என் முகவரியை நானே எழுதி உன்னிடம் தந்துவிட்ட கடிதத்தாள்களை நினைவிருககிறதா?
துணி உலர்த்த மாடிக்கு போகும்போதெல்லாம் ஏண்டி இப்படி ஊருக்கே கேக்குறமாதிரி கத்தற என்று உன் அம்மா திட்டுவார்களெ நினைவிருககிறதா?
ஒரே ஒரு முறை என்று என் சிகரெட் பிடுங்கி புகைபிடித்து நீ இருமியபோது பார்த்து சிரித்த வழிப்போக்கன் முகம் நினைவிருககிறதா?
நீ கலா அக்கா வீட்டுக்கு போகனும் என்றதும் நான் நன்பர்களிடம் வண்டி வாங்க அவர்களை தேடியது நினைவிருக்கிறதா?
முதல் முதலில் நீ என்னுடன் வண்டியில் வந்தபொழுது என்மேல் பட்டு விடாமல் எவ்வளவு கவனமாக அமர்ந்து வந்தாயென்று நினைவிருக்கிறதா?
அதே வண்டியில் என்ன அவசரம் சுற்று வழியில் மெதுவாக போ என்று தோளில் சாய்ந்துகெள்வாயே நினைவிருக்கிறதா?
முத்தம் கேட்ட பொழுதெல்லாம் அவங்க இருக்காங்க, இவங்க பார்க்ராங்க என்று சொல்லி தப்பிவிட்டு ஃபிளாக் கில் முதல் பின்னுட்டதை பார்த்து நீயாக ஓடி வந்து முத்தமிட்டு ஓடினாயே நினைவிருக்கிறதா?
மின்சாரம் போனபோதெல்லாம் உன் பாட்டியின் காதில் விழாமல் எனக்கு கிடைத்த சத்தமில்லா முத்தங்களை நினைவிருக்கிறதா?
தொலைபேசியில் நான் உனக்கு முத்தம் தரும்போதுலாம் பதிலுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தேங்க்ஸ் என்று வழிவாயே நினைவிருக்கிறதா
ஒரு திருமண வீட்டில் அதோ அவர்தான் என்று பார்வையாலேயே தோழிகளுக்கு என்னை அடையாளம் காட்டினாயே நினைவிருக்கிறதா?
A kiss is the shortest distance between two- Henry Youngman
Kissing power is the strongest then will power- Abigail Vanburen
No comments:
Post a Comment