3 Feb 2008

Computer's

இன்டர்நெட் பயன்படுத்தும்போது பல டெம்பரரி பைல்கள் உருவாகி டெம்பரரி போல்டரில் தேங்குகிறது. இதனை அவ்வப்போது அழிக்க என்ன கட்டளை கொடுக்க வேண்டும்?

இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools> Internet options> Advanced என்றபடி செல்லவும். கிடைக்கும் விண்டோவில் கீழாகப் பார்த்துக் கொண்டே சென்றால் Under securites-Empty temporary internet files when browser is closed என்ற வரி தென்படும். அதன் அருகே உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்திவிட்டு ஓகே அழுத்தி வெளியேறவும். இனி உங்கள் இணைய உலா முடிந்தவுடன் அங்கு பதியப்பட்ட அனைத்து டெம்பரரி பைல்களும் அழிந்துவிடும்.


இன்டர்நெட் பிரவுசிங்கின் போது பயன்படுத்தும் முகவரிக்கான எண்களில் அமைந்த முகவரியினை எந்த தளம் நமக்குக் காட்டும். பல தளங்களில் தேடியும் அதற்கான சாப்ட்வேர் கிடைக்கவில்லை. தயவு செய்து கன்வெர்ஷன் செய்யக் கூடிய வெப்சைட் அட்ரஸ் தரவும்.<

இதற்கு இணையத்தை எல்லாம் தேடாதீர்கள். உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பி எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். இன்டர்நெட் இணைப்பை ஏற்படுத்தி இயங்க வைத்திடுங்கள். பின் கம்ப்யூட்டரில் startபட்டன் அழுத்தி கிடைக்கும் மெனுவில் Run பிரிவில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் கீதண விண்டோவில் cmd என டைப் செய்திடவும். இனி உங்களுக்கு டாஸ் பிராம்ப்ட் கருப்பு கட்டத்தில் கிடைக்கும். அதில் tracert என டைப் செய்து (trace route என்பதின் சுருக்கம்) இடம் விடாமல் நீங்கள் எண் காணவிரும்பும் முகவரியினைத் தவறில்லாமல் டைப் செய்து என்டர் அழுத்தவும். உடனே முதல் வரியிலேயே அடைப்புக் குறிக்குள் எண் கிடைக்கும். ஆனால் அந்த சர்வரை அடைய என்ன சர்வர்கள் வழியாக ரூட் செல்கிறது என்று வேகமாகக் காட்டப்பட்டு இறுதியிலும் அந்த இணைய தளத்திற்கான முகவரி எண்களில் கிடைக்கும்.

டாஸ்க் பாரில் உங்கள் பெயர்.

உங்கள் பெயர் டாஸ்க் பாரில் கிடைக்கக் கீழ்க்கண்டவாறு செயல்படவும். start பட்டன் அழுத்தி கண்ட்ரோல் பேனல் செல்லவும். பின் இதில் Regional and Language Options என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இதில் Regional Languageஎன்ற பிரிவில் advanced என்ற கட்டத்தில் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் விண்டோவில் time என்பதைத் தேர்ந்தெடுத்து என்டர் தட்டவும். இப்போது கம்ப்யூட்டரில் நேரம் செட் செய்திடும் விண்டோ கிடைக்கும். இதில் காணப்படும் இரண்டாவது பிரிவில் am சிம்பல் மற்றும் pm சிம்பல் என இரு வரிகள் இருக்கும். இதன் உள்ளே இருக்கும் தகவல்களைக் காலி செய்து உங்களுக்குப் பிடித்தமான பெயரை டைப் செய்திடவும் .இரண்டிலும் ஒரு பெயர் இருக்கலாம். அல்லது ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பெயர் இருக்கலாம். பின் மேலாக உள்ள டைம் பார்மட் என்ற பகுதிக்குச் செல்லவும். h.mm.ss.tt அல்லது hh.mm.ss.tt. என்பதனைத் தேர்வு செய்து apply கிளிக் செய்து ஓகே கொடுத்து வெளியேறவும். இனி டாஸ்க் பாரில் உங்கள் பெயர், மணி காட்டும் எண்களை அடுத்து இருக்கும். இரண்டு பெயர் கொடுத்திருந்தால் ஒரு பெயர் காலையிலும் இன்னொன்று மற்ற நேரங்களிலும் தெரியும்.

ஒரு குறிப்பிட்ட இமெயிலை பெறுபவர் பெற்றுவிட்டார் என ரெசிப்ட் பெறுவது எப்படி? எனக்கு வரும் சில மெயில்கள் அவ்வாறு கேட்கின்றன.

கேட்கும் டயலாக் பாக்ஸில் nevr என்பதைக் கிளிக் செய்துவிடலாம். நீங்கள் உங்கள் மெயிலுக்கு ரெசீப்ட் பெறக் கீழ்க்கண்டவாறு செட் செய்திடவும். அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் click mail என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது புதிய மெயில் அமைப்பதற்கான விண்டோ கிடைக்கும். இதில் மெசேஜ் அமைத்த பின்னரோ அல்லது அதற்கு முன்னரோ tools என்பதனைக் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் request read receipt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இது நீங்கள் அனுப்பும் மெயிலுக்கு மட்டும் படித்ததற்கான / பெற்றதற்கான ரசீதினைக் கேட்டு அனுப்பும்.

என் அலுவலகக் கம்ப்யூட்டரில் என்னுடைய சி.டி.யில் காப்பி செய்த பைல்களைக் கையாண்டு வருகிறேன். அலுவலகக் கம்ப்யூட்டரில் எதனையும் பதிவதில்லை. ஆனால் MY RECENT DOCUMENTS என்பதில் அவை தெரிகின்றன. இவற்றை எப்படி அழிப்பது?

கீழாக உள்ள டாஸ்க் பார் செல்லுங்கள். அங்கு எதுவும் இல்லாத இடத்தில் மவுஸ் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் புராபர்ட்டீஸ் தேர்ந்தெடுங்கள். "Taskbar and Start Menu Properties" என்னும் விண்டோ கிடைக்கும். இதில் start menu என்னும் டேபில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் customize என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் Customize Start Menu என்ற விண்டோ கிடைக்கும். இதில் advanced என்ற பட்டனில் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் கீழாக my recent documentsஎன்ற பிரிவு இருக்கும். அதில் List my most recently opened documents என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருக்கும். அதன் அருகே clear listஎன்று உள்ள பெட்டியில் கிளிக் செய்திடவும். Recent Documents என்ற பிரிவில் உள்ள பைல்கள் அனைத்தும் காலி செய்யப்பட்டிருக்கும்

தேதி குறித்து பைல் அழிக்க

இன்டர்நெட்டில் தளங்களைப் பார்வையிடுகையில் மேற்கொள்ளும் செயல்களாலும், ஸிப் செய்யப்பட்ட பைல்களை விரிக்கும் போதும் எனப் பல நேரங்களில் விண்டோஸ் இயக்க பைல்கள் உள்ள டிரைவில் காணப்படும் டெம்பரரி போல்டரில் பல பைல்கள் உருவாக்கப்பட்டுத் தேங்கும். இது ஹார்ட் டிஸ்க் இடத்தைத் தேவையில்லாமல் அடைத்துக் கொண்டிருக்கும். இதனை அவ்வப்போது காலி செய்வதே நல்லது. மொத்தமாகக் காலி செய்வதால் எந்தப் பிரச்னையும் வராது. இருந்தாலும் ஒரு சிலர் குறிப்பிட்ட நாளுக்கு முன் ஏற்பட்ட பைல்களை மட்டுமே காலி செய்திட விரும்புவார்கள். அண்மையில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக பைல்கள் ஒரு வேளை தேவைப்படலாம் என்பதே அவர்கள் அச்சம். இவ்வாறு அழிப்பதற்கு தூ my computer ஐகானில் இருமுறை கிளிக் செய்திடுங்கள். நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பியில் இயங்குபவராக இருந்தால் ஸ்டார் கிளிக் செய்து பின் தூ my computer- ல் கிளிக் செய்திடலாம். பின்னர் சி டிரைவில் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் விண்டோஸ் போல்டரில் கிளிக் செய்திடவும். அதன்பின் கிடைக்கும் பட்டியலில் temp என்ற போல்டரைக் கிளிக் செய்து திறக்கவும். இதில் modified அல்லது date modified என்ற பிரிவில் கிளிக் செய்தால் அதில் உள்ள பைல்கள் தேதி வாரியாக அடுக்கப்படும். இப்போது எந்த தேதிக்கு முன்னர் உள்ள பைல்களை அழிக்க விரும்புகிறீர்களோ அந்த பைல்களைத் தேர்ந்தெடுத்து ஷிப்ட் டெலீட் கொடுத்து அழித்துவிடலாம். இதனால் பைல்கள் ரீசைக்கிள் பின்னுக்குச் சென்று அங்கு இடத்தைப் பிடிக்காமல் முற்றிலுமாகக் காலி செய்யப்படும்.