21-Sep-2007

உழவர் சந்தை- Farmers Market.சன்ரைஸ் புலவாட், சன்ரைஸ் மாலில் உள்ள சியர்ஸ்
( Sunrice Blvd, Sunrice Mall, Sears ) கடையின் பார்கிங் லாட்டில் ஒவ்வொரு சனிக்கிழமை காலை 7 மணி முதல் மதியம் 12 வரை உழவர் சந்தை இருக்கும். நிறைய உழவர் சந்தைகள் இருக்கிறதாம், 65 th street, புளோரின் ( Florin) ரோடு மற்றும் பல இடங்களில் உள்ளதாம்.

ஒருசனிக்கிழமை காலையில் நானும் நன்பரும் சென்றுவந்தோம், கடைகள் டென்டு போட்டு தான் வைத்துஇருக்கிரார்கள். அனைவரும் விவசாயிகள், மற்றும் அவர்கள் குடும்பத்தார்கள் தான். அதிசியமாக பார்ம்மில் வேலை செய்யும் சில ஸ்பானிஷ் வேலையாட்களை இருந்தார்கள்.

விவசாயிகளிடம் பேசியபொழுது நம்நாட்டு விவசாயிகளை போலவே புலம்பல்தான். ( மழை இல்லையாம், இந்த வருடம் ( Drout) டிரவுட்-ம், வேலைக்கு ஆட்கள் பற்றாகுறை, உற்பத்தி செலவு அதிகம், ) இதையெலாம் மீரி வருட மொத்த வருமானமே 70, 80-k தானாம்.
(அடப்பாவிகளா copy & Paste செய்ரவங்களுக்கு இதைவிட ஜாஸ்தியா கிடைக்குதே)
அது சரி இவங்களுக்குலாம் டேக்ஸ் கிடையாது. Copy & Paste செய்ரவங்க நிறைய டேகஸ் கட்டுராங்க.
( அப்பாடா யாரும் திட்டமாட்டிங்க தானே).
இவர்களின் கல்வி அறிவு பற்றி பின்னாளில் எழுதலாம் என்று இருக்கிறேன், இது சம்பந்தமாக சிலரிடம் பேசிகொன்டு இருக்கிரேன்.

கேரட், முள்ளங்கி, வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், ஆரஞ்சு, ஆப்பிள், தேன், சீஸ், தர்பூஸ், சலரி, லீக்ஸ், காளான் கீரைககளனைத்தும் கிடைக்கிறது. விலையும் சரியான சீப்புதான்....நன்பரின் குடும்பம் பெரியது என்பதால் நிறய அள்ளி போட்டுகொண்டு வந்தோம்.

எல்லாம் வாங்கிகொண்டு வந்து கணக்கிட்டு பார்த்தால் மொத்தமே 25 டாலர் தான் ஆகியிருந்தது, இதேயே சேப் வே ( SAFEWAY)- ராலி (RALE) யில் வாங்கியிருந்தால் 80- 100 டாலர் ஆகியிருக்கும் என்று கூறினார்.என்ன ஒரே பிரச்சனையென்றால் இவைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும், ( நம்ப ஊர் மாதிரி) Super stores- ல் வாங்கினால் கழுவவேன்டியதில்லை. நன்பரின் வீட்டில் பெற்றோர் இருப்பதால் அவர்களுக்கு இது எல்லாம் ஒரு விஷயமே இல்லை.
அப்படியே பால்ஸம், ஈஸ்ட் பிட்வில் ரோடில் ( Folsom, E.Bidwell) உள்ள கடைக்கு சென்று சிக்கன் வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். இங்கு சற்றே விலை அதிகம் ( பவுன்டுக்கு 10 சென்டு) என்றாலும் நம் ஊர் கடைகளைபோல் தோல் எடுத்து சிறியதாக கட் செய்து கொடுக்கிறார்கள். Safeway- Costco- வில் வாங்கினால், நாம் தான் கசாப்பு கடைகாரர் வேலை செய்யவேண்டும், (பின்னர் அந்த இடத்தை சுத்தம் செய்ய ஒரு அரைமனி நேரம் செலவிட வேன்டும்).
வாங்கிவந்த சிக்கனை பார்( என்னை பார்) (படுத்து) கியு (கில்பன்னி சாப்பிடு) BAR B Q செய்து சாப்பிட்ட அனுபவம் பின்னொருநாளில் படத்துடன் போடலாம் என்று இருக்கிறேன், வேன்டாம்னா பின்னூட்டத்தில் சொல்லிடுங்கனா.....( சேம்பிள் சிக்கன் பாருங்க...)19-Sep-2007

