05-Sep-2008

மெயில்-இன் -ரீபேட் அனுபவங்கள். MIR

அமெரிக்காவில் ஒரு பொருளை வாங்கி அதனுடய ரசீது மற்றும் பார்-கோடு ஒரு வின்னப்பத்தில் இனைத்து அனுப்பினால் வாங்கியவிலை அல்லது அவர்கள் குறிப்பிட்டுள்ள தொகையை திருப்பி தருவார்கள்.திருவிழா காலங்களில் (Thanks giving day, Christmas and Long week ends ) மற்றும் சில விஷெச தருனங்களில் இது போன்ற அறிவிப்புகள் அதிகமாக இருக்கும்.

இந்த மாதிரி சமயங்களில் ஊருக்கு கிப்டு, நமக்கு வேன்டும் என்கின்ற எலக்ட்ரானிக் சாமன்களை அதிகமாக அள்ளுவதுன்டு.அட்டை பெட்டியில் உள்ள பார்-கோடு (வால் பையன் கவனிக்கவும் இது அந்த பார் அல்ல) கத்தரித்து ரீபேட் அப்ளிகேசனுடன் இனைத்து அனுப்பவேன்டும்,அந்த மாதிரி அனுப்பிய டீவீடீ பிளேயர் ஒன்றை சொந்தகாரருக்கு அன்பளிப்பாக கொடுத்தேன் அவரும் நன்றி கூறி வாங்கிகொன்டார், விருந்துக்கும் அழைப்பு விடுத்தார்.விருந்துக்கு சென்று வந்த மறுநாள் மற்றொருவர் மூலம் வந்த செய்தி கொஞ்ஜம் அதிர செய்தது.

அதாவது அட்டை பெட்டியில் ஓரிடம் வெட்டப்பட்டு பில் போட உதவும் கோடுகள் இல்லாததால் இது திருட்டு பொருளாக இருக்க வேன்டும், நான் அதைதெரியாமல் வாங்கி வந்து விட்டதாகவும் ஏமாந்து போனதாகவும் காதுகளுக்கு வந்து சேர்ந்தது.

நல்ல வேளை நாந்தான் திருடிட்டு வந்தேனு நினைக்காம போனாங்களே.
இதை அவரிடம் நேரடியாக விளக்கமுடியாது, கூறினால் யார் மூலமாக வந்து சேர்ந்தது என்று ஒரு வேளை தெரிய வரலாம், அதனால் மறுபடியும் அனைவரும் சந்தித்த பொழுது அமெரிக்க நடை முறை வாழ்க்கை, வார இறுதி நாட்கள், சாப்பிங் அனுபவங்கள் போன்ற சில பல பேச்சுகளுக்கு பிறகு Mail-In-rebate பற்றி சொன்னபொழுது அடுத்த வந்த வார்த்தை நெஜமாகவே அதிரத்தான் செய்தது.

அவன் என்ன கேன கிறுக்கனா...வாங்கின பனத்தை திருப்பி தருவதற்கு? என்னமோ சாமி நீ சொல்லுற நாங்க நம்புரோம் அப்பு.....அப்படினா அங்க எல்லா ஜாமனும் இப்படிதானா?


அவருக்கு இதுக்கு மேல புரியவைக்க முடியாதுனு/சொன்னாலும் புரியாதுனு ஒரு சிரி சிரித்து விட்டு எழுந்து விட்டேன்.இத்தனைக்கும் அவர் அந்த காலத்து PUC. ஆனாலும் அவருக்கு இன்னும் அது திருட்டு பொருளாகத்தான் தெரியும்னு நினைக்கிறேன்.குறிப்பு: அவருக்காக வாங்கிய டீவீடீ பிளேயருக்கான் ரோபீட்டு சீ...(director சங்கரின் அறிவிப்பு new film படித்ததில் குழப்பி விட்டது) ரீபேட்டு 3 மாதங்கள் கழித்து நேற்று வந்து சேர்ந்தது.

இதுல நான் வால் பையனை வம்புக்குலாம் இழுக்க வில்லை சாமி...(மனசாட்சி சீ..சீ..பொய் சொல்லகூடாது)

ஏய்ய்ய்ய்ய்ய்ய் கொஞ்ஜம் சும்மாஇரு வாலுக்கிட்ட சொல்லி ஒரு கட்டிங் வாங்ககி தரேன்.

