29 Dec 2008

வால்பையனின் பொய்யும்-புரட்டும்

நம்ப வால் பையன் ஒரு பதிவிட்டு இருந்தார் அது இங்கே.

அவர் சொன்னபடி ஆனந்த விகடன் அவருக்கு சோப் அனுப்பியிருந்தால் அந்த சோப்பின் படம் எங்கே? ஹா..ஹா.

நடந்தது என்னவென்றால் அபிராமி தியேட்டர் எதிர் சந்தில் உள்ள டாஸ்மார்க் கடைக்கு சென்று வந்ததில் ஏற்ப்பட்ட மயக்கத்தில் எழுதிய பதிவு. இது தெரியாமல் அவரது மொக்கைக்கு சீரியஸான பின்னூட்டங்கள்... பின்னூட்டத்தை பார்த்து மேலும், மேலும் மருத்துவர் ராமதாஸின் கோபத்திர்க்கு ஆளாகிறார்.

உங்களுக்கு தெரியுமா? வால் பையனின் புதுவருட சபதம் என்ன வென்று? சரியாக கூறினால் ஒரு பரிசு உன்டு...

21 Dec 2008

Marathon-08

கலிபோர்னியா தலை நகர் சாக்ரமென்டோ வில் இரண்டு வாரங்களுக்கு முன் மாரத்தான் போட்டி நடைபெற்றது. அதிலிருந்து சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

யார் இவர்?

12/21/2008 8:58:25 AM 122.164.183.66 CHENNAI, TAMIL NADU (INDIA)

இன்று யார் யார் எனது மொக்கயை பார்ப்பதற்கு வந்துள்ளார் என்று IP to track அவரிடம் விசாரித்தால் அவர் மேலே கண்ட ஐ.பி என்ணை அளித்து.. பார் அவர் பல முறை (50க்கும் அதிகமான) உன்னை வந்து பார்த்துள்ளார்...அவருக்கு உனது நன்றி-ஐ தெரிவிக்கவும்.

Whoever it may be thanks for vising more then 50 times. (நெஜமா அவ்ளா மொக்கையா இருக்கா என்னா?)

அது சரி இப்ப இந்த மொக்கை எதுக்குனு கேட்கிறவங்களுக்கு? ஹி..ஹி...100 வது மொக்கை தொட இன்னும் கொஞ்ஜம் தான் கம்மியா இருக்கு.ஹி..ஹி..ஹி

20 Dec 2008

கிருஸ்துமஸ் விளக்கு அலங்காரங்கள்

அமெரிக்கவில் விடுமுறை காலம் ஆரமித்து விட்டது, மோசமான பொருளாதாரம் சற்றே மக்களை சோர்வடைய வைத்துவிட்டது. அன்பளிப்புகள் அளிப்பது குறைந்துள்ளது அல்லது விலை குறைந்த அன்பளிப்புகள் வழங்குகிரார்கள். பெரிய பெரிய கம்பெனிகள் 22.DEC- 08 முதல் 05.Jan.09 வரை விடுமுறை அளித்துள்லார்கள். காஸ்ட் கட்டிங்?

சாக்ரமென்டோ சிட்டியில், பேர் ஓகஸ் முடியும் இடத்திலும், போல்ஸம் ஆரமிக்கும் இடத்திலும் உள்ள வால் நட் அவென்யுவில் (In Madison avenue Between Fair Oakas and Folsom)உள்ள ஒரு 20 வீடுகள் மின் விளக்குகளால் அருமையாக அலங்காரம் செய்துள்ளார்கள். இதை பார்ப்பதற்க்கு நிறைய பேர் வண்டி கட்டி கொண்டு வருகிரார்கள். நானும் வண்டி கட்டி கொண்டு போய் பார்த்தேன் வாவ்...கூல்.....சோ பியுட்டிபுல்...















Santa in Hawaii?


Is Santa in rest?

Count Down to x-mas?


ஒரே ஒரு பிரப்ளம் என்ன வெண்றால் பார்க்கிங் மற்றும் அந்த இடத்தை அடைய நிறைய நேரம் வரிசையில் போக வேன்டியுள்ளது. நிறைய கார்கள் , நிறைய மக்கள், பொறுமையாக இருந்தால் அருமையான் அலங்காரம் செய்த வீடுகளை பர்க்கலாம்.

17 Dec 2008

வாழ்த்துக்களும்/ விளம்பரங்களும்

சில வருடங்களுக்கு முன்னால் தினமலர்-ல்(ஈரோடு பதிப்பு) வரும் விளம்பரங்கள் கவனத்தை ஈர்த்தது, அதாவது யராவது வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றாலோ அல்லது கருத்தரங்குகளில் கலந்து கொண்டாலோ வாழ்த்தி அனுப்பும் வரவேற்கும் விளம்பரங்கள் அதிகம் இருக்கும். அப்போது மக்கள் குறைவாகத்தான் விமானப்பயணம் செய்தார்கள்.(1990- 1998)உதாரனமாக இன்று கிழக்காசிய நாடுகளுக்கு சுற்று பயனம் மேற்கொள்ளும் எனது மருமகன் xxxxxxxx அவர்களை வாழ்த்தி வழியனுப்பும்
மாமனார் xxxx மாமியார் xxxxx கொழுந்தியா xxxxxx சித்தப்பா xxxxxx சித்தி xxxxxx
மாமா xxxxxx மற்றும் உறவினர்கள். என்று ஒரு விளம்பரம் வரும், 4 தினங்கள் கழித்து இன்று சுற்றுப்பயனம் முடித்து தாய் நாடு திரும்பும் எனது xxxxxxx வாழ்த்தி வரவேற்கும் xxxx
என்று ஒரு விளம்பரம் வரும்.

