந்தவங்க) இந்த மாதிரி தூங்கரதுக்கு ஊர்லயே லாட்ஜ் ல ரூம் போட்டு தூங்கலாம்னு அட்வைஸ் பன்னுவாங்க, பெட்ரோல் காசாவது மின் ஜும்னு சொல்லுவாங்க.இது கிருக்குதனம்மா இருக்குல..ஒரு வேளை இதுக்கு பேர் தான் வியெர்டா?
இன்னும் நிறைய இருக்கு..கன்னு சுத்துது/தூக்கம் வருது ஓஓஓஓஒ..கொசுவத்தி முடிஞ்சிடுசிபா....வர்ட்டா.............அழைப்பு விடுத்த நன்பர் சிவபாலனுக்கு நன்றி! நன்றி!! நான் அழைப்பு விடும் அளவிற்க்கு இன்னும் யாரும் பழக்கம் இல்லை..இருந்தாலும் நான் தினமும் படிக்கும் பிளாக்கர் திரு.பி.கே.பி அவர்களை அழைக்கிரேன்.
2 comments:
பீம்பாய்
உங்க கிரிகெட் அனுபவம் நல்ல நகைச்சுவை.. வாய்விட்டு சிரிக்க வைத்துவிட்டீர்கள்..
பகிர்ந்துகொண்டதற்கு நன்றி
எல்லைக்கோட்டை தொடமுடியவில்லை, அவன் மூளையில் ஒரு மின்னல், மட்டையை தூக்கிஎரிந்தான்,
உங்களை அடுத்த இந்திய அணி கோச்சாக்கலாம்
//யாராவது பிடித்தால் சிகரட்டை பிடிங்கி வாயிலிருந்து உருவி கீழே போட்டு அனைத்துவிடுவேன்,//
weird . :).. இங்கே இணைக்கப்படுகிறது
Post a Comment