18 Sept 2007

ரஜினி அடுத்தபடம் என்னா?

ஒரு கற்பனை உரையாடல்
இயக்குநர்: சார் வணக்கம். ரஜினிசாருக்கு ஏத்த ஒரு அருமையான கதையோட வந்திருக்கேன். ஏ,பி,சி, எல்லா சென்டர்லயும் பின்னி எடுத்துரும்.

தயாரிப்பாளர்: இப்பல்லாம் அவருக்கு வேர்ல்ட் மார்க்கெட் சார். கதையைவிட இன்னொரு விசயந்தான் ரொம்ப முக்கியம். சந்திரமுகி, சிவாஜியில வந்த மாதிரி அவர் இளமையா இருக்கனும் பாபா மாதிரி ஆயிடக்கூடாது.

இயக்குநர்: அடடே நீங்க வேற. நம்ம கதையில தலைவருக்கு அதக்காட்டிலும் இளமையான வேஷம் சார். அவரு +2 ஸ்டூடண்டுன்னா பாத்துக்கங்களேன்.

தயாரிப்பாளர்: என்னது, +2 ஸ்டூடண்டா? மக்கள் நம்புவாங்களா?

இயக்குநர்: அதெல்லாம் எது சொன்னாலும் நம்புவாங்க. நீங்க ஏன் கவலைப்படுறீங்க.

தயாரிப்பாளர்: அப்ப ஸ்ரேயா +1 ஸ்டூடண்டா?

இயக்குநர்: ம்ஹும்... உண்மையான +1 மாணவிதான் கதாநாயகி. வேணுமின்னா, ஸ்ரேயாவுக்கு கதாநாயகனோட அக்கா வேஷம் கொடுத்துரலாம்.

தயாரிப்பாளர்: அய்யய்யோ, அந்தப் பொண்ணு கோவிச்சுக்கப்போகுது சார், சரி அத விடுங்க, கத என்னான்னு சொல்லுங்க.

இயக்குநர்: படத்தை ஓப்பன் பண்னுனா, ஒரு பெரிய பாலைவனம், அதுல 20,000 ஒட்டகங்கள் வரிசையாப் போகுது.

தயாரிப்பாளர்: (அதிர்ச்சியுடன்) இருபதாயிரமா... நான் ஒரு வழி ஆயிடுவேன் போலருக்கே.

இயக்குநர்: சிவாஜியைத் தாண்டனும்னா சும்மாவா? ஒரு பிரம்மாண்டம் இருந்தாத்தானே மக்கள் இரசிப்பாங்க, பட்ஜெட் நூறு கோடின்னு வச்சிக்குங்க. அப்புறம் உங்களுக்கு மலைப்பே வராது.

தயாரிப்பாளர்: ஆனா எனக்கு இப்ப மூச்சே வராது போலிருக்கே.

இயக்குநர்: ஒண்ணும் பயப்படாதீங்க, 3300 பிரிண்ட் போட்டு மூணே நாள்ல பணத்த அள்ளிடலாம். முதல்ல கதையைக் கேளுங்க.

தயாரிப்பாளர்: முழுக் கதையும் அப்புறம் கேட்டுக்கிறேன். முதல்ல ஒரு ஒன்லைன் சொல்லிருங்க.

இயக்குநர்: ஓ.கே. சார். ஈரான்மேல அமெரிக்கா படை எடுக்குது. அதக் கேள்விப்பட்டு இங்கயிருந்து ஒரு +2 ஸ்டூடண்ட் அங்கே போயி அமெரிக்காவை எப்படி எதிர்க்கிறான் அப்பிடிங்கறதுதான் கதை.

தயாரிப்பாளர்: அமெரிக்காவையா?

இயக்குநர்: ஆமா சார். அமெரிக்க இராணுவத்தை, ஒத்தை ஆளா நின்னு ரஜினி எப்பிடி சமாளிக்கிறார் அப்படிங்கறதுதான் கிளைமேக்ஸ்.