சில விளம்பரங்களில் கருத்தரங்க்கிற்கு செல்லும் எனது அலுவலக தோழர்xxxx அவர்களை வாழ்த்தி/வரவேற்கும் விளம்பரங்கள் வர ஆரமித்தது.பின்னாளில் டாட்காம் பெரும் வளர்ச்சியை சந்தித்த போது வாரத்திற்கு 3 விளம்பரங்கள் வர ஆரமித்தது.அந்த விளம்பரங்கள் இவ்வாரு இருந்தது.பணி நிமித்தமாக இன்று அமெரிக்கா செல்லும் எனது xxxxx தனது பனியில் சிறப்பித்து சீருடன் விளங்க வாழ்த்தும்-

மாமனார் xxxx மாமியார் xxxxx கொழுந்தியா xxxxxx சித்தப்பா xxxxxx சித்தி xxxxxx
மாமா xxxxxxx.

1) இந்த வருடம் இந்தியா சென்ற போது பார்த்த விளம்பரங்கள் சற்றே வித்யாசமாக இருந்த்து, அதாவது அமெரிக்காவில் உல்ள --- யூனிவர்சிட்டியில் மேல் படிப்பு முடித்து இன்று பணியில் சேரும் எனது அண்ணன் மகள்------ அவர்கள் பணியில் சிறப்பிக்க வாழ்த்தும்----------.

2)பணி நிமித்தமாக சென்றவாரம் நெதர்லாந்து சென்று இன்று அங்கிருந்து நியூசிலாந்து செல்லும் எனது-----அவர்களை வாழ்த்தி அனுப்பும்------

3)பணி நிமித்தமாக 7 வது முறையாக அமெரிக்கா செல்லும்----அவர்களை வாழ்த்தி வழியனுப்பும் ------

ஐ.டி என்ற துறை வந்த பிறகு நிறைய பேரு விமானப்பயனம் மெற்கொன்டுள்ளனர், அவர்களும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்லவேண்டியுள்ளது, ஒவ்வொருமுறையும் இவ்வாறு விளம்பரம் செய்தால் (புகைப்படத்துடன், டை கட்டிக்கொண்டு)அது அவர்களுக்கு சங்கோஜமாக இருக்காதா?

31 Oct 2008

அமெரிக்க மக்களே நெசமாவா?

நெசமா ராவுல 2 மணிக்கு கடிகாரத்தை திருப்பிவைக்கனுமா? இல்லைனா என்னா ஆகும்?

காத்தால எழுந்திருச்சி திருப்பினால் ஆகாதா?

இப்படிக்கு மொக்கை போடுவோர் சங்கம்

29 Oct 2008

அமெரிக்க மக்களுக்கு இங்கிலாந்து ராணியின் அவசர அறிவிப்பு.


MESSAGE FROM H.R.H. THE QUEEN

To the citizens of the United States of America from Her Sovereign Majesty Queen Elizabeth II .

In light of your failure in recent years to nominate competent candidates for President of the USA and thus to govern yourselves, we hereby give notice of the revocation of your independence, effective immediately.
(You should look up 'revocation' in the Oxford English Dictionary.)

Her Sovereign Majesty Queen Elizabeth II will resume monarchical duties over all states, commonwealths, and territories (except Kansas, which she does not fancy).

Your new Prime Minister, Gordon Brown, will appoint a Governor for America without the need for further elections.

Congress and the Senate will be disbanded. A questionnaire may be circulated next year to determine whether any of you noticed.


To aid in the transition to a British Crown dependency, the following rules are introduced with immediate effect:
-----------------------
1. The letter 'U' will be reinstated in words such as 'colour,' 'favour,' 'labour' and 'neighbour.' Likewise, you will learn to spell 'doughnut' without skipping half the letters, and the suffix '-ize' will be replaced by the suffix '-ise.' Generally, you will be expected to raise your vocabulary to acceptable levels. (look up 'vocabulary').
------------------------
2. Using the same twenty-seven words interspersed with filler noises such as ''like' and 'you know' is an unacceptable and inefficient form of communication. There is no such thing as U.S. English.. We will let Microsoft know on your behalf. The Microsoft spell-checker will be adjusted to take into account the reinstated letter 'u'' and the elimination of '-ize.'
-------------------
3. July 4th will no longer be celebrated as a holiday.
-----------------
4. You will learn to resolve personal issues without using guns, lawyers, or therapists. The fact that you need so many lawyers and therapists shows that you're not quite ready to be independent. Guns should only be used for shooting grouse. If you can't sort things out without suing someone or speaking to a therapist,then you're not ready to shoot grouse..
----------------------
5. Therefore, you will no longer be allowed to own or carry anything more dangerous than a vegetable peeler. Although a permit will be required if you wish to carry a vegetable peeler in public.
----------------------
6. All intersections will be replaced with roundabouts, and you will start driving on the left side with immediate effect. At the same time, you will go metric with immediate effect and without the benefit of conversion tables. Both roundabouts and metrication will help you understand the British sense of humour.
--------------------
7. The former USA will adopt UK prices on petrol (which you have been calling gasoline) of roughly $10/US gallon. Get used to it.
-------------------
8. You will learn to make real chips. Those things you call French fries are not real chips, and those things you insist on calling potato chips are properly called crisps. Real chips are thick cut, fried in animal fat, and dressed not with catsup but with vinegar.
-------------------
9. The cold, tasteless stuff you insist on calling beer is not actually beer at all. Henceforth, only proper British Bitter will be referred to as beer, and European brews of known and accepted provenance will be referred to as Lager. Australian beer is also acceptable, as they are pound for pound the greatest sporting nation on earth and it can only be due to the beer. They are also part of the British Commonwealth - see what it did for them. American brands will be referred to as Near-Frozen Gnat's Urine, so that all can be sold without risk of further confusion.
---------------------
10. Hollywood will be required occasionally to cast English actors as good guys. Hollywood will also be required to cast English actors to play English characters. Watching Andie Macdowell attempt English dialogue in Four Weddings and a Funeral was an experience akin to having one's ears removed with a cheese grater.
---------------------
11. You will cease playing American football. There is only one kind of proper football; you call it soccer. Those of you brave enough will, in time, be allowed to play rugby (which has some similarities to American football, but does not involve stopping for a rest every twenty seconds or wearing full kevlar body armour like a bunch of nancies)..
---------------------
12. Further, you will stop playing baseball. It is not reasonable to host an event called the World Series for a game which is not played outside of America. Since only 2.1% of you are aware there is a world beyond your borders, your error is understandable. You will learn cricket, and we will let you face the Australians first to take the sting out of their deliveries.
--------------------
13. You must tell us who killed JFK. It's been driving us mad.
-----------------
14. An internal revenue agent (i.e. tax collector) from Her Majesty's Government will be with you shortly to ensure the acquisition of all monies due (backdated to 1776).
---------------
15. Daily Tea Time begins promptly at 4 p.m. with proper cups, with saucers, and never mugs, with high quality biscuits (cookies) and cakes; plus strawberries (with cream) when in season.

God Save the Queen!
FYI: This post is no intention to hurt any one , just for fun. as this is came from FWD mails. -Thanks, Beemboy

30 Sept 2008

க(ஷ்)ஸ்டமர் சர்வீஸ் அனுபவங்கள்

டிரிங்..டிரிங்.. வெல்கம் டு ஐ.சி.ஐ.சி.ஐ பேங்..

பிளீஸ் லிசன் கேர்ப்புலி(ளி) அவர் பேங்கீங் மெனூஸ் ஏஸ் பீன் சேஞ்ஜிடு.

சில பல 1..2..3..க்கு பிறகு ஒரு ஆத்தா லைனுக்கு வந்தாங்க..

I see a error in my account statment, could u please explain what shouid I do?

I'm aapy to elp u sir, wat is ur aacount nambar?

ஆத்தா இதுலாம் அழுத்திட்டுதான் நீங்க லைனுக்கே வந்தீங்க..
I knew sir but for verification can u share one more time?

சரி பக்க பாதுகாப்பு போல அப்படினு ஒரு தர அல்லா நம்பரும் பாத்து சொல்லிட்டேன்.

Can u verify ur date of birth sir?
நான் ஆருக்கும் வயச சொல்லுரது இல்ல தாயீ..இருந்தாலும் நீங்க கேட்கரதுனால சொல்லுரேன்.அது வந்து தாயீ சூலை மாசம் ஒரு தேதி வந்து ஒரு வருசம்.

Ok saar how may i yelp u?
தாயீ செத்த முந்திதானே சொன்னேன், அதுக்குள்ளார மறந்துட்டீயோ...அதுவந்து தாயீ கனக்குல நான் வீக்கு..சீ..சீ...கணக்குல ஒரு தப்பு தாயீ.....என்னா தப்புனு வெளக்கி, கழுவி சொல்லி புரிய வைக்கரதுக்குள்ள எனக்கு ஒரு வயசு ஏறிப்போச்சு...நெசமா தாங்க...

OK sir for this u have to send a return request thru our online banking and high authoritys will take a decission.
சரிங்க தாயீ அதுபடியே செய்யீரேன்......முடிவு தெரியரதுக்கு எவ்லோ நாள் ஆகும் தாயீ...

Sorry saar I can't say anything, it depands on our Bombay branch officerss.
சரிங்க தாயீ.. (ஆத்தா அதுக்கு பேரு மும்பாய்..இரு இரு உன்ன பால் தாக்கரே தாத்தா கிட்ட போட்டு தாக்குரேன். )

அது ஆச்சு 3 மாசம் இன்னும் நம்ப கணக்கு தீர்ந்தபாடு இல்லை.

ரொம்ப நாள் ஆச்சு (ஒரு 5 வருசம்தான்) ஊருக்கு போயி சரி டிக்கட்டு ஏதாவது சீப்பா இருக்க பாருங்க இந்த வருசம் ஒரு தற போயிட்டு வரலாம். ரங்கமணி உத்தரவு...

சரினு ஏஜன்டு கிட்ட பேரம் பேசி (ஆமாம் பேரம் பேசலனா எனக்கு பக்கட்து சீட்டுகாரர் என்னையவிட 150 டாலர் கம்மியா வாங்கீருப்பார்.ஒரே பிளைட்டு, ஒரே டிரைவர், ஒரே சாப்பாடு, ஒரே காத்து, பக்கத்து சீட்டு அப்பரம் அவர் மட்டும் எப்படி கம்மியா காசு கொடுக்கலாம்....நமக்கு எரியாதா என்ன.., எனக்கு இந்த விசயத்தில் லல்லு பிரசாத் துறை ரொம்ப பிடிக்கும். இந்த கட்டன குழப்பம் ஏன் என யாராவது சொல்லுங்களேன்.)

