16 Aug 2007

மற்றுமோர் புதிர்

ஒரு விவசாயி ஆற்றின் இந்த கரையில் இருந்து மறுகரை போக அவனுடைய பிள்ளைதாச்சி மாடு, ஒரு ஆடு, அதனுடைய ஒரு குட்டியும் மற்றும் ஒர் தூக்குபோளி யுடன் பரிசலில் ஏறுகிறார்.

பரிசல் காரர் அய்யா என்னுடைய பரிசல் வீக் ஆக உள்ளது எதாவது சிறு பாரத்தை தவிர்த்தால் போகலாம் என்று கூறினார்.சரியென்று ஆட்டின் குட்டியை கரையில் உள்ள் ஒரு மரத்தில் கட்டிவிட்டு பயனத்தை ஆரமித்தனர்.இதற்கு மேல் ஒரு சிறு பாரம் இருந்தால் கூட பரிசல் கவிழ்ந்துவிடும் அபாயம் உள்ளது என்று பரிசல் காரர் கூறிவிட்டார்.

நடுவழியில் மாட்டிற்கு பிரசவ வலி வந்துவிட்டது, சற்றே சிரமப்பட்டு அது தன் குட்டியை ஈன்றது, தாயும் சேயும் நலம்.

புதியதாக வந்த குட்டியால் பரிசல் கவிழுமா அல்லது கவிழாதா?

இதற்கான விடையை காரன காரியங்களுடன் சொல்லுங்களேன்.

1 comment:

Anonymous said...

படகு கவிழாது. ஏன்னா வயித்துல இருந்த சுமைதான வெளியே வ‌ந்துருக்குது. உருப்படி 1 அதிகம்னாலும் சுமைக்க‌ண‌க்கு அதேதானுங்க‌ளே.