துதிப்போர்க்கு வல்வினைபோம்
துன்பம் நெஞ்சில் பதிப்போர்க்கு
செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டமடையும் கை கூடும்:
நிமலர் அருள் சுந்தர் சஷ்டி கவசம் தணை.
தூயோனாகிய ஈசனின் இளைய குமரன் கந்தனை போற்றும் சஷ்டி கவசந்தனைப்பாடி வழிபடுவோர்க்குத் தீவினைகளும் துன்பமும் அகலும். இதன் பெருமைகளை நெஜ்சிலிறுத்திக்கொள்வோர்க்குச் செல்வங்கள் பெருகும். இது இம்மைக்கு மேலான முத்தியை அடவதற்குரிய வழியாம். யோக நிலை கை கூடும்: இது மறுமைக்கு.
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.
நெஞ்சமே! தேவர்களின் இடர்ப்பாடுகளைத் தீர்க்கவென்று அவுணர்களுடன் சமர் புரிந்து வென்ற செந்திலாணவனின் திருவடிகளை மனதிலிறுத்ஹ்டிக் கொள்வாயாக்!
2 comments:
முழுதாக பொருள் தரப் போகிறீர்கள் என்றால் ஒரு தனிப்பதிவாகப் போட்டு இடுகைகளை அங்கு இடலாமே.
அவுணர்கள் என்போர் யார்? என்பது போன்ற விளக்கங்களும் தரலாம்.
கொத்தனாரே வருகைக்கு நன்றி. விளக்கம் தர ஆசைதான், சில பல காரணங்களால் சில காலம் ஒத்திவைத்துள்ளேன்.
Post a Comment