ஆப்பிள் பிக்கிங்- APPLE PICKING
நன்பரின் அழைப்பிற்கு மதிப்பளித்து, கலிபோர்னிய தலைநகர் சாக்ரமென்டோ விலிர்ந்து 50 மைல் தொலைவில் இருக்கும் ஆப்பிள் ஹில் என்னும் இடத்திற்கு சென்றவாரம் போயிருந்தோம். மிதமான தட்பவெப்பநிலை பயனத்திற்கு மேலும் வலூவூட்டியது.

சாக்ரமென்டோவிலிருந்து ஹைவே- 50 (East) யில் ஒரு 40 மைல் பயனித்து எக்ஸிட்- 54 எடுத்து ஒரு 3 மைல் பயனித்தால் ஆப்பிள் ஹில் வரவேற்ப்பு அலுவலகம் நம்மை வாங்க..வாங்க என்று வரவேற்கிறார்கள்.

அங்கு சூடாக ஒர் வரகாபி குடித்துவிட்டு மேலும் விவரங்களை பெற்றுகொண்டு அந்த ஏரியா மேப் எடுத்துகொன்டு பயணித்தோம்.

இங்கு நிறைய ஆப்பிள் தோட்டங்கள் உள்ளது, எங்கு வேண்டுமானாலும் நமக்கு வேண்டிய அளவு பறித்துகொள்ளலாம், பின்னர் அதை எடை போட்டு பணம் கொடுக்கவேண்டும்.

நாங்கள் தேர்வு செய்த இடம் டென்வர் டேஸ் ( Denver Day's) என்னும் ஆப்பிள் தோட்டம்
சிறிய தோட்டம் தான் என்றாலும், நிறைய மரங்கள் இருந்தன. ஆப்பிளில் நிரைய வெரைட்டிகள் உள்ளது. பிஜி, கேலா, ரெட் மாக்கின்டோஷ், கிரின் ஆப்பிள், மற்றும் பல....

மரத்திலிருந்து பறிக்கலாம், கடிக்கலாம், பிடித்திருந்தால் மேலும் பறித்துகொள்ளாலாம், அல்லது கீழே போட்டுவிடலாம்.ஒரு 100 ஆப்பிளாவது சுவைத்து இருப்பேன், சுவை பிடித்திருந்த மரத்தில் இருந்த ஆப்பிளை பறித்து எங்களின் பக்கடில் (Bucket) ஒன்றிரன்டு போட்டுகொண்டோம்.இப்படியே அனைத்து மரங்களிளும் சுவைத்து, பறித்து சோர்வடைந்து எடை போட வந்தோம்.

ஆஹா...ஆஹா....அங்கு ஆப்பிளிள் தயாரான உணவு பொருட்களை விதவிதமாக சுவைக்க கொடுத்தார்கள், விற்பனைக்கும் உண்டு ஆனால் நம்க்குலாம் அது ஒத்து வராது.

ஆப்பிள் தோல் உரிக்க ஒரு மெசின், ஆப்பிளை கட்பன்ன ஒர் கருவி, ஆப்பிளில் தயாரான ஜாம், ஆப்பிள் பட்டர், ஆப்பிள் வைன்,ஆப்பிள் வினிகர், மற்றும் ஆப்பிளின் மகத்துவங்கள் நிரைந்த அட்டவனை இருந்தது.

அனைத்தையும் பார்வையிட்டுகொண்டு பறித்த ஆப்பிளை எடை போட்டால் 40 பவுன்டு என்று வந்தது, ஒரு பவுன்டு 75 சென்டு என்று கணக்கிட்டு 30 டாலர் கொடுத்து விட்டு வெளியே வந்து அங்கிருந்த பிக்னிக் டேபிளில் கட்டுசாதம் சாப்பிட்டோம்.(அதுதானே புளி சாதம் கட்டிடு போலனா அது ஒரு டூரே கிடையாதுங்க).