ஒரு சுபயோக தினத்தில் குடும்பம் முழுவதும்-க்கும் ஆன டிக்கட்டு கன்பார்ம்டு, (நாங்க ரொம்ம பிளான்டு/அட்வான்சுடு) அதான் ஒரு 3 மாசம் முன்னாடியே புக்கு பன்னாச்சி.

சாப்பிங்,கிப்டு,லொட்டு லொசுக்கு, வாங்கி பெட்டிய நொப்பியாச்சு ஏரோப்பிளேன் கம்பேனி வெப்சைட்டுல போயி ஒரு பெட்டி எவ்லோ kilo இருக்கனும்னு கணக்கு பார்த்துப்பேக்கிங்லாம் ஒரு 15 நாளைக்கு முன்னாடியே முடிச்சாச்சு.ஏரோப்பிளான் ஸ்டேசன்க்கு போறதுக்கு நன்பரிடம் ரைடு கேட்டு எல்லாம் ஓ.கே.

ஏரோப்பிளேன் ஸ்டேசன்ல பெட்டிய எட போட்ட அக்கா இது ரொம்ப ஜா..........ஸ்தி அதுனால கொஞம் எடுத்துடு இல்லன கொஞ்ஜம் பனம் கொடுனு கேட்டாங்க..

இல்லக்க நான் வெப் சைட்டுல பார்த்தேன் அதுல இவ்லோதான் இருந்ததுனு வெளக்கினேன், அது எங்க வெப் சைட்டு இல்ல thats International carries, ours is domestic, we allow only 50 pounds.

ஆமாக்க அது எனக்கும் தெரியும்.ஆனா எனக்கு டிக்கட் கொடுத்தது இன்டர் நேஸனல் ஏர்லைன்ஸ் தான், so I wont pay single penny extra.சில பல தகவல் பறிமாற்றத்திர்கு பிறகு OK sir I will let u go this time, whenever u use our airlines please follow our rules. தேங்ஸ் அக்கா ...அப்படினு வெற்றி களிப்போட திரும்பினால் நன்பர் வெறுத்து போயி டாட்டா கான்பித்தார். அது சரி 30 நிமிசம்-நு கூட்டிட்டு வந்துட்து 1.30 எடுத்துகிட்டா?

அப்பாடா ஏரோப்பிளேனு ஏறி கனெக்டிங் பிளைட் புடிச்சி ஏறி ஒகாந்த உடன் நம்ப செல்லம் அப்பா பசிக்குதுனு ஆரமிச்சிட்டார்.சரினு செவப்பு சட்ட போட்ட பொம்மைகிட்ட போயி அக்கா..அக்கா என் பையனுக்கு பசிக்குது சாப்பாடு கிடைக்குமானு கேட்டேன். அவங்களும் இதோ வரேனு உள்ளார போயி ஸ்கீரின மூடிக்கிட்டாங்க. அது ஆச்சு 10.20.30.40 நிமிசம்னு நம்பல தவிற எல்லாரும் சாப்பிடமாதிரி ஒரு பீலிங்..மறுபடியும் போயி அக்கா கிட்ட கேட்டா உங்க சுற்று வரும் போது உங்களுக்கு சாப்பாடு வரும்னு ஒரு மாதிரி சீன் காட்டிடுசு.

(இதுக்கு நடுவுல கனெக்டிங் பிளைட் பிடிக்கும் போது ஒடோடி வந்த பிஜி (Fiji) இந்தியன் ஐயா நீங்க கைல வச்சிருக்குற பெட்டி ஓவர் சைசு அது தலைக்கு மேல வைக்கமுடியாது,சரி காலுக்கு நடுவில வச்சீக்கிரேன், sorry sir we can't do that you will get ur bag while landingஅப்படினு சொல்லீட்டு ஒரு சீட்டு கொடுத்துட்டு பெட்டிய புடிங்கிட்டு போயிட்டார் நான் தெளிவாய் I want my bag while I changing my other flight it has all importent things அப்படினு சொன்னேன்.)

இத்தனைக்கும் அது ரொம்ப சின்னது அவர் போட்டிருந்த சோடாபுட்டிக்கு ரொம்ம பெரிசா தெரிஜ்ஜிருக்கும் போல.

வந்தது ஐயா சப்பாடு 1.45 நிமிடம் கழித்து. பாவம் பையன் தூங்கிட்டான்.நாங்களும் சாப்பிட்டு ஒரு இந்தி படம் பார்த்துட்டு கொரட்டவிடும் சத்ததில் தூங்கிட்டோம் அது சரி நான் குரட்டை விட்டேனா என்ன ..ம்ம்ம் நல்லா இருக்கே..எங்கிட்ட கேட்டா எப்படி தெரியும்?

அப்பறம் சாக்கிசான் ஊரில் பிளைட் நின்னுச்சி, நம்ம பெட்டி வரும்ம்னு ஏரோப்பிளேன் கதவான்டி நின்னுகெனே இருந்தேனா ஒன்னும் வரலப்பா அப்பால கேட்டாகா அது சென்னைக்கு போயிரும்னு சொன்னாங்க...அக்கா அது கைல எடுத்துகினு போர பெட்டி....... லக்கேஜு இல்லனு சொன்னா அதுக்கு நம்ப பேசுர இங்கீலீசு புரியல...அது பேசுர ஹங்கீலீசு நமக்கு புரியல..வேனும்ம்னா சிங்கபூர்ல தர சொல்லுரேனு சொல்லுச்சு சரினு மறுபட்யும் வெவரமா சொல்லி அந்த பெட்டி வேனும்ம்னு சொல்லிட்டேன்.

