15-Aug-2009

2 ம் பாக‌ம்‍‍‍‍‍‍‍ ‍‍‍___ காத‌லுக்கு ம‌ரியாதை செய்த‌ நாடோடி...உண்மை ச‌ம்ப‌வ‌ம்

ம‌திய‌ம் எப்ப‌ வ‌ரும் என்று ந‌ம‌து ஹீரோவும், மாப்பிள்ளையும் யுக‌க‌ன‌க்கில் பொறுத்து இருந்தார்க‌ள். அந்த‌ ம‌திய‌மும் வ‌ந்த‌து அழைப்பும் வ‌ந்த‌து...ந்‌ம‌து ஹீரோ மாப்பிள்ளையின் த‌ந்தையை அழைத்து கொண்டு பெண்ணின் மாமா வீட்டிற்கு போய் சேர்ந்தார். ந‌ம்ப‌ ஹீரோவிற்கு அவ‌ர்க‌ள் அடித்து விட்டால் திருப்பி அடிக்காம‌ல் இருக்க‌ மாப்பிள்ளை ச‌த்ய‌ம் வாங்கிகொண்டார்.

ஹீரோவும் மாப்பிள்ளையின் த‌ந்தையும் போன‌போது அங்கு ஒரு குடும்ப‌ ப‌ட்டாள‌மே இருந்த‌து அந்த‌ ப‌ட்டாள‌த்தில் ந‌ம‌து ம‌ன‌ப்பெண்ணும் இருந்தார், அவ‌ரை பார்த்த‌ பிற‌குதான் ந‌ம‌து ஹீரோவொற்கு ச‌ற்று தைரிய‌ம்/தெம்பு வ‌ந்த‌து.

ஹீரோவை பார்த்த‌வுட‌ன் பெண்ணின் த‌ந்தைக்கு நீ அவ‌ரின் ம‌க‌ன் தானே என்று ச‌ரியாக‌ சொல்லிவிட்டு உன்க்கு ஏன‌ப்பா இந்த‌ வேலை என்று ஆர‌மித்தார். ந‌ம‌து ஹீரோவும் ச‌ரி அடி ஏதும் விழாது என்ற‌ தைரிய‌த்தில் பேச ஆர‌மித்தார். அந்த‌ பேச்சு இர‌வு 9.30 வ‌ரை நீடித்த‌து...அவ‌ர்க‌ளாக‌வே காபியும் த‌ந்து பேச்சை தொட‌ர்ந்தார்க‌ள். ( மாப்பிள்ளையின் த‌ந்தை அவ்வ‌போது த‌லையை ஆட்டி, சிரித்து, வ‌ருத்த‌ம் தெரிவித்து ஒரு மாதிரி இருந்தார்) இந்த‌ பேச்சில் ம‌ன‌ப்பென்னிட‌ம் இருந்த‌ தைரிய‌த்தை பார்த்து ந‌ம‌து ஹீரோவே ஆடீதான் போனார்.( ப‌ல‌ வ‌ச‌வுக‌ளுக்கும் அவ‌ர் அமைதியாக‌ தான் இருந்தார், ஆனால் த‌ன்மான‌த்தை சீன்டி பார்க்கும் கேள்வி வ‌ந்த‌ போது அவ‌ரின் கோப‌ம் வெடித்துவிட்ட‌து). நேர‌ம் ஆகிவிட்ட‌தால் நாளை காலையில் பேச‌லாம் என்று கிள‌ம்பிவிட்டார்க‌ள்.அன்று இர‌வு மாப்பிள்ளைக்கு ஆயிர‌ம் இர‌வு ஆக‌தான் இருந்தது.

ம‌றுநாள் காலையில் 10 ம‌னிக்கு ப‌ஞ்ஜாய‌த்து ம‌றுப‌டியும் கூடிற்று..ஆனால் இந்த‌ முறை வேறு ஒரு மாமா வீட்டில். கார‌ சார‌ விவாத‌ங்க‌ளுக்கு பிற‌கு சில‌ ப‌ல‌ வாத‌ங்க‌ளுக்கு பிற‌கு. ஒரு சில‌ க‌ன்டீச‌னுக்கு பிற‌கு மாப்பிள்ளையை நேரில் பார்க்க‌ வேண்டும் என்று சொல்லிவிடார்க‌ள். அப்போதே ந‌ம‌து ஹீராவிற்கு இது 60 ச‌த‌விகித‌ம் முடைந்து விட்ட‌து என்று ம‌ன‌தில் நினைத்தார்.