7 comments:

துளசி கோபால் said...

நான் நம்புறேன்.

போனமாசம் 25% திருப்பித்தரேன்னு சொன்னாங்க. ஒரு ப்ரிண்டர்&ஸ்கேனர்ன்னு 4 விதமான ஃபங்ஷன் இருக்கு.

ஆனா அவுங்களும் முழிச்சுக்கிட்டாங்க போல நம்ம பேங்க் அக்கவுண்டுக்குக் காசை அனுப்புனாங்க. உள்ளூர் மக்கள் மட்டும் பயன்படுத்திக்கணும் என்ற காரணத்தால்.

டூரிஸ்ட் நம்ம உறவு அல்லது நண்பரா இருக்கும் பட்சத்தில் நாம் நம்ம பெயரில் ( அவுங்க காசுலேதான்)வாங்கிக்கொடுத்தால் ஆகாதா?

என்னமோ போங்க. வியாபார நுணுக்கம் இப்படியெல்லாம் இருக்கு.

Beemboy-Erode said...

வருகைக்கு நன்றி துளசி கோபால் அவர்களே. நடந்ததை சரியாக் நான் விளக்கவில்லையோ? நான் அவருக்கு அன்பளிப்பு அளித்து தான் அந்த பெயர் வாங்கிகொன்டேன்.

துளசி கோபால் said...

சரியாத்தான் விளங்குது.

நம்ம ஊர்லே எதாவது வாங்கிட்டு அடுத்த நிமிசமே வேணாமுன்னு சொன்னால் திரும்பி வாங்கிக்க மாட்டாங்க. அந்தப்பழக்கம் இருப்பதால்தான் அவுங்க யாரும் நம்பலை. போகட்டும் விடுங்க. நமக்குத் தெரியுமுல்லே என்ன நடந்துச்சுன்னு:-))))

கேரண்டி இருக்கும் பொருட்களை, வேலை செய்யலைன்னு திருப்பிக் கொடுத்த அனுபவம் இந்தியாவில் இருக்கா? நாம்தான் தலையால் தண்ணி குடிக்கணும்.

கஷ்டமர் சர்வீஸ் அந்த அழகுலே இருக்கும்(-:

கார்த்திக் said...

அண்ணா நலமா
அந்த மடிக்கணினி பர்கோடையும் செலுத்தி பாக்கியை அனுப்பி வைங்க.

Beemboy-Erode said...

கார்த்தி மடிக்கணனி ரீபேட்டு அனுப்பிட்டேன், ஒரு 10 வருசம் கழிச்சி உங்க அக்கவுன்டுல சரி பாருங்க.... ::::)- அப்பறம் எப்படி இருக்கீங்க?

துளசி என்னங்க கேரன்டி பீரியடுல சர்வீஸ் தான் செய்து தருவார்கள் ரிட்டர்ன் எடுத்துகிட்டா அவங்க காலிதான்.

அதனாலதான் அதுக்கு பேரு கஷ்டம்(ர்) சர்வீஸ். :::)-

துளசி கோபால் said...

இங்கே நியூஸியில் வேலை செய்யலை, ரிப்பேருக்கு அனுப்புனாலும் எங்கே ஃபால்ட்ன்னு கண்டுபிடிக்க முடியலை. இதெல்லாம் இல்லையா 'ஐ ஆம் நாட் ரியலி ஹேப்பி அபௌட் திஸ்'ன்னு சொல்லி இருக்கேன்.

காசும் திருப்பிக் கொடுத்துருக்காங்க.

அதேபோல ஒரு பொருளை வாங்கிட்டு, மறுநாள் அதுக்கு ஸேல் விளம்பரம் வந்துருந்தா, வாங்குனதை ரிட்டர்ன் செஞ்சுட்டு அதையே buy back ன்னு ஸேல் விலைக்கு வாங்கிக்கலாம்.

எதுவும் வாங்குனபிறகு 7 நாளுக்குள்ளே திருப்பிக் கொடுக்கலாம், நாட் ஸேட்டிஸ்ஃபைடுன்னு.

வால்பையன் said...

அண்ணா ஊருக்கு போய் பதிவு எழுத இவ்வளவு நாளா?
கால் எப்படி இருக்கு?

அப்புறம் தமிழ் நாட்ல பார்கோடோட வர்ற பொருள்கள் கம்மி.
ஆனா மூலைக்கு மூலை பார் இருக்கு.