12-Apr-2009

ஒரு பழைய மியுசியம்- Woodlands

இந்த வாரம் ரொம்ப போர் அடித்ததால் கூகிள் ஆன்டவரிடம் ஏதாவது இடத்தை காட்டு என்றபோது நிறைய அருளினார்...அவற்றில் அருகில் உள்ளதை தேர்ந்தெடுத்து போனது Woodland, CA -ல் உள்ள பழைய மியுசியம்.நாம் இப்போது உபயோகபடுத்தும் விவசாயா Equipments- எல்லாம் அவர்கள் 50 வருடங்களுக்கு முன்பே பயன்படுத்த ஆரமித்துவிட்டார்கள்.

படத்தில் உள்ள 8ம் நம்பர் கூர் முனை என்ன வென்று தெரிகிரதா?
விடை அறிய மற்றும் முழுவதும் பார்க்க இங்கே கிளிக்கவும்


அதன் முகவரி: 1962 Hays Lane - Woodland, California 95776

(இந்த பதிவு திரு.செந்தில் அவர்களுக்கு ... அவருடைய மலரும் நினைவுகளுக்காக)

10-Apr-2009

அமெரிக்கா-மார்கெட்டிங் கால்ஸ்

இங்கு டு நாட் கால் லிஸ்டில் (Do Not Call) நம்முடைய நம்பரை ஆட் செய்துவிட்டால் கால்ஸ் வராது வந்தால் லீகல் ஆக்ஸன்ஸ் (Legal Action) எடுக்கலாம். நான் என்னுடைய நம்பரை ஏட் சிய்த பிறகு கால்ஸ் வருவது சுத்தமாக குறைந்து போனது.
கடந்த சில நாட்களாக மார்கெட்டிங் கால்ஸ் வர ஆரமித்தது.அதுவும் இந்தியாவில் இருந்து!!!!!அதாவது இந்தியாவிற்கு தொலைபேச காலிங் கார்டு விக்கும் கம்பெனி இனிவருவது எனக்கும் அவர்களுக்கும் நடந்தது

ஹலோ சார் குட் ஐ டாக் டு பீம்பாய்?
யெஸ் திஸ் ஈஸ் ஹி...

சார் வி ஆர் காலிங் பிரம் கிரகாம் டெலிகாம் வி ஏவ் அ நைஸ் ரேட்ஸ் டு கால் இன்டியா, சார் ஆர் யூ அ டமிலியன்?
யெஸ் ஐ ஏம்!!!!!

வணக்கம் சார் நீங்க எந்த காலிங் கார்டு யூஸ் செய்ரீங்க அதவிட சீப் ரேட்டுக்கு எங்க கம்பெனி ஆபர் கொடுக்குது சார்.
வணக்கம் இது மார்கெட்டிங் காலா?

ஆமாம் சார்
நான் என் நம்பரைதான் Do not call list la Add செய்து இருக்கேனே அப்பறம் எப்படி கால் பண்ரீங்க?

எங்களுக்கு அதெல்லாம் ஏதும் தெரியாது சார் எங்க மேனேஜர் இந்த நம்பரை கொடுத்து கால் பண்ன சொன்னார் சார்.
சரி விஸயத்தை சொல்லுங்க

இந்தியா கால் செய்ய 3.5 சென்டுக்கு எங்க கம்பெனி ஆபர் கொடுக்குது நீங்க சைன் பன்னுங்க சார்.
இல்லப்பா எனக்கு ஏதும் வேனாம், நான் இந்தியாவிற்கு அதிகம் பேசுவதில்லை.

சார் நீங்க தமிழ்நாடு தானே அப்ப கன்டிப்பாக வீட்டுக்கு பேசுவீங்கதேனே?
இல்லப்பா எனக்கு ஏதும் வேணாம், நாங்க எல்லாம் அதிகம் பேசுவடில்லை..

சார் பிளீஸ்..நீங்க சைன் பன்னால் தான் நான் இந்த வேலையில் கன்டினியு பன்ன முடியும் பிளீஸ் சார்
ஹலோ நீங்க எல்லாம் கால்ஸ் எப்படி ரவுட் செய்ரீங்க?

சார் நாங்க பி.எஸ்.என்.எல் (BSNL) ல வோல்சேல் ரேட்டுல மினிட்ஸ் வாங்கி டிஸ்டிரிபியூட் செய்ரோம் சார்.
இப்படிதான் சொல்லுரீங்க அப்பரம் பார்த்தா VOIP- ல கால்ஸ் ரவுட் செய்ரீங்க..அதனால வேணாம்

சார் பிளீஸ் சார்..
இல்லப்பா வேனாம் வேனாம்..விட்டுடு...