படம் வரைந்து பாகம் குறிச்சிட்டோம்ல..

அப்பாட சிங்கபூர் வந்தாச்சு, ஒரு 8 மன்னேரம் இருக்கு, அப்படியே நன்பன் வீட்டுக்கு போயிட்டு ஒரு குளியல் போட்டுட்டு, ரசம் சாப்பிட்டு மருபடியும் சிங்கை ஏர்போட்டுக்கு வந்தா sorry sir our airplane is over booked and you can't travel on this flight we will arrange accommodation you can go in first flight in next morning.

ஆத்தா நான் 3 மாசம் மின்னாடியே புக்கு/நோட்டு லாம் செஞ்ஜாச்சு, இது கன்பார்ம்டு டிக்கட்டு அக்கா, உங்க கம்பியூட்டரில் நல்ல பார்ட்து சொல்லுங்க அக்கா. Yes sir.. we are sure our flight is over booked..கிளி திருப்பி திருப்பி அதெயே சொல்லுச்சு.சரி இது வேலக்க்காவாதுனு ஏர்லைன்ஸ் மேனஜர் பார்த்து பேசலாம்னு அவர எப்படி பார்க்கரதுனு கேட்டா..3மாடி போயி பாருங்க்கனு ரூட் போட்டாங்க.

(இது எனக்கு மட்டும் நேரலை, யார் யார் சென்னை போக இருந்தாங்களே who traveled from USA to Chennai சுமார் 6 குடும்பங்கள்)

Will be continued in 2nd part

5 Sept 2008

Help please- on comments

I coudn't see commenters name on the comments page it shows only said..... does anyone have Idea what to do?

யாராவது குறுக்கு வழி இருந்தால் சொல்லுங்களேன். எனது நன்றியை முன் கூட்டியே தெரிவிக்கிறேன்.

மெயில்-இன் -ரீபேட் அனுபவங்கள். MIR

அமெரிக்காவில் ஒரு பொருளை வாங்கி அதனுடய ரசீது மற்றும் பார்-கோடு ஒரு வின்னப்பத்தில் இனைத்து அனுப்பினால் வாங்கியவிலை அல்லது அவர்கள் குறிப்பிட்டுள்ள தொகையை திருப்பி தருவார்கள்.திருவிழா காலங்களில் (Thanks giving day, Christmas and Long week ends ) மற்றும் சில விஷெச தருனங்களில் இது போன்ற அறிவிப்புகள் அதிகமாக இருக்கும்.

இந்த மாதிரி சமயங்களில் ஊருக்கு கிப்டு, நமக்கு வேன்டும் என்கின்ற எலக்ட்ரானிக் சாமன்களை அதிகமாக அள்ளுவதுன்டு.அட்டை பெட்டியில் உள்ள பார்-கோடு (வால் பையன் கவனிக்கவும் இது அந்த பார் அல்ல) கத்தரித்து ரீபேட் அப்ளிகேசனுடன் இனைத்து அனுப்பவேன்டும்,அந்த மாதிரி அனுப்பிய டீவீடீ பிளேயர் ஒன்றை சொந்தகாரருக்கு அன்பளிப்பாக கொடுத்தேன் அவரும் நன்றி கூறி வாங்கிகொன்டார், விருந்துக்கும் அழைப்பு விடுத்தார்.விருந்துக்கு சென்று வந்த மறுநாள் மற்றொருவர் மூலம் வந்த செய்தி கொஞ்ஜம் அதிர செய்தது.

அதாவது அட்டை பெட்டியில் ஓரிடம் வெட்டப்பட்டு பில் போட உதவும் கோடுகள் இல்லாததால் இது திருட்டு பொருளாக இருக்க வேன்டும், நான் அதைதெரியாமல் வாங்கி வந்து விட்டதாகவும் ஏமாந்து போனதாகவும் காதுகளுக்கு வந்து சேர்ந்தது.

நல்ல வேளை நாந்தான் திருடிட்டு வந்தேனு நினைக்காம போனாங்களே.
இதை அவரிடம் நேரடியாக விளக்கமுடியாது, கூறினால் யார் மூலமாக வந்து சேர்ந்தது என்று ஒரு வேளை தெரிய வரலாம், அதனால் மறுபடியும் அனைவரும் சந்தித்த பொழுது அமெரிக்க நடை முறை வாழ்க்கை, வார இறுதி நாட்கள், சாப்பிங் அனுபவங்கள் போன்ற சில பல பேச்சுகளுக்கு பிறகு Mail-In-rebate பற்றி சொன்னபொழுது அடுத்த வந்த வார்த்தை நெஜமாகவே அதிரத்தான் செய்தது.

அவன் என்ன கேன கிறுக்கனா...வாங்கின பனத்தை திருப்பி தருவதற்கு? என்னமோ சாமி நீ சொல்லுற நாங்க நம்புரோம் அப்பு.....அப்படினா அங்க எல்லா ஜாமனும் இப்படிதானா?