அன்று மாலை 6.30 மாப்பிள்ளையை பார்க்க‌ அன‌வ‌ரும் ஒரு பொதுவான‌ இட‌த்தில் கூடினோம்.
மாப்பிள்ளைக்கோ ஒரே டென்ஸ‌ன்...ஒருவ‌ழியாக‌ அனைவ‌ரும் பார்த்து அடுத்த‌ விச‌ய‌த்திற்கு தாவினோம். அதாவ‌து முறைப்ப‌டி திருமண‌ம் ந‌ட‌த்தி வைத்து விடுகிறோம் அத‌ன் பிற‌கு உங்க‌ளுக்கும் எங்க‌ளுக்கும் ச‌ம்ம‌த‌ம் இல்லை என்று இருவ‌ரிட‌மும் பான்டு ப‌த்திர‌த்தில் கையெழுத்து போட‌ வேண்டும் என்று சொல்லிவிட்டார்க‌ள்.மாப்பிள்ளைக்கு ஓகே தான் ஆனால் இங்கு பெண் கொஞ்ஜ‌ம் யோசித்து முடியாது என்று சொல்லிவிட்டார். கார‌ண‌ம் கேட்ட‌ போது அவ‌ர் சொன்னது ச‌ற்று ரீச‌ன‌புள்ளாக‌தான் இருந்த‌து.( நாக‌ரீக‌த்துட‌ன் அதை த‌விற்கிறேன்)

ஹீரொவிற்கு அடுத்த‌து என்ன‌ செய்ய‌லாம் என்று யோச‌னை வ‌ந்த‌து...அவ‌ரின் வ‌க்கீல் ந‌ன்ப‌ருக்கு ஒரு போன் செய்து கேட்ட‌ போது இந்த‌ மாதிரி எழுதி வாங்கினால் எல்லாம் ச‌ட்ட‌ப‌டி செல்லுப‌டி ஆகாது என்று சொன்னார்...அதை பெண்ணிட‌ம் சொல்லி அவ‌ரிட‌ம் கையெழுத்து வாங்கி திரும‌ண‌ வேல‌க‌ளை பார்க்க‌ ஆர‌மித்து விட்டார்க‌ள்.

ந‌ம‌து ஹீரோதான் திரும‌ண‌ வேலைக‌ளை முன்னிறுத்தி பார்த்து அவ‌ர்க‌ளை த‌னி குடித்த‌ன‌ம் விக்கும் வ‌ரை இருந்து முடித்து கொடுத்தார்.

திரும‌ண‌ வேலைக‌ளுக்காக அவ‌ர் ம‌ண‌‌ப்பெண்னின் மாமா வீட்டிற்கு சில முறை சென்று வ‌ந்தார்..அவ‌ரின் சுறு சுறுப்பு, அவ‌ரின் அழ‌கு, அவ‌ரின் பேச்சுதிற‌மைக்காக‌ அங்கு ஒரு காத‌ல் ம‌ல‌ர்ந்த‌து...அது மாமாவின் 2 வ‌து ம‌க‌ள்.

நீங்க‌ள் நினைப்ப‌து போல் அந்த‌ திரும‌ண‌ம் அவ்வ‌ள‌வு ஈஸியாக‌ ந‌ட‌க்க‌வில்லை..இந்த‌ முறை அவ‌ர் முன்னால் மாப்பிள்ளையிட‌ம் ஐடியா கேட்டார், அவ‌ர் கொடுத்த‌ ஐடியா தான் திரும்பி வ‌ந்த‌து. (ரிஜிஸ்ட‌ர் திரும‌ண‌ம்)டேய் என‌க்கு க‌ல்யாண‌ம் செய்து வைத்த‌ கையோடு உன‌க்கு வாழ்க்கையை தேடிக்கிட்டேயாடா என்று க‌லாய்த்த‌து த‌னிக்க‌தை.

ந‌ம‌து ஹீரோ நேராக‌ த‌ன‌து வ‌ருங்கால‌ மாம‌னாரின் வீட்டிற்கு சென்று நீங்க‌ள் நீங்க‌ள் திரும‌ண‌ம் செய்து வைக்க‌ வில்லை என்றால் நாங்க‌ளாக‌வே திரும‌ண‌ம் செய்து கொள்ளுவோம், ஒரு ம‌ரியாதைக்காதான் உங்க‌ளிட‌ம் நிற்கிறோம் என்று நேருக்கு நேராக‌ பேசிவிட்டார். ( அவ‌ருக்கு தான் தெரியுமே இவ‌ன் எல்லாத்தையும் செய்வான் என்று) அடுத்த‌ முகுர்த்த‌தில் அவ‌ராக‌வே திரும‌ண‌ம் செய்து வைத்து விட்டார்.


இப்போது ந‌ம‌து ஹீரோ சிட்னியில் வேலை பார்க்க‌, அவ‌ர் ந‌ண்ப‌ர் பூனாவில் (Maharastra) இருக்க‌ அவ‌ர்க‌ளது வாழ்க்கை த‌லா இரு குழ‌ந்தைக‌ளோடு சுப‌மாக‌ இருக்கிற‌து.

( பின் குறிப்பு: வ‌ழ‌க்க‌ம் போல் குழ‌ந்தை பிற‌ந்த‌வுட‌ன் குடும்ப‌ங்க‌ள் ஒன்று சேர்ந்து விட்ட‌து)

3 comments:

வால்பையன் said...

நண்பர்கள் கதை இருக்கட்டும்!
அமெரிக்காவில் ஒருத்தர் இருக்கிறாரே அவர் கதையை சொல்லுங்க கேட்போம்!

கார்த்திக் said...

நல்ல கதைதான்

இதுல உங்க ரோல் என்னான்னு சொல்லவே இல்லையே

gnani said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....

நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.

எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.

ஊர் கூடி தேர் இழுப்போம்.

எப்படி பணம் அனுப்புவது ?

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. e mail: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.