சார் பிளீஸ் சார்..
கால் கட் செய்துவிட்டேன்...பின் என்னங்க மார்கெட்டிங் கால்னா ஒரு கெத்தா பேச வேனாமா? கெஞ்ஜல் இருக்க கூடாது. அதுவும் 1008 சார் போட்டுகிட்டு.
இங்க வந்த பிறகு சார் போடும் பழக்கமே இல்லை சுத்தமா மறந்து போச்சு, யாரவது சார் போட்டால் நமக்கு என்னமோ போல் இருக்குது
(இந்தியாவிலே நான் யாருக்கும் சார் போட்டது கிடையாது)
சில தினங்கள் கழித்து மறுபடியும் கால்....ஹலோ நான் கொஞ்ஜம் பிஸி யா இருக்கேன் ஒரு 10 நிமிசம் கழித்து கூப்பிடுங்ளேன்...

OKey sir!!

கால் வரவே இல்லை
மறுபடியும் இதே டெக்னிக யூஸ் செய்து ஒரு 5 தடவை தட்டி கழித்து விட்டேன்.

இன்று வெள்ளிகிழமை வேலை கிடையாது..வீட்டில் ரிலாக்ஸாக உட்கார்ந்து ஒரு தெலுங்கு படம் பார்ட்து கொன்டிருந்தேன். (கோதாவரி thanks to sub title)
நல்ல படம் பிடித்திருந்தது...இந்த படத்தை ரெகமன்டு செய்து டிவிடி யும் நன்பர் கொடுத்து ஒரு வருடம் முழுதாக முடிந்திருந்தது.

ஒரு இனிய பொழுதில் அருமையான் கால் அழைத்தது அதே கம்பெனியில் இருந்து குரல் தேன் குரல் (அதே தான் பொன்னுமா பொன்னு)
வழக்கமான அறிமுகத்திற்கு பிறகு

சார் ஒரு காலிங் கார்டு செம ஆபர் சார் அப்படினு சொல்லுச்சு,
நான் சொன்னேன் எனக்கு சார் போட்ட பிடிக்காதுங்க என்று.

சரி உங்களுக்கு எப்படி பேசனும்னு சொல்லுங்க ...நான் அப்படி பேசுரேனு சொல்லுச்சு.
ஆஹா...இது எனன வித்யாசமா இருக்குது அப்படினு நிமிர்ந்து உட்கார்ந்து ஆத்தா நான் கொங்கு நாடு மனுசன் அதனால கொங்குல பேசுமானு சொன்னேன்...

தேனுங்க ஒரு காலிங்கார்டு இருக்குதுங்க...நம்பள மாரி அய்யனுங்களுக்கு சவ்ரியாமா இருக்கும்னு கூப்டனுங்க ...
ஆஹா காதுல தேனு வந்து பாயுது அப்படினு ஆத்தா கொஞ்ஜம் வெவரத்த சொல்லு ஆத்தா ஆனால் நான் வாங்க மேட்டேன் வேனும்னா கொஞம் வருத்துகொள்கிரேன் அப்படினு சொன்னேன்.

சரி சரி வருத்துகொள்ளுங்கள் என்று கடலை...கடலை...கடலை...கடலை...கடலை...கடலை...கடலை...கடலை...
கடலை...கடலை...கடலை...கடலை...

நடுவில் கொஞ்ஜ்ம் கொஞ்ஜம் வாய்ஸ் பிரேக் ஆனது...அப்போது நான் எனாக்கா இதுவும் VOIP தானே அப்படினு கேட்டதுக்கு

இல்லபா இது நிறைய கடலைவருத்ததால் காது அப்பப்ப கேக்காது அப்படினு வெவரமா பதில் சொல்லிச்சு

சரிக்கா..அப்படினா இது மெய்யாலுமே VOIP இல்லியானு கேட்டேன்

அதான் மெய்யாலுமேனு சொல்லிகினுகீர நீ என்னா என்ன நம்பட்ட்கீர அப்படினு தாய் தமிழர் பாஸையில் கலக்கிடுச்சு.

அப்பறம் கேஸ் (GAS) தீர்ந்து..கடலை தீஜ்ஜி மூக்குல smell ஏறி தும்மல் வர ஆரமித்துவிட்டது.

சரிக்கா வச்சிடவனு கேட்டேன்..அப்ப அது கேட்டது பார் ஒரு கேள்வி...அது தான் விசேசம்.

இன்னா நேரம் வறுத்தாயா அதுக்காவது சைன் பன்னுடானு சொல்லுச்சு