இந்த வாரம் வாரமலரில் (சொந்துமணி, சாரி அந்துமணிக்கு) வந்த ஒரு கிறுக்குதனமான கேள்வி, ஒரு கேணத்தனமான பதில்....மார்ச்- 18- 2007 இதழ்.
எனக்கு காலை 5.30க்கு தூக்கம் முழித்து ஒரு பெரிய சிரிப்பு சிரித்து உடன் இந்த வெட்டி பதிவு....
*பி.மாலவன், ராயபுரம் : எனக்கு திருமணம் ஆகி, 9 ஆண்டுகள் ஆகிறது! 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். என் மனைவி, அவள் தங்கை வாழாவெட்டி யாக வந்தவளை, இரண் டாந்தாரமாக திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறாள்! தங்கள் கருத்தென்ன?
? உடன்பிறந்த சகோதரி யாக இருந்தாலும், தன் படுக் கையை பகிர்ந்து கொள்ள எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள்... இருந்தாலும், உங்கள் மனைவி தன் தங்கை மீது உள்ள பாசத்தால், இம் முடிவுக்கு வந்துள்ளதாகத் தோன்றுகிறது. நீதி நேர்மையான ஆசாமியாக இருந்தால், "சின்சியராக' திருமணமாகாத நல்ல குணமுடைய இன்னொரு இளைஞரை தேடி, மச்சினிச்சிக்கு மணமுடித்து வையும்; அதற்கு முன், சட்டப்படி முதல் கணவனிடமிருந்து மணவிலக்கு பெற உதவி செய்யும்! சரியான மாப்பிள்ளை கிடைக்கவில்லை எனில், உமது மனைவியின் யோசனையை, "கன்சிடர்' செய்யுங்கள். ஹி.ஹி..
No comments:
Post a Comment