13 Sept 2007

கஸ்டம்ஸ் ரூல்ஸ்- ஒரு அனுபவம்

அமெரிக்காவில் டாக்கிங் குளோப் ( Talking Globe) சூப்பர் சீப் ஆக கிடைத்தது, சரி நண்பரின் 10 வயது மகளுக்கு கிப்ட் ஆக கொடுக்கவாங்கினேன்.

அதில் உள்ள மைக்ரோ சிப் அனைத்து தகவலையும் உடனடியாக வேன்டும் பொழுது சொல்லுகிறது.

உதாரணமாக ஒரு நாட்டின் மேல் அதனுடன் இனைக்கப்பட்டிருக்கும் பேனாவால் தொட்டால் அந்த நாட்டின் தலைநகரம், பணத்தின் பெயர், ஊர்களுக்கு இடையேயான தூரம், மற்றும் பல பொது அறிவுக்கேள்விக்கான விடைகளை சொல்லுகிறது.சரி படிக்கும் குழந்தைக்கு உபயோகமாக இருக்கும் என்று வாங்கினேன்.

சில நாட்கள் கழித்து பெடக்ஸ் (fedex) கொரியர் மூலம் 20 டாலருக்கு இந்தியாவிற்கு அனுப்ப ஒரு சான்ஸ் கிடைத்தது.சரி நாம் இந்தியா போக இன்னும் சில மாதங்கள் இருக்கிறதே என்று இந்த கொரியர் மூலம் அனுப்பினேன், அதுவும் சரியான் தேதியில் மும்பை சென்று ( Thanks to the tracking s/w which developed by a Gr8 Indian) கஸ்டம்ஸ் கிளியர்ன்ஸ்காக 9 நாட்கள் காத்து கிடந்தது. 13 வது நாள் நன்பரிடம் இருந்து ஒரு மெயில் வந்தது,

I received a letter from Mumbai Customs saying that I have a pending parcel from USA and the senders name is yours and it contains prohibted item, and need to pay the customs duty of Rs, 15,000. If you have any questions please contact the clearance agents.

சரி என்று நன்பருக்கு தொலைபேசினேன்...விவரங்கள் மற்றும் கஸ்டம்ஸ் ஆபிஸ் , ஏஜென்டு தொலைபேசி விவரங்களை வாங்கிகொன்டேன்.மும்பை ஏஜன்டுக்கு தொலைபேசினேன், அவர்கள் அளித்த பதில் சற்று வித்யாசமாக இருந்தது. அதாவது வெளிநாட்டில் இருந்து வரும் மேப் எல்லாம் தவறான இந்திய எல்லைகளை கொண்டிருக்குமாம், இந்திய அரசு கஸ்டம்ஸ் சட்டவிதிகளின் படி அனுமதிக்க முடியாதாம், சரி டூட்டி கட்டினால் அது எப்படி சரியாகும் என்று கேட்டதற்கு அதற்கு அவரால் விடை அளிக்க முடியவில்லை. மேலும் விவரங்களுக்கு கஸ்டம்ஸ் ஆபிசை தொடர்புகொள்ள சொன்னார்.

சரி என்று அங்கு தொடர்புகொண்டால் கீரல் விழுந்த ரெக்கார்டாக் அதே பதில், இந்திய அரசு நிறுவனமான மேப் அவுஸ் ஆப் இந்தியா ( Map house of
India) மேப் மட்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது மேலும் விவரங்கள் இல்லை என்று சொல்லிவிட்டார், சரி இந்த சட்டங்கள் எந்த வருடத்து சட்டம் என் வினவியபொழுது இது 1947 என்று கூறினார்கள். (அது சரி)

எனக்கு எழுந்த கேள்விகள்.

1)Indian Map house வெளிநாட்டில் ஏதும் பிரின்ட் செய்கிறதா?

2)1947 க்கு பிறகு சட்டங்கள் மாறவில்லையா? அல்லது இந்த அறிவு ஜீவிகளுக்கு update செய்துகொல்ள மனதில்லையா?

3)தடைசெய்து உள்ள பொருளை சுங்கவரி கட்டினால் இந்திய எல்லைக்குள் அனுமதிப்பார்களாம், இது எப்படி என்று புரியவில்லை.