கடிகாரத்தை பார்த்தால் மணி 2 தான் ஆகிருந்தது இன்னும் சில நேரம் செலவழிக்கலாமே என்று மேப் எடுத்து கண்களை மேய விட்டோம், போ விஸ்டா ஆர்ச்சேடு (Bow vista Orchard)என்னும் இடத்தில் ஆப்பிளை தவிற பேரிக்காய், மற்றும் பல வகையான் பழங்கள் கிடைப்பதாக மேப் தெரிவித்தது சரியென்று அங்கு சென்றால், அது ஒர் பஜார் போல் இருந்தது, ( நம் ஊரில் மலை வாசஸ்தலம் டூர் சென்றால் அங்குள்ள கடைகளைப்போல்)
அங்கு சென்றபிறகு தான் தெரிந்தது, நாங்கள் பறித்த ஆப்பிளுக்கு இங்கு விலை 65 சென்டு தான். விதியை நொந்துகொண்டு மேலும் சிலபழங்களை வாங்கினோம். இருந்தாலும் ஒரு சந்தோசம் நாங்கள் பறித்தது பிரஷ் ஆக இருக்கும் அதனால் 10 சென்டு அதிகம் கொடுத்தால் தப்பில்லை என்று மனதை தேற்றிகொண்டோம்.(நொன்டி சாக்கு?)இப்படிதான் எனது ஆப்பிள் நிறைவடைந்தது.

இங்குள்ள படங்கள் அங்கு எடுக்கபட்டது, படத்தில் உள்ள விலங்கு ( பல்லை நீட்டிகொண்டிருக்கும் விலங்கு என்ன வகை விலங்கு? யாராவது சொல்லுங்களேன்)

18-Sep-2007

ரஜினி அடுத்தபடம் என்னா?

ஒரு கற்பனை உரையாடல்
இயக்குநர்: சார் வணக்கம். ரஜினிசாருக்கு ஏத்த ஒரு அருமையான கதையோட வந்திருக்கேன். ஏ,பி,சி, எல்லா சென்டர்லயும் பின்னி எடுத்துரும்.

தயாரிப்பாளர்: இப்பல்லாம் அவருக்கு வேர்ல்ட் மார்க்கெட் சார். கதையைவிட இன்னொரு விசயந்தான் ரொம்ப முக்கியம். சந்திரமுகி, சிவாஜியில வந்த மாதிரி அவர் இளமையா இருக்கனும் பாபா மாதிரி ஆயிடக்கூடாது.

இயக்குநர்: அடடே நீங்க வேற. நம்ம கதையில தலைவருக்கு அதக்காட்டிலும் இளமையான வேஷம் சார். அவரு +2 ஸ்டூடண்டுன்னா பாத்துக்கங்களேன்.

தயாரிப்பாளர்: என்னது, +2 ஸ்டூடண்டா? மக்கள் நம்புவாங்களா?

இயக்குநர்: அதெல்லாம் எது சொன்னாலும் நம்புவாங்க. நீங்க ஏன் கவலைப்படுறீங்க.

தயாரிப்பாளர்: அப்ப ஸ்ரேயா +1 ஸ்டூடண்டா?

இயக்குநர்: ம்ஹும்... உண்மையான +1 மாணவிதான் கதாநாயகி. வேணுமின்னா, ஸ்ரேயாவுக்கு கதாநாயகனோட அக்கா வேஷம் கொடுத்துரலாம்.

தயாரிப்பாளர்: அய்யய்யோ, அந்தப் பொண்ணு கோவிச்சுக்கப்போகுது சார், சரி அத விடுங்க, கத என்னான்னு சொல்லுங்க.

இயக்குநர்: படத்தை ஓப்பன் பண்னுனா, ஒரு பெரிய பாலைவனம், அதுல 20,000 ஒட்டகங்கள் வரிசையாப் போகுது.

தயாரிப்பாளர்: (அதிர்ச்சியுடன்) இருபதாயிரமா... நான் ஒரு வழி ஆயிடுவேன் போலருக்கே.

