16 Mar 2007

இவங்க பொய் சொன்னாங்க-ளா, இல்லை இவங்க ஜாதகம் தப்பா சொன்னாங்களா?

இவங்க பொய் சொன்னாங்க-ளா, இல்லை இவங்க ஜாதகம் தப்பா சொன்னாங்களா?

"உலகச் சந்தையில் அதிகமாய் போனால் 5 கம்யூட்டர்களை விற்கலாம்"
IBM-ன் சேர்மேன் தாமஸ் வாட்சன் 1943-ல்.


"640K யாருக்கும் போதுமானது"
1981-ல் பில்கேட்ஸ்


"பார்க்கப்போனால் எல்லா கணிணியிலும் மனிதன் தான் இன்னும் ஓர் அசாத்திய கணிணி"
ஜான் எப் கென்னடி


"எதற்காக தனி ஒருவருக்கு அவர் வீட்டில் கணிணி தேவைப்படும் என புரியவில்லை"
1977-ல் Digital Equipment Corp தலைவர் கென்னெத் எச் ஆல்சன்


"எதிற்கால கணிணிகளின் எடையானது குறைந்தது ஒன்றரை டன்னாவது இருக்கும்"
1949 -ல் Popular Mechanics-ன் கணிப்பு
"

உண்மை மனிதர் எவரும் பேக்அப் செய்யமாட்டார்.ஒரு பொது ftp server-யில் அப்லோட் செய்து வைப்பர்.மொத்த உலகமும் அதை இறக்கம் செய்து வைத்துக் கொள்ளும்"
லினக்ஸ் புகழ் லினஸ் டோர்வால்ட்ஸ்


"இந்த துறையில் மட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை.அந்த கால கடிகாரம் வேகத்தில் தான் இந்த கால கடிகாரங்களும் ஓடுகின்றன"
போர்டு



"பாதுகாக்கப்பட்ட கணிணி என்றால் அதில் மின்சாரம் செருகப்பட்டிருக்க கூடாது,பத்திரமாக பூட்டு வைத்து பூட்டப்பட்டிருக்க வேண்டும்,20 அடி ஆழத்தில் ரகசிய இடம் ஒன்றில் புதைத்து வைக்கப் பட்டிருக்க வேண்டும்.ஆனாலும் அது பாதுகாக்கப்பட்ட கணிணியா? தெரியாது."
-Dennis Hughes, Federal Bureau of Investigation
இது தான் பெரிய ஜோக்குபா...

"விலை மலிவான,150 பவுண்ட்டே எடை கொண்ட, எல்லா பயன்பாட்டுக்கும் உதவும், நுட்ப விஷயங்கள் ஏதுமின்றி எளிதில் யாராலும் தயாரிக்க படக் கூடிய ஒரே கணிணி - மனிதன்"
-1965-ல் NASA


"கணிணிதுறை வளர்ந்த அதே வளர்ச்சி வீதத்தில் ஆட்டோமொபைல் துறையும் வளர்ந்திருந்தால் இன்றைக்கு ரோல்ஸ்ராய்ஸ் காரின் விலை $100 ஆகவும்,காலன் பெட்ரோலுக்கு ஒரு மில்லியன் மைல்கள் ஓடக்கூடியதாகவும்,வருடம் தோறும் நொறுங்கி,உள்ளோர் அனைவரையும் கொல்வதாயும் இருந்திருக்கும்"
- ("Robert X. Cringely", Computerworld)

No comments: