15-Aug-2009

2 ம் பாக‌ம்‍‍‍‍‍‍‍ ‍‍‍___ காத‌லுக்கு ம‌ரியாதை செய்த‌ நாடோடி...உண்மை ச‌ம்ப‌வ‌ம்

ம‌திய‌ம் எப்ப‌ வ‌ரும் என்று ந‌ம‌து ஹீரோவும், மாப்பிள்ளையும் யுக‌க‌ன‌க்கில் பொறுத்து இருந்தார்க‌ள். அந்த‌ ம‌திய‌மும் வ‌ந்த‌து அழைப்பும் வ‌ந்த‌து...ந்‌ம‌து ஹீரோ மாப்பிள்ளையின் த‌ந்தையை அழைத்து கொண்டு பெண்ணின் மாமா வீட்டிற்கு போய் சேர்ந்தார். ந‌ம்ப‌ ஹீரோவிற்கு அவ‌ர்க‌ள் அடித்து விட்டால் திருப்பி அடிக்காம‌ல் இருக்க‌ மாப்பிள்ளை ச‌த்ய‌ம் வாங்கிகொண்டார்.

ஹீரோவும் மாப்பிள்ளையின் த‌ந்தையும் போன‌போது அங்கு ஒரு குடும்ப‌ ப‌ட்டாள‌மே இருந்த‌து அந்த‌ ப‌ட்டாள‌த்தில் ந‌ம‌து ம‌ன‌ப்பெண்ணும் இருந்தார், அவ‌ரை பார்த்த‌ பிற‌குதான் ந‌ம‌து ஹீரோவொற்கு ச‌ற்று தைரிய‌ம்/தெம்பு வ‌ந்த‌து.

ஹீரோவை பார்த்த‌வுட‌ன் பெண்ணின் த‌ந்தைக்கு நீ அவ‌ரின் ம‌க‌ன் தானே என்று ச‌ரியாக‌ சொல்லிவிட்டு உன்க்கு ஏன‌ப்பா இந்த‌ வேலை என்று ஆர‌மித்தார். ந‌ம‌து ஹீரோவும் ச‌ரி அடி ஏதும் விழாது என்ற‌ தைரிய‌த்தில் பேச ஆர‌மித்தார். அந்த‌ பேச்சு இர‌வு 9.30 வ‌ரை நீடித்த‌து...அவ‌ர்க‌ளாக‌வே காபியும் த‌ந்து பேச்சை தொட‌ர்ந்தார்க‌ள். ( மாப்பிள்ளையின் த‌ந்தை அவ்வ‌போது த‌லையை ஆட்டி, சிரித்து, வ‌ருத்த‌ம் தெரிவித்து ஒரு மாதிரி இருந்தார்) இந்த‌ பேச்சில் ம‌ன‌ப்பென்னிட‌ம் இருந்த‌ தைரிய‌த்தை பார்த்து ந‌ம‌து ஹீரோவே ஆடீதான் போனார்.( ப‌ல‌ வ‌ச‌வுக‌ளுக்கும் அவ‌ர் அமைதியாக‌ தான் இருந்தார், ஆனால் த‌ன்மான‌த்தை சீன்டி பார்க்கும் கேள்வி வ‌ந்த‌ போது அவ‌ரின் கோப‌ம் வெடித்துவிட்ட‌து). நேர‌ம் ஆகிவிட்ட‌தால் நாளை காலையில் பேச‌லாம் என்று கிள‌ம்பிவிட்டார்க‌ள்.அன்று இர‌வு மாப்பிள்ளைக்கு ஆயிர‌ம் இர‌வு ஆக‌தான் இருந்தது.

ம‌றுநாள் காலையில் 10 ம‌னிக்கு ப‌ஞ்ஜாய‌த்து ம‌றுப‌டியும் கூடிற்று..ஆனால் இந்த‌ முறை வேறு ஒரு மாமா வீட்டில். கார‌ சார‌ விவாத‌ங்க‌ளுக்கு பிற‌கு சில‌ ப‌ல‌ வாத‌ங்க‌ளுக்கு பிற‌கு. ஒரு சில‌ க‌ன்டீச‌னுக்கு பிற‌கு மாப்பிள்ளையை நேரில் பார்க்க‌ வேண்டும் என்று சொல்லிவிடார்க‌ள். அப்போதே ந‌ம‌து ஹீராவிற்கு இது 60 ச‌த‌விகித‌ம் முடைந்து விட்ட‌து என்று ம‌ன‌தில் நினைத்தார்.

அன்று மாலை 6.30 மாப்பிள்ளையை பார்க்க‌ அன‌வ‌ரும் ஒரு பொதுவான‌ இட‌த்தில் கூடினோம்.
மாப்பிள்ளைக்கோ ஒரே டென்ஸ‌ன்...ஒருவ‌ழியாக‌ அனைவ‌ரும் பார்த்து அடுத்த‌ விச‌ய‌த்திற்கு தாவினோம். அதாவ‌து முறைப்ப‌டி திருமண‌ம் ந‌ட‌த்தி வைத்து விடுகிறோம் அத‌ன் பிற‌கு உங்க‌ளுக்கும் எங்க‌ளுக்கும் ச‌ம்ம‌த‌ம் இல்லை என்று இருவ‌ரிட‌மும் பான்டு ப‌த்திர‌த்தில் கையெழுத்து போட‌ வேண்டும் என்று சொல்லிவிட்டார்க‌ள்.மாப்பிள்ளைக்கு ஓகே தான் ஆனால் இங்கு பெண் கொஞ்ஜ‌ம் யோசித்து முடியாது என்று சொல்லிவிட்டார். கார‌ண‌ம் கேட்ட‌ போது அவ‌ர் சொன்னது ச‌ற்று ரீச‌ன‌புள்ளாக‌தான் இருந்த‌து.( நாக‌ரீக‌த்துட‌ன் அதை த‌விற்கிறேன்)

ஹீரொவிற்கு அடுத்த‌து என்ன‌ செய்ய‌லாம் என்று யோச‌னை வ‌ந்த‌து...அவ‌ரின் வ‌க்கீல் ந‌ன்ப‌ருக்கு ஒரு போன் செய்து கேட்ட‌ போது இந்த‌ மாதிரி எழுதி வாங்கினால் எல்லாம் ச‌ட்ட‌ப‌டி செல்லுப‌டி ஆகாது என்று சொன்னார்...அதை பெண்ணிட‌ம் சொல்லி அவ‌ரிட‌ம் கையெழுத்து வாங்கி திரும‌ண‌ வேல‌க‌ளை பார்க்க‌ ஆர‌மித்து விட்டார்க‌ள்.

ந‌ம‌து ஹீரோதான் திரும‌ண‌ வேலைக‌ளை முன்னிறுத்தி பார்த்து அவ‌ர்க‌ளை த‌னி குடித்த‌ன‌ம் விக்கும் வ‌ரை இருந்து முடித்து கொடுத்தார்.

திரும‌ண‌ வேலைக‌ளுக்காக அவ‌ர் ம‌ண‌‌ப்பெண்னின் மாமா வீட்டிற்கு சில முறை சென்று வ‌ந்தார்..அவ‌ரின் சுறு சுறுப்பு, அவ‌ரின் அழ‌கு, அவ‌ரின் பேச்சுதிற‌மைக்காக‌ அங்கு ஒரு காத‌ல் ம‌ல‌ர்ந்த‌து...அது மாமாவின் 2 வ‌து ம‌க‌ள்.

நீங்க‌ள் நினைப்ப‌து போல் அந்த‌ திரும‌ண‌ம் அவ்வ‌ள‌வு ஈஸியாக‌ ந‌ட‌க்க‌வில்லை..இந்த‌ முறை அவ‌ர் முன்னால் மாப்பிள்ளையிட‌ம் ஐடியா கேட்டார், அவ‌ர் கொடுத்த‌ ஐடியா தான் திரும்பி வ‌ந்த‌து. (ரிஜிஸ்ட‌ர் திரும‌ண‌ம்)டேய் என‌க்கு க‌ல்யாண‌ம் செய்து வைத்த‌ கையோடு உன‌க்கு வாழ்க்கையை தேடிக்கிட்டேயாடா என்று க‌லாய்த்த‌து த‌னிக்க‌தை.

ந‌ம‌து ஹீரோ நேராக‌ த‌ன‌து வ‌ருங்கால‌ மாம‌னாரின் வீட்டிற்கு சென்று நீங்க‌ள் நீங்க‌ள் திரும‌ண‌ம் செய்து வைக்க‌ வில்லை என்றால் நாங்க‌ளாக‌வே திரும‌ண‌ம் செய்து கொள்ளுவோம், ஒரு ம‌ரியாதைக்காதான் உங்க‌ளிட‌ம் நிற்கிறோம் என்று நேருக்கு நேராக‌ பேசிவிட்டார். ( அவ‌ருக்கு தான் தெரியுமே இவ‌ன் எல்லாத்தையும் செய்வான் என்று) அடுத்த‌ முகுர்த்த‌தில் அவ‌ராக‌வே திரும‌ண‌ம் செய்து வைத்து விட்டார்.


இப்போது ந‌ம‌து ஹீரோ சிட்னியில் வேலை பார்க்க‌, அவ‌ர் ந‌ண்ப‌ர் பூனாவில் (Maharastra) இருக்க‌ அவ‌ர்க‌ளது வாழ்க்கை த‌லா இரு குழ‌ந்தைக‌ளோடு சுப‌மாக‌ இருக்கிற‌து.

( பின் குறிப்பு: வ‌ழ‌க்க‌ம் போல் குழ‌ந்தை பிற‌ந்த‌வுட‌ன் குடும்ப‌ங்க‌ள் ஒன்று சேர்ந்து விட்ட‌து)

14-Aug-2009

காத‌லுக்கு ம‌ரியாதை செய்த‌ நாடோடி...உண்மை ச‌ம்ப‌வ‌ம்

வாசகர்களே... வாங்க கலக்கலாம் இந்த தொடர் விகடனில் வருகிறது.

இந்த வாரம் நண்பனின் காதலுக்கு உதவச் சென்று 'நாடோடிகள்' ஆனவர்களின் கதைகள்...

ஆஹா ந‌ம்ப‌ கிட்ட‌யும் ஒரு உண்மை ச‌ம்ப‌வ‌ம் இருக்கிற‌து....ப‌ல‌நாள் நின‌த்து நின‌த்து ம‌ண‌ம் விட்டு சிரித்த‌ ச‌ம்ப‌வ‌ம்....

ஈரோட்டில் காத‌ல‌ன் இன்ஞினிய‌ரிங் காலேஜ்ஜில் ப‌டித்து கொண்ணிருந்தான்...காத‌லி பெருந்துறை ம‌ருத்துவ‌ க‌ல்லுரியில் ப‌டித்து கொண்டிருந்தார்க‌ள், 13‍ம் ந‌ம்ப‌ர் ப‌ஸ்ஸில் தான் இருவ‌ரும் ப‌ய‌ன‌ம்....அப்போது வ‌ந்த‌ ஜெமினி ப‌ட‌ம் பார்த்து எல்லோரும் 'ஓ' போட்டு ப‌ய‌ன‌ம் இனிதே ஆர‌மித்து காத‌லும் ஜோராக‌ வ‌ள‌ர்ந்த‌து.

க‌டைசி வ‌ருட‌ம் காத‌ல‌னுக்கு...என்ன‌ ப‌ன்னுவ‌துனு தெரிய‌வில்லை...ந‌ம்ப‌ ஹீரோவிட‌ம் வ‌ந்து வ‌ழிகேட்டார்க‌ள் ( சோடியாக‌ வ‌ந்து)அலை பாயுதே ப‌ட‌த்தில் வ‌ந்த‌ மாதிரி ரிஜிஸ்ட‌ர் மேரேஜ் ப‌ன்னிக‌லாம் அப்ப‌ற‌ம் பிர‌ச்ச‌னை வ‌ந்தா பார்த்துக‌லாம் என்று அவ‌ரும் ஐடியா கொடுத்துவிட்டார்.

ச‌ரி என்று சிவ‌ன் ம‌லையில் திரும‌ன‌ம், காங்கேய‌த்தில் ரிஜிஸ்டிரேச‌ன் என்று த‌ட‌புட‌ல் க‌ல்யான‌சேவை ந‌ட‌ந்த‌து ( கோயிலுக்கும், ரிஜிஸ்டிரேச‌ன் ஆபிஸுக்கும் ப‌ண‌ம் ம‌ற்றும் சில‌ பேப்ப‌ர் ஒர்க்குக்கு க‌ஸ்ட‌ப‌ட்ட‌துக்கு த‌னியாக‌ உன்மை ச‌ம்ப‌வ‌ம் தொட‌ர்க‌தை எழுத‌லாம்)அவ‌ர் அவ‌ர் வீட்டுக்கு ம‌திய‌ம் 3.30க்கு போய் விட்டார்க‌ள்.

அன்று இர‌வு மாப்பிள்ளையும் திரும‌ன‌ம் ந‌ட‌த்தி வைத்த‌ ஆளும் அப்போதைய‌ டாஸ்மார்க் ( Private bar) போயி விட்டார்க‌ள் அங்கு ந‌ம்ப‌ ஈரோ.. பாருடா க‌ல்யான‌ம் ந‌ட‌ந்து முத‌லிர‌வில் இருக்க‌ வேண்டிய‌ ஆளு பாருக்கு வ‌ந்து இருக்கான் என்று க‌லாய்க்க‌..அருகில் ஒட்டு கேட்டு கொண்டு ( அரை குரையாக‌) இருந்த‌ புல் ம‌ப்பு பார்ட்டி இன்னா த‌லைவா பிர‌ச்ச‌னை க‌ல்யான‌ம் பிடிக்க‌லையா? இல்ல‌ பொன்னு பிடிக்கிலியா என்று கேட்டு ஒரே தொந்த‌ர‌வு...எவ்வ‌ளொவோ சொல்லியும் அந்த‌ ந‌ப‌ர் கேட்க‌வில்லை...அப்ப‌ற‌ம் மாப்பிள்ளை விட்டார் பார் ஒரு அறை...ம‌ப்பு பார்ட்டி சாரி பாஸ் என்று அடுத்த‌ ர‌வுண்டுக்கு போய்விட்டார்.

சில‌ மாத‌ங்க‌ள் ஓடின...ரிஜிஸ்டார் அலுவ‌ல‌க‌த்துக்கு மாற்ற‌ல் ஆகி வ‌ந்த‌ ஒருந‌ப‌ர் பொன்னுக்கு சொந்த‌க‌ரார் என்று தெரியாம‌ல் அவ‌ரிட‌ம் போய் சார் ஒரு certificate காபி வாங்க‌னும் எவ்வ‌ளுவு காசு என்று கேட்க‌ அவ‌ர் விவ‌ர‌த்தை கேட்க‌ அவ‌ன் விவ‌ர‌த்தை சொல்ல‌ certificat காபி கொடுத்துவிட்டு பெண்ணின் வீட்டில் போட்டு கொடுத்துவிட்டார்.

ஒரு சுப‌ யோக‌ வெள்ளிகிழ‌மை ம‌திய‌ம் மாப்பிள்ளையுட‌ம் இருந்து ஹீரோவிற்கு போன்..ஹீரோவும் அடித்து பிடித்து மாப்பிள்ளை வீட்டுக்கு போய் என்ன‌ ஏது என்று விசாரிக்க‌ விஷ‌ய‌ம் புரிந்து... மாப்பிள்ளையின் பெற்றோரிட‌ம் ச‌ம்ம‌த‌ம் வாங்கி அவ‌னை அழைத்து கொண்டு அடுத்த‌ பிளானை போட‌ ஆர‌மித்துவிட்டார்க‌ள்.

பெண்ணுக்கு ச‌ப்போர்ட் யாரு ப‌ன்னுவாங்க‌? இப்ப‌டி அடிச‌சா எப்ப‌டி அடிக்க‌லாம்? பொன்னு மாத்தி பேசுனா என்ன‌ ப‌ன்னுர‌து? ம‌ற்றும் ப‌ல‌... சில‌... அப்ப‌டினு பிளானை போட்டாகிவிட்ட‌து. அன்று இர‌வு ந‌ன்‌ப‌னுக்கு ஏதும் ஆக‌ கூட‌து என்று இருவ‌ரும் வீட்டில் த‌ங்காம‌ல் வேறு இட‌த்தில் த‌ங்கினார்க‌ள்.

ந‌ம்ப‌ ஹீரோ த‌ன‌து த‌ந்தையிட‌ம் இந்த‌ மாரி.. இந்த‌ மாரி..ப‌ஞ்ஜாய‌த்து ப‌ன்ன‌ நீங்க‌ வ‌ர‌முடியுமானு கேட்க‌ அவ‌ர் விவ‌ர‌த்தை கேட்க‌ அட‌பாவி அவ‌ன் ந‌ம்ப‌ சொந்த‌கார‌ன் (பொன்னு வீடு) என்று ஜ‌கா வாங்க‌..இவ‌ன் ச‌மாதான‌ப‌டுத்தி... வேண்டும் என்றால் நீங்க‌ள் க‌ன்டிப்பாக‌ வ‌ர‌ வேண்டும் என்று உறுதி வாங்கி கொண்டு அடுத்த‌ பிளானை ஆர‌மித்து விட்டான்.

அடுத்தா நாள் காலை (3.30am) பெண்னிட‌ம் இருந்து போன் வ‌ந்த‌து ஹீரோவின் வீட்டுக்கு ஹீரொவின் த‌ந்தையிட‌ம் ஒரு விஸ‌யத்தை சொல்லி ( அப்ப‌லாம் செல்லு கிடையாது)எங்க‌ சித்த‌ப்பா ஒருத்த‌ர் இருக்கார் அவ‌ரிட‌ம் போயி உத‌வி கேளுங்க‌ என்று..ந‌ம்ப‌ ஹீரோவும் அந்த‌ சித்த‌பா வீட்டிற்கு கோல‌ம் போடும் நேர‌த்திற்கு ச‌ற்று முன்பாக‌வே போய் அவ‌ரை தூக்க‌திலிருந்து எழுப்பி விவ‌ர‌த்தை சொல்லி அவ‌ர் வீட்டிலே இருந்து சூடாக‌ காபி சாப்பிட்டு மேலும் விவாதித்து அடுத்து ம‌திய‌ம் ச‌ந்திக‌லாம் என்று அனுப்பிவிட்டார்.......

க‌ன்டிப்பாக‌ இத‌ன் 2ம் பாக‌ம் எழுதுகிறேன்...அதுல‌தான் ச‌ரியான் டிவிஸ்டு இருக்கிற‌து- to be Continue...