இயக்குநர்: சிவாஜியைத் தாண்டனும்னா சும்மாவா? ஒரு பிரம்மாண்டம் இருந்தாத்தானே மக்கள் இரசிப்பாங்க, பட்ஜெட் நூறு கோடின்னு வச்சிக்குங்க. அப்புறம் உங்களுக்கு மலைப்பே வராது.

தயாரிப்பாளர்: ஆனா எனக்கு இப்ப மூச்சே வராது போலிருக்கே.

இயக்குநர்: ஒண்ணும் பயப்படாதீங்க, 3300 பிரிண்ட் போட்டு மூணே நாள்ல பணத்த அள்ளிடலாம். முதல்ல கதையைக் கேளுங்க.

தயாரிப்பாளர்: முழுக் கதையும் அப்புறம் கேட்டுக்கிறேன். முதல்ல ஒரு ஒன்லைன் சொல்லிருங்க.

இயக்குநர்: ஓ.கே. சார். ஈரான்மேல அமெரிக்கா படை எடுக்குது. அதக் கேள்விப்பட்டு இங்கயிருந்து ஒரு +2 ஸ்டூடண்ட் அங்கே போயி அமெரிக்காவை எப்படி எதிர்க்கிறான் அப்பிடிங்கறதுதான் கதை.

தயாரிப்பாளர்: அமெரிக்காவையா?

இயக்குநர்: ஆமா சார். அமெரிக்க இராணுவத்தை, ஒத்தை ஆளா நின்னு ரஜினி எப்பிடி சமாளிக்கிறார் அப்படிங்கறதுதான் கிளைமேக்ஸ்.

தயாரிப்பாளர்: கொஞ்சம் லாஜிக் இடிக்குதே சார்.

இயக்குநர்: ரஜினி படத்துல மக்கள் லாஜிக் கெல்லாம் பாக்கவே மாட்டாங்க. பொழுது போகணும்னுதான் படத்துக்கு வாராங்க, லாஜிக்கெல்லாம் யார் சார் பாக்குறாங்க.

தயாரிப்பாளர்: சரி படத்துல ஹைலைட்டா ஏதாவது ஒரு சீன் சொல்லுங்க.

இயக்குநர்: ஓ. யெஸ். நம்ம ஹீரோ மீனம்பாக்கத்துல இருந்து டெஹ்ரான் வரைக்கும் ஒரு விமானத்துல தொத்திக்கிட்டே போறாரு.

தயாரிப்பாளர்: ஏன் டிக்கெட் எடுத்துக்கிட்டே போகலாமே?

இயக்குநர்: போகலாம். ஆனா அதுல என்னசார் திரில் இருக்கு?, தொத்திகிட்டே போகும்போதுதான் நம்மால கிராபிக்ஸையும் பயன்படுத்தமுடியும். ஒரு ஷாட் பியுட்டியும் கிடைக்கும்.

தயாரிப்பாளர்: சரி செய்யுங்க. செலவையும் கொஞ்சம் பாத்துக்குங்க, மேல சொல்லுங்க.

இயக்குநர்: அங்க போயி எறங்கும்போது, அமெரிக்காவோட இராணுவ விமானங்கள் ஹீரோவை நோக்கி சீறிப் பாய்ஞ்சு வருது.

தயாரிப்பாளர்: அய்யய்யோ.... அடுத்து.

இயக்குநர்: ரஜினியா சார் அதெல்லாம் பாத்துப் பயப்படுவாரு?. என்ன செய்றாரு தெரியுமா? ஒரு டைவ் அடிச்சி ஓங்கி எட்டி காலால் உதைக்கிறாரு. அப்படியே விமானங்க எல்லாம் பறந்து போயி அந்தப் பக்கமா விழுகுது. எப்படி சார் இருக்கு இந்த சீன்?

தயாரிப்பாளர்: பிரமாதமா இருக்கு போங்க. நானே அசந்துட்டேன். தியேட்டர் ச்சும்மா அதிருமில்ல...

இயக்குநர்: கண்டிப்பா.

தயாரிப்பாளர்: ரொம்ப சந்தோஷம். நாளைக்கே நான் ரஜினி சார்ட்ட பேசிடுறேன். அடுத்த அமாவாசையில வேலய ஆரம்பிச்சிருலாம்.(இருவரும், கை கொடுத்து மகிழ்ச்சியோடு பிரிகின்றனர்)Thanks to : Click here

17-Sep-2007

ராம பக்தர்களே


ராம பக்தர்களே, ஆத்திகவாதிகளே, மற்றும் நியாயம் பேசும் உன்மை கனவான்களே நீங்கள் அனைவரும் சற்றே நியாயத்துடன் பேசுங்கள்/யோசியுங்கள்.


ஒரு பாலம் இத்தனை வருடம் இருக்குமா?


அரசியல்/ கட்சி/இவற்றை எல்லாம் கணக்கிடாமல் நியாயமாக பேசுங்கள்.


இந்திய பொருளாதாரம் வளர்சியடைவதற்கு உங்களுக்கு விருப்பம் இல்லையா?


சென்னை மேம்பாலம் கட்டும் பொழுது எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்திர்கள், இப்பொழுது அதன் பலனை நீங்கள் அனுபவிக்கவில்லையா?


காலத்திற்கு ஏற்றார்போல் கோவனத்திலிருந்து டிராயருக்கு, பின் ஜட்டிக்கு மாறவில்லையா அதுபோல 21-ம் நூற்றான்டிற்கு மாருங்கள்.


சற்றே யோசியுங்கள், சிந்தியுங்கள்.

நன்றி...நன்றி...நன்றி...
இது வரை நான் அதிகம் பின்னூடம் போட்டது கிடையாது, வந்த பின்னூட்டத்திற்கும் நன்றி கூறியது கிடையாது.

எனது இந்த தவறை சுட்டிகாட்டி ஒரு பின்னூடம் வந்துள்ளது.

அதாவது நான் பின்னூடம் இடவில்லையென்றாலும் பரவாயில்லை, வந்த பின்னூட்டதிற்கு நன்றிசொல்லுவது தான் ஒரு நாகரீகம் என்று.

வலைப்பதிவரின் வேன்டுகோளுக்கு இனங்க அவரின் பெயர் பப்ளிஸ் செய்யவில்லை.

எனது தவறை சுட்டிகாட்டிய அவருக்கு நன்றி, மற்றும் எனது பதிவில் பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி...நன்றி...நன்றி...

15-Sep-2007

எவன்டா அவன் கேமரா மேன்?

இன்னிக்கு பிள்ளையார்ருக்கு பிறந்தநாள். Sep-15-2007.

சரினு சன் டி.வி முன்னாடி உக்காந்தா சிங்கை யில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஓடிகொண்டு இருந்தது. அந்த கேமரா மேனுக்கு எத படம் பிடிக்கனும்னே தெரியல...ஆடும் மேடையை மிட் வியு ஷாட் -ல காமிக்காம ஆடும் நபரின் இடுப்பை மட்டும் குளோசப் பில் காட்டி வாந்தி வரவைத்துவிட்டார்.

இந்த மாதிரி மேடை நிகழ்ச்சியில் படம் பிடிப்பதற்கு அனுபவமுள்ள கேமராமேனை உபயோகப்படுத்த கூடாதா?

இதற்கு எல்லாம் பரிகாராமாக் கடைசியாக ஸோபனா, வினீத் தின் நடனத்திற்கு அருமையான் கேமரா கோனம் போட்டு அசத்திவிட்டார்கள்.

13-Sep-2007

கஸ்டம்ஸ் ரூல்ஸ்- ஒரு அனுபவம்

அமெரிக்காவில் டாக்கிங் குளோப் ( Talking Globe) சூப்பர் சீப் ஆக கிடைத்தது, சரி நண்பரின் 10 வயது மகளுக்கு கிப்ட் ஆக கொடுக்கவாங்கினேன்.

அதில் உள்ள மைக்ரோ சிப் அனைத்து தகவலையும் உடனடியாக வேன்டும் பொழுது சொல்லுகிறது.