அவருக்கு இதுக்கு மேல புரியவைக்க முடியாதுனு/சொன்னாலும் புரியாதுனு ஒரு சிரி சிரித்து விட்டு எழுந்து விட்டேன்.இத்தனைக்கும் அவர் அந்த காலத்து PUC. ஆனாலும் அவருக்கு இன்னும் அது திருட்டு பொருளாகத்தான் தெரியும்னு நினைக்கிறேன்.



குறிப்பு: அவருக்காக வாங்கிய டீவீடீ பிளேயருக்கான் ரோபீட்டு சீ...(director சங்கரின் அறிவிப்பு new film படித்ததில் குழப்பி விட்டது) ரீபேட்டு 3 மாதங்கள் கழித்து நேற்று வந்து சேர்ந்தது.

இதுல நான் வால் பையனை வம்புக்குலாம் இழுக்க வில்லை சாமி...(மனசாட்சி சீ..சீ..பொய் சொல்லகூடாது)

ஏய்ய்ய்ய்ய்ய்ய் கொஞ்ஜம் சும்மாஇரு வாலுக்கிட்ட சொல்லி ஒரு கட்டிங் வாங்ககி தரேன்.

28 Mar 2008

America -911- Experiance

ரொம்ப நாள் ஆச்சுபா பதிவிட்டு இப்பதான் ஒரு சுவாரிசியமான விசயம் நடந்தது அதான் பகிர்ந்து கொள்ளலாம் என்று வந்துள்ளேன்.

அமெரிக்காவில் அவசர தேவைக்கு 911 என்ற நம்பரை அழைத்தால் அதிகபட்சம் 9 நிமிடத்தில் வந்துவிடுவார்கள். நான் சாக்ரமென்டோ வந்த புதிதில் ஒருமுறை அழைத்துள்ளென்.இன்று ஒரு அழையா அழைப்புக்க்கு வந்து நோன்டி நொங்கு எடுத்துவிட்டார்கள்.இந்தியா தொலைபேச காலிங் கார்டு வாங்கி கட்டுபடிஆகலை என்ரு ஒரு VOIP (http://www.majicjack.com/) அடாப்டர் வாங்கி அனுப்பினேன்.அதற்கு பிறகு காலிங் கார்டு பக்கம் போவதே இல்லை.

நாங்கள் பேசியதை பார்த்து அகலப்பட்டை வைத்துளல அனைத்து இந்திய நன்பர்களும் எனக்கு உனக்கு என்று ஆளாளுக்கு ஒன்று கேட்டார்கள்(வருடத்திற்கு 1000 ரூபாய் அவர்களுக்கு ஓன்றும் இல்லையாம்).

அதில் உள்ள சாதக பாதகங்கல்ளை தெளிவாக கூறி நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டேன். (ஆமா இவங்களுக்கு எதுக்கு அமெரிக்க போன் நம்பர் தெரியுமா? அதுல ஒரு பெரிய விஸயம் இருக்கு அப்பரம ஒருனாள் சொல்லுறேன்)

நான் ஒரு அப்பாவி/வெவரம் தெறியாத சின்னபிள்ளைங்க ஒரு மாதிரி என்னை கன்வின்ஸ் செய்து முதலில் 2 நன்பர்கள் வாங்கி விட்டார்கள்.அவங்க பேசுறதை பார்த்து/உபயோகிப்பதை பார்த்து இன்னும் ஒரு 5 பீஸ்க்கு ஆர்டர் வந்தது. பந்தாவா வாங்கி அனுப்பிவிட்டேன். அவர்களும் தொழில் முறையாகவும், நட்பாகவும் ஒழுங்காக use செய்தார்கள். இதை வாங்கும் போது நாம் வசிக்கும் இடத்தை குறிப்பிட்டு ரெஜிஸ்டர் செய்ய வேன்டும்,இது இங்கு சட்டம். ( If we register the wrong address it wont register your name,Y they have address data base and it should match with the registration address)

கடந்த 7 மாசமா ஒழுங்காகதான் இருந்தது.இன்னிக்கு காலையில் ஒரு 6.30 மனிக்கு கதைவை சத்தமாக தட்டும் சத்தம் கேட்டு குளியல் அறையில் இருந்து ஓடி வந்தேன்.திறந்தால் கருப்பு சட்டை அனிந்த வாட்டசாட்டமன் காவல்துறை அதிகாரி. எனக்கு ஆச்சிரியமாகவும்,எதற்கு என்ற ஒரு வியப்பாகவும் இருந்தது.

Officer: Sir we have received an emergency call form your phone number/addres are u alright, you guys doing OK?

Me: We're OK but we havn't called 911.

இல்லை இதுதானே அட்றசு, போன் நம்பர்னு ஒரு நம்பர் கொடுத்தார். நான் பார்த்துவிட்டு அட்றசு சரிதான் ஆனா போன் நம்பர் இது இல்லைனு சொன்னேன்.ஒரு நிமிடம்னு தன்னுடைய காரில் உள்ள கம்யூட்டரில் தகவல்களை சரிபார்த்து விட்டு நான் வாங்கிய சரித்திரத்தை எனக்கு தெளிவாக கூறினார்.அப்பரம் தான் நியாபகம் வந்தது அது இந்தியாவிற்கு வாங்கிய Majic Jack number என்று.அவரிடம் விவரத்தை சொல்லி மன்னிப்பு வேண்டினேன். அவர் அதை நம்பிய மாதிரி தெரியவில்லை, கீழே காருக்கு சென்று ஒரு 3 நிமிடம் கழித்து வந்தார்.

