என்ன நட்க்குதுனே தெரியலங்க...
மணல் வியாபாரம்,
மதுகடைகள் இப்போழுது
கேபிள் டீ.வீ. இப்படியே போனால் ராமதாஸ் இப்படியும் சில கோரிக்கைகள் வைப்பாரோ?
சாப்ட்வேர் தொழிலில் ஊழியர்கள் கசக்கி பிழியபடுகிறார்கள், யூனியன் இல்லாததால் அவர்கள் குறைகள் வெளியே தெரிவதில்லை, அன்னிய செலவானியிலும் மோசடி செய்கிரார்கள், கலாச்சார சீரழிவு நடக்கிறது, இன்னும் சில குறைகள் இருப்பதால் அரசாங்கம் சாப்ட்வேர் தொழில் எடுத்து நடத்த வேண்டும்.
திரை அரங்குகள்.
மக்களை சீரழிக்கும் திரை அரங்குகளை அரசாங்கம் எடுத்து நடத்தி மாலை காட்சி மட்டும் நடத்தவேன்டும்.
உணவு விடுதிகள்.
சுகாதரமற்ற, தரமