17 Dec 2008

வாழ்த்துக்களும்/ விளம்பரங்களும்

சில வருடங்களுக்கு முன்னால் தினமலர்-ல்(ஈரோடு பதிப்பு) வரும் விளம்பரங்கள் கவனத்தை ஈர்த்தது, அதாவது யராவது வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றாலோ அல்லது கருத்தரங்குகளில் கலந்து கொண்டாலோ வாழ்த்தி அனுப்பும் வரவேற்கும் விளம்பரங்கள் அதிகம் இருக்கும். அப்போது மக்கள் குறைவாகத்தான் விமானப்பயணம் செய்தார்கள்.(1990- 1998)உதாரனமாக இன்று கிழக்காசிய நாடுகளுக்கு சுற்று பயனம் மேற்கொள்ளும் எனது மருமகன் xxxxxxxx அவர்களை வாழ்த்தி வழியனுப்பும்
மாமனார் xxxx மாமியார் xxxxx கொழுந்தியா xxxxxx சித்தப்பா xxxxxx சித்தி xxxxxx
மாமா xxxxxx மற்றும் உறவினர்கள். என்று ஒரு விளம்பரம் வரும், 4 தினங்கள் கழித்து இன்று சுற்றுப்பயனம் முடித்து தாய் நாடு திரும்பும் எனது xxxxxxx வாழ்த்தி வரவேற்கும் xxxx
என்று ஒரு விளம்பரம் வரும்.

சில விளம்பரங்களில் கருத்தரங்க்கிற்கு செல்லும் எனது அலுவலக தோழர்xxxx அவர்களை வாழ்த்தி/வரவேற்கும் விளம்பரங்கள் வர ஆரமித்தது.பின்னாளில் டாட்காம் பெரும் வளர்ச்சியை சந்தித்த போது வாரத்திற்கு 3 விளம்பரங்கள் வர ஆரமித்தது.அந்த விளம்பரங்கள் இவ்வாரு இருந்தது.பணி நிமித்தமாக இன்று அமெரிக்கா செல்லும் எனது xxxxx தனது பனியில் சிறப்பித்து சீருடன் விளங்க வாழ்த்தும்-

மாமனார் xxxx மாமியார் xxxxx கொழுந்தியா xxxxxx சித்தப்பா xxxxxx சித்தி xxxxxx
மாமா xxxxxxx.

1) இந்த வருடம் இந்தியா சென்ற போது பார்த்த விளம்பரங்கள் சற்றே வித்யாசமாக இருந்த்து, அதாவது அமெரிக்காவில் உல்ள --- யூனிவர்சிட்டியில் மேல் படிப்பு முடித்து இன்று பணியில் சேரும் எனது அண்ணன் மகள்------ அவர்கள் பணியில் சிறப்பிக்க வாழ்த்தும்----------.

2)பணி நிமித்தமாக சென்றவாரம் நெதர்லாந்து சென்று இன்று அங்கிருந்து நியூசிலாந்து செல்லும் எனது-----அவர்களை வாழ்த்தி அனுப்பும்------

3)பணி நிமித்தமாக 7 வது முறையாக அமெரிக்கா செல்லும்----அவர்களை வாழ்த்தி வழியனுப்பும் ------

ஐ.டி என்ற துறை வந்த பிறகு நிறைய பேரு விமானப்பயனம் மெற்கொன்டுள்ளனர், அவர்களும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்லவேண்டியுள்ளது, ஒவ்வொருமுறையும் இவ்வாறு விளம்பரம் செய்தால் (புகைப்படத்துடன், டை கட்டிக்கொண்டு)அது அவர்களுக்கு சங்கோஜமாக இருக்காதா?

6 comments:

வால்பையன் said...

அடடே நீங்க போகும் போது கூட ஒரு விளம்பரம் கொடுத்திருக்கலாமே!

வால்பையன் said...

எங்க ரொம்ப நாளா ஆளக்காணோம்!
அடிக்கடி எழுதுங்க

வால்பையன் said...

இன்னும் சில நாட்களில்

பணி நிமித்தமாக ஈரோட்டிலிருந்து சென்னை செல்லும் அன்பு கொழுந்தனாருக்கு வாழ்த்துக்கள்

இங்கனம்

மாமா *******
மாமி *******
அண்ணன் ******
அண்ணி ********

வால்பையன் said...

வெற்றிகரமாக திருப்பதி சென்று மொட்டையடித்து வீடு திரும்பும்,
எங்கள் வீட்டு அன்பு வேலைக்காரர் சுப்பையாவை வாழ்த்தி வரவேற்கிறோம்.

இப்படிக்கு
முதலாளி *******
முதலாளியம்மா *******
சின்ன முதலாளி **********
சின்ன முதலாளியம்மா *********


:)

KARTHIK said...

// (புகைப்படத்துடன், டை கட்டிக்கொண்டு)அது அவர்களுக்கு சங்கோஜமாக இருக்காதா? //

நம்ம பையன் ஒருத்தன் இப்போ ரஸ்யா போனான் நான் விளம்பரம் கொடுக்குரேன்னு சொன்னேன்.கால்ல உலுவாதாகொரையா கெஞ்சினான் அப்படி எதுவும் பன்னீராதிங்கன்னு.

அதுக்கு இந்த சங்கோஜம் தான் காரணமா.

நீங்க வெனா வரும் போது சொல்லுங்க.

நம்ம இ கா வலசு ரோட்டுல ஒரு கட்டவுட்டே வெச்சுருவோம்.

Beemboy-Erode said...

வருகைக்கு நன்றி வால்பையன், கார்த்திக். நமக்கு, கட்டவுட்டு மட்டும் பத்தாது, தாரை, தப்பட்டை, கெண்டை மேளம் முழங்க ஒரு டஜன் ஆட்கள் ஆட, விசில் காதை பறிக்க (ஏதோ ஒரு படத்தில் லிவிங்ஸ்டன் செய்வாரே) அந்த மாதிரி வரவேற்பு கொடுத்தால் நன்றாக இருக்கும். அப்பரம் ஒரு முக்கியமான விஸயம்...காசு, கீசு கேட்டுறாடீங்க

நிறைய எழுதனும்னு தான் ஆசை, எங்க நேரம் தான் கிடைக்க மட்டேன்குது...தமிழ் தட்டச்சு மறந்து விட போய் கூடாதுனுதான் இந்த பதிவே...