5 Mar 2007

சிக்கன் ரெசிப்பி

வலைப்பதிவாளர் திரு.கார்த்திக் சாரயம் காய்சுவது எப்படினு சொல்லி இருக்கார், அதுக்கு சைடு டிஷ் (left and right) வேண்டாமா? அதுக்கு தான் இந்த சிக்கன் ரெசிப்பி. பார்க்க இங்கு சொடுக்கவும். http://mkarthik.blogspot.com/2007/02/blog-post_18.html

ஈரோட்டில் இருந்து 7 கி.மி தொலைவில் உள்ளது பள்ளிபாளையம் அந்த ஊர் பெயரில் உள்ள சிக்கன். இந்த ஊர் ஈரோடு pincode கொண்டது, ஆனால் நாமக்கல் மாவட்டதை சேர்ந்தது. காவிரி ஆறு 2 மாவட்டதை பிரிக்கிறது.

பள்ளிபாளையம் சிக்கன்


பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு
ஆயத்த நேரம் :20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 30 நிமிடங்கள்



தேவையானப் பொருட்கள்

சிக்கன் - 1/2 கிலோ,
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ,
காய்ந்த மிளகாய் - 12,
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 10,
துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்,
எண்ணெய் - 4 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை

சிக்கனை எலும்பு இல்லாமல் கொட்டைப்பாக்கு அளவிற்கு சிறு சிறு துண்டுகளாக வெட்டி, கழுவி, தண்ணீர் வடித்து வைக்கவும்.

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

காய்ந்த மிளகாயை சிறு சிறு துண்டுகளாக கிள்ளி விதையை தட்டி எடுத்து விட்டு, மிளகாயை மட்டும் தனியே வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன், கிள்ளி வைத்த மிளகாயை போடவும்.

மிளகாய் சிவந்தவுடன், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கிய பின், கழுவி வைத்த சிக்கனை சேர்க்கவும்.

1 நிமிடம் வதக்கிய பின், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, 5 நிமிடம் வதக்கவும். 2 கை தண்ணீர் தெளித்து, மூடி வைக்கவும்.

தண்ணீர் வற்றி, சிக்கன் வெந்தவுடன், துருவிய தேங்காய் சேர்த்து, கிளறி இறக்கவும்.

சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கணா......


1 comment:

Anonymous said...

சரி சாரயம் + சிக்கன் வாங்க யாரு காசு தருவாங்க?