பின் குறிப்பு: இந்தியாவில் தடை செய்யப்பட்ட பொருட்கள் யாருக்காவது வேண்டுமானால் பின்னூட்டம் இடுங்கள், நீங்கள் சுங்கவரி கட்டுவதனால் நான் வாங்கிவர தயார். ( அசல் விலை + சுங்கவரி).

பின் பின் பின் பின் பின் குறிப்பு: சைலன்சர் வைத்த துப்பாக்கி நிறைய சீப்பாக கிடைக்கிறது, பிளாக்கரில் சன்டை போடுவர்களுக்கு உபயோகமா இருக்குமா?

5 comments:

dondu(#11168674346665545885) said...

இதை விட அபத்தமான சட்டம் வருமானவரி விதிகளில் உண்டு. அதாவது லஞ்சமாகப் பெற்ற பணத்துக்கும் வருமான வரி செலுத்த வேண்டுமாம்.

தண்டனையும் கொடுப்பார்களாம். அது தனியாம். என்ன லாஜிக்கோ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ஐயா தடை செய்யப்பட்ட பொருட்களை விடுங்கள். அண்மையில் ராஜிவ் கொலை வழக்கைத்துப்புத்துலக்கிய டி.ஆர்.கார்த்திகேயன் எழுதிய 'Triamph of Truth' என்ற புத்தகத்தின் தமிழாக்கம் 'வாய்மையே வெல்லும்' 15 பிரதிகள் எடுத்துச் சென்ற ஒருவரை சென்னை விமான நிலையத்தில் புலி ஏஜண்ட் என கைது செய்தது அறிந்தீர்களா?

வடுவூர் குமார் said...

இதுக்கு பேர் தான் red-tapisum.
பல சமயம் தொலைக்காட்சியில் இந்தியா மேப்பில் காஷ்மீர் இருக்காது,அதெல்லாம் கேட்கமாட்டார்கள்.இந்த மாதிரி ஏதாவது வந்தால் தான் பேப்பரை எடுத்துவைத்துக்கொண்டு ரூல் பேசுவார்கள்.

இலவசக்கொத்தனார் said...

//சைலன்சர் வைத்த துப்பாக்கி நிறைய சீப்பாக கிடைக்கிறது, பிளாக்கரில் சன்டை போடுவர்களுக்கு உபயோகமா இருக்குமா?//

நீங்க வேற இங்க எல்லாம் பொட்டு வெடி துப்பாக்கிக்கூட பயப்பட்டு காதை மூடிக்கிட்டு மத்தாப்பு கொளுத்தறவங்கதான் அதிகம். நீங்க வேற துப்பாக்கி அது இதுன்னுக்கிட்டு. எல்லாம் வாய் பேச்சுங்க.

வவ்வால் said...

வெளிநாட்டில் அச்சடிக்கப்பட்ட மேப்கள் காஷ்மீரை சரியாகக்காட்டுவதில்லை என்பது உண்மைதான்.ஆனால் அதற்கு அபராதம் கட்டினால் குற்றமில்லை என்பது போல சொல்லும் கஸ்டம்ஸ் அதிகாரியை என்ன சொல்வது. அதுக்கண்டிப்பாக விதி முறை அல்ல, அவர் தானாகவே ஏதோ சொல்லி இருக்கணும்.

அப்படி அபராதம் கட்டி வரவைக்கலாம்னா என்னாத்துகு உயிரைப்பணயம் வைத்து போதைப்பொருள் கடத்தப்போறாங்க, நேராப்போய் அபராதம் கட்டி கடத்திடமாட்டாங்க!

//பின் பின் பின் பின் பின் குறிப்பு: சைலன்சர் வைத்த துப்பாக்கி நிறைய சீப்பாக கிடைக்கிறது, பிளாக்கரில் சன்டை போடுவர்களுக்கு உபயோகமா இருக்குமா?//

ஓவர் நக்கல்லு, சரி யாராவது ஆர்டர் தந்தாங்களா, அப்படினா எனக்கு ஒரு "என்பீல்ட்" புல்லட் புருஃப் சட்டை வேண்டும்.