உதாரணமாக ஒரு நாட்டின் மேல் அதனுடன் இனைக்கப்பட்டிருக்கும் பேனாவால் தொட்டால் அந்த நாட்டின் தலைநகரம், பணத்தின் பெயர், ஊர்களுக்கு இடையேயான தூரம், மற்றும் பல பொது அறிவுக்கேள்விக்கான விடைகளை சொல்லுகிறது.சரி படிக்கும் குழந்தைக்கு உபயோகமாக இருக்கும் என்று வாங்கினேன்.

சில நாட்கள் கழித்து பெடக்ஸ் (fedex) கொரியர் மூலம் 20 டாலருக்கு இந்தியாவிற்கு அனுப்ப ஒரு சான்ஸ் கிடைத்தது.சரி நாம் இந்தியா போக இன்னும் சில மாதங்கள் இருக்கிறதே என்று இந்த கொரியர் மூலம் அனுப்பினேன், அதுவும் சரியான் தேதியில் மும்பை சென்று ( Thanks to the tracking s/w which developed by a Gr8 Indian) கஸ்டம்ஸ் கிளியர்ன்ஸ்காக 9 நாட்கள் காத்து கிடந்தது. 13 வது நாள் நன்பரிடம் இருந்து ஒரு மெயில் வந்தது,

I received a letter from Mumbai Customs saying that I have a pending parcel from USA and the senders name is yours and it contains prohibted item, and need to pay the customs duty of Rs, 15,000. If you have any questions please contact the clearance agents.

சரி என்று நன்பருக்கு தொலைபேசினேன்...விவரங்கள் மற்றும் கஸ்டம்ஸ் ஆபிஸ் , ஏஜென்டு தொலைபேசி விவரங்களை வாங்கிகொன்டேன்.மும்பை ஏஜன்டுக்கு தொலைபேசினேன், அவர்கள் அளித்த பதில் சற்று வித்யாசமாக இருந்தது. அதாவது வெளிநாட்டில் இருந்து வரும் மேப் எல்லாம் தவறான இந்திய எல்லைகளை கொண்டிருக்குமாம், இந்திய அரசு கஸ்டம்ஸ் சட்டவிதிகளின் படி அனுமதிக்க முடியாதாம், சரி டூட்டி கட்டினால் அது எப்படி சரியாகும் என்று கேட்டதற்கு அதற்கு அவரால் விடை அளிக்க முடியவில்லை. மேலும் விவரங்களுக்கு கஸ்டம்ஸ் ஆபிசை தொடர்புகொள்ள சொன்னார்.

சரி என்று அங்கு தொடர்புகொண்டால் கீரல் விழுந்த ரெக்கார்டாக் அதே பதில், இந்திய அரசு நிறுவனமான மேப் அவுஸ் ஆப் இந்தியா ( Map house of
India) மேப் மட்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது மேலும் விவரங்கள் இல்லை என்று சொல்லிவிட்டார், சரி இந்த சட்டங்கள் எந்த வருடத்து சட்டம் என் வினவியபொழுது இது 1947 என்று கூறினார்கள். (அது சரி)

எனக்கு எழுந்த கேள்விகள்.

1)Indian Map house வெளிநாட்டில் ஏதும் பிரின்ட் செய்கிறதா?

2)1947 க்கு பிறகு சட்டங்கள் மாறவில்லையா? அல்லது இந்த அறிவு ஜீவிகளுக்கு update செய்துகொல்ள மனதில்லையா?

3)தடைசெய்து உள்ள பொருளை சுங்கவரி கட்டினால் இந்திய எல்லைக்குள் அனுமதிப்பார்களாம், இது எப்படி என்று புரியவில்லை.

பின் குறிப்பு: இந்தியாவில் தடை செய்யப்பட்ட பொருட்கள் யாருக்காவது வேண்டுமானால் பின்னூட்டம் இடுங்கள், நீங்கள் சுங்கவரி கட்டுவதனால் நான் வாங்கிவர தயார். ( அசல் விலை + சுங்கவரி).

பின் பின் பின் பின் பின் குறிப்பு: சைலன்சர் வைத்த துப்பாக்கி நிறைய சீப்பாக கிடைக்கிறது, பிளாக்கரில் சன்டை போடுவர்களுக்கு உபயோகமா இருக்குமா?