தயாரிப்பாளர்: கொஞ்சம் லாஜிக் இடிக்குதே சார்.

இயக்குநர்: ரஜினி படத்துல மக்கள் லாஜிக் கெல்லாம் பாக்கவே மாட்டாங்க. பொழுது போகணும்னுதான் படத்துக்கு வாராங்க, லாஜிக்கெல்லாம் யார் சார் பாக்குறாங்க.

தயாரிப்பாளர்: சரி படத்துல ஹைலைட்டா ஏதாவது ஒரு சீன் சொல்லுங்க.

இயக்குநர்: ஓ. யெஸ். நம்ம ஹீரோ மீனம்பாக்கத்துல இருந்து டெஹ்ரான் வரைக்கும் ஒரு விமானத்துல தொத்திக்கிட்டே போறாரு.

தயாரிப்பாளர்: ஏன் டிக்கெட் எடுத்துக்கிட்டே போகலாமே?

இயக்குநர்: போகலாம். ஆனா அதுல என்னசார் திரில் இருக்கு?, தொத்திகிட்டே போகும்போதுதான் நம்மால கிராபிக்ஸையும் பயன்படுத்தமுடியும். ஒரு ஷாட் பியுட்டியும் கிடைக்கும்.

தயாரிப்பாளர்: சரி செய்யுங்க. செலவையும் கொஞ்சம் பாத்துக்குங்க, மேல சொல்லுங்க.

இயக்குநர்: அங்க போயி எறங்கும்போது, அமெரிக்காவோட இராணுவ விமானங்கள் ஹீரோவை நோக்கி சீறிப் பாய்ஞ்சு வருது.

தயாரிப்பாளர்: அய்யய்யோ.... அடுத்து.

இயக்குநர்: ரஜினியா சார் அதெல்லாம் பாத்துப் பயப்படுவாரு?. என்ன செய்றாரு தெரியுமா? ஒரு டைவ் அடிச்சி ஓங்கி எட்டி காலால் உதைக்கிறாரு. அப்படியே விமானங்க எல்லாம் பறந்து போயி அந்தப் பக்கமா விழுகுது. எப்படி சார் இருக்கு இந்த சீன்?

தயாரிப்பாளர்: பிரமாதமா இருக்கு போங்க. நானே அசந்துட்டேன். தியேட்டர் ச்சும்மா அதிருமில்ல...

இயக்குநர்: கண்டிப்பா.

தயாரிப்பாளர்: ரொம்ப சந்தோஷம். நாளைக்கே நான் ரஜினி சார்ட்ட பேசிடுறேன். அடுத்த அமாவாசையில வேலய ஆரம்பிச்சிருலாம்.(இருவரும், கை கொடுத்து மகிழ்ச்சியோடு பிரிகின்றனர்)



Thanks to : Click here

3 comments:

Unknown said...

யோவ்,பீம்பாய் என்னாச்சு நல்லாத்தானே இருந்தே. அதுக்குத்தான் ராமரப் பாத்தி எல்லாம் பேசக்கூடாது. உங்க மாமா சு.சுவாமிகிட்ட சொல்லி ஏதாச்சியும் பண்ணு ராசா.

Anonymous said...

are you very proud of your posting?
i am sure your mum would be crying for bearing you.....

மங்களூர் சிவா said...

//
இயக்குநர்: ஓ. யெஸ். நம்ம ஹீரோ மீனம்பாக்கத்துல இருந்து டெஹ்ரான் வரைக்கும் ஒரு விமானத்துல தொத்திக்கிட்டே போறாரு.

தயாரிப்பாளர்: ஏன் டிக்கெட் எடுத்துக்கிட்டே போகலாமே?

இயக்குநர்: போகலாம். ஆனா அதுல என்னசார் திரில் இருக்கு?, தொத்திகிட்டே போகும்போதுதான் நம்மால கிராபிக்ஸையும் பயன்படுத்தமுடியும். ஒரு ஷாட் பியுட்டியும் கிடைக்கும்.
//
வாவ்

நைஸ் திங்கிங்