If it happens again you will be in big trouble coz this number is registred with your name and address and you are the responce for all the activites.ஒரு கடுமையான் வார்னிங் கொடுத்து சில அட்வைஸ் களும் இலவசமாய் கொடுத்து இந்த நாள் மகிழ்சிகரமாக இருக்க வாழ்த்துகள் என்று சிரித்துவிட்டு போனர்.(அது சரி காலையிலே கடுப்படிச்சிட்டானுங்க இனிமே என்னத்தை சந்தோசமான் நாளு)

அவரை அனுப்பிட்டு அதே கோபத்தோடு இந்தியா நம்பருக்கு கூப்பிட்டா மக்கள் தெளிவாக மப்பில் சிரித்தார்கள்.சும்ம டெஸ்டு பன்னி பார்த்தார்களம்

நான் நடந்ததை கூறினேன், மப்பில் இருந்தவர்ளுக்கு புரிந்ததா ந்ன்று தெரியவில்லை, சிரி சிரி என்று சிரித்தார்கள், மாப்ளெ உங்க ஊரி போலிசு சூப்பரா வேலை செய்ராங்கபானும் ஒரு கமென்டு வேற. கையோடு மேஜிக் ஜாக் கஸ்டமர் சர்வீஸ் கூப்பிட்டு என்னுடைய அடாப்டர் while in travel தொலந்துவிட்டது அப்படினு ஒரு கம்ளைன்டு செய்து விட்டேன் அதற்கு அவர்கள் சரி நாட் எ பிராப்ளம் வி வில் சென்ட் அனொதெர் அடாப்டர்னு சொலிலிடாங்க.

ஊரு பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க தெருவில போற ஓனான எடுத்துகிட்டு சூ...ல சொரிகி கிட்டு அப்பறம் குத்துதெ கொடையுதேனு பொலம்பினா நான் என்ன பன்றது?அந்த மாதிரி ஆச்சு இன்று

Sorry for the எழுத்து பிழைகள்

3 Feb 2008

Computer's

இன்டர்நெட் பயன்படுத்தும்போது பல டெம்பரரி பைல்கள் உருவாகி டெம்பரரி போல்டரில் தேங்குகிறது. இதனை அவ்வப்போது அழிக்க என்ன கட்டளை கொடுக்க வேண்டும்?

இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools> Internet options> Advanced என்றபடி செல்லவும். கிடைக்கும் விண்டோவில் கீழாகப் பார்த்துக் கொண்டே சென்றால் Under securites-Empty temporary internet files when browser is closed என்ற வரி தென்படும். அதன் அருகே உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்திவிட்டு ஓகே அழுத்தி வெளியேறவும். இனி உங்கள் இணைய உலா முடிந்தவுடன் அங்கு பதியப்பட்ட அனைத்து டெம்பரரி பைல்களும் அழிந்துவிடும்.


இன்டர்நெட் பிரவுசிங்கின் போது பயன்படுத்தும் முகவரிக்கான எண்களில் அமைந்த முகவரியினை எந்த தளம் நமக்குக் காட்டும். பல தளங்களில் தேடியும் அதற்கான சாப்ட்வேர் கிடைக்கவில்லை. தயவு செய்து கன்வெர்ஷன் செய்யக் கூடிய வெப்சைட் அட்ரஸ் தரவும்.<

இதற்கு இணையத்தை எல்லாம் தேடாதீர்கள். உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பி எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். இன்டர்நெட் இணைப்பை ஏற்படுத்தி இயங்க வைத்திடுங்கள். பின் கம்ப்யூட்டரில் startபட்டன் அழுத்தி கிடைக்கும் மெனுவில் Run பிரிவில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் கீதண விண்டோவில் cmd என டைப் செய்திடவும். இனி உங்களுக்கு டாஸ் பிராம்ப்ட் கருப்பு கட்டத்தில் கிடைக்கும். அதில் tracert என டைப் செய்து (trace route என்பதின் சுருக்கம்) இடம் விடாமல் நீங்கள் எண் காணவிரும்பும் முகவரியினைத் தவறில்லாமல் டைப் செய்து என்டர் அழுத்தவும். உடனே முதல் வரியிலேயே அடைப்புக் குறிக்குள் எண் கிடைக்கும். ஆனால் அந்த சர்வரை அடைய என்ன சர்வர்கள் வழியாக ரூட் செல்கிறது என்று வேகமாகக் காட்டப்பட்டு இறுதியிலும் அந்த இணைய தளத்திற்கான முகவரி எண்களில் கிடைக்கும்.

டாஸ்க் பாரில் உங்கள் பெயர்.

உங்கள் பெயர் டாஸ்க் பாரில் கிடைக்கக் கீழ்க்கண்டவாறு செயல்படவும். start பட்டன் அழுத்தி கண்ட்ரோல் பேனல் செல்லவும். பின் இதில் Regional and Language Options என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இதில் Regional Languageஎன்ற பிரிவில் advanced என்ற கட்டத்தில் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் விண்டோவில் time என்பதைத் தேர்ந்தெடுத்து என்டர் தட்டவும். இப்போது கம்ப்யூட்டரில் நேரம் செட் செய்திடும் விண்டோ கிடைக்கும். இதில் காணப்படும் இரண்டாவது பிரிவில் am சிம்பல் மற்றும் pm சிம்பல் என இரு வரிகள் இருக்கும். இதன் உள்ளே இருக்கும் தகவல்களைக் காலி செய்து உங்களுக்குப் பிடித்தமான பெயரை டைப் செய்திடவும் .இரண்டிலும் ஒரு பெயர் இருக்கலாம். அல்லது ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பெயர் இருக்கலாம். பின் மேலாக உள்ள டைம் பார்மட் என்ற பகுதிக்குச் செல்லவும். h.mm.ss.tt அல்லது hh.mm.ss.tt. என்பதனைத் தேர்வு செய்து apply கிளிக் செய்து ஓகே கொடுத்து வெளியேறவும். இனி டாஸ்க் பாரில் உங்கள் பெயர், மணி காட்டும் எண்களை அடுத்து இருக்கும். இரண்டு பெயர் கொடுத்திருந்தால் ஒரு பெயர் காலையிலும் இன்னொன்று மற்ற நேரங்களிலும் தெரியும்.

ஒரு குறிப்பிட்ட இமெயிலை பெறுபவர் பெற்றுவிட்டார் என ரெசிப்ட் பெறுவது எப்படி? எனக்கு வரும் சில மெயில்கள் அவ்வாறு கேட்கின்றன.

கேட்கும் டயலாக் பாக்ஸில் nevr என்பதைக் கிளிக் செய்துவிடலாம். நீங்கள் உங்கள் மெயிலுக்கு ரெசீப்ட் பெறக் கீழ்க்கண்டவாறு செட் செய்திடவும். அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் click mail என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது புதிய மெயில் அமைப்பதற்கான விண்டோ கிடைக்கும். இதில் மெசேஜ் அமைத்த பின்னரோ அல்லது அதற்கு முன்னரோ tools என்பதனைக் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் request read receipt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இது நீங்கள் அனுப்பும் மெயிலுக்கு மட்டும் படித்ததற்கான / பெற்றதற்கான ரசீதினைக் கேட்டு அனுப்பும்.

என் அலுவலகக் கம்ப்யூட்டரில் என்னுடைய சி.டி.யில் காப்பி செய்த பைல்களைக் கையாண்டு வருகிறேன். அலுவலகக் கம்ப்யூட்டரில் எதனையும் பதிவதில்லை. ஆனால் MY RECENT DOCUMENTS என்பதில் அவை தெரிகின்றன. இவற்றை எப்படி அழிப்பது?

கீழாக உள்ள டாஸ்க் பார் செல்லுங்கள். அங்கு எதுவும் இல்லாத இடத்தில் மவுஸ் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் புராபர்ட்டீஸ் தேர்ந்தெடுங்கள். "Taskbar and Start Menu Properties" என்னும் விண்டோ கிடைக்கும். இதில் start menu என்னும் டேபில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் customize என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் Customize Start Menu என்ற விண்டோ கிடைக்கும். இதில் advanced என்ற பட்டனில் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் கீழாக my recent documentsஎன்ற பிரிவு இருக்கும். அதில் List my most recently opened documents என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருக்கும். அதன் அருகே clear listஎன்று உள்ள பெட்டியில் கிளிக் செய்திடவும். Recent Documents என்ற பிரிவில் உள்ள பைல்கள் அனைத்தும் காலி செய்யப்பட்டிருக்கும்

தேதி குறித்து பைல் அழிக்க

இன்டர்நெட்டில் தளங்களைப் பார்வையிடுகையில் மேற்கொள்ளும் செயல்களாலும், ஸிப் செய்யப்பட்ட பைல்களை விரிக்கும் போதும் எனப் பல நேரங்களில் விண்டோஸ் இயக்க பைல்கள் உள்ள டிரைவில் காணப்படும் டெம்பரரி போல்டரில் பல பைல்கள் உருவாக்கப்பட்டுத் தேங்கும். இது ஹார்ட் டிஸ்க் இடத்தைத் தேவையில்லாமல் அடைத்துக் கொண்டிருக்கும். இதனை அவ்வப்போது காலி செய்வதே நல்லது. மொத்தமாகக் காலி செய்வதால் எந்தப் பிரச்னையும் வராது. இருந்தாலும் ஒரு சிலர் குறிப்பிட்ட நாளுக்கு முன் ஏற்பட்ட பைல்களை மட்டுமே காலி செய்திட விரும்புவார்கள். அண்மையில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக பைல்கள் ஒரு வேளை தேவைப்படலாம் என்பதே அவர்கள் அச்சம். இவ்வாறு அழிப்பதற்கு தூ my computer ஐகானில் இருமுறை கிளிக் செய்திடுங்கள். நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பியில் இயங்குபவராக இருந்தால் ஸ்டார் கிளிக் செய்து பின் தூ my computer- ல் கிளிக் செய்திடலாம். பின்னர் சி டிரைவில் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் விண்டோஸ் போல்டரில் கிளிக் செய்திடவும். அதன்பின் கிடைக்கும் பட்டியலில் temp என்ற போல்டரைக் கிளிக் செய்து திறக்கவும். இதில் modified அல்லது date modified என்ற பிரிவில் கிளிக் செய்தால் அதில் உள்ள பைல்கள் தேதி வாரியாக அடுக்கப்படும். இப்போது எந்த தேதிக்கு முன்னர் உள்ள பைல்களை அழிக்க விரும்புகிறீர்களோ அந்த பைல்களைத் தேர்ந்தெடுத்து ஷிப்ட் டெலீட் கொடுத்து அழித்துவிடலாம். இதனால் பைல்கள் ரீசைக்கிள் பின்னுக்குச் சென்று அங்கு இடத்தைப் பிடிக்காமல் முற்றிலுமாகக் காலி செய்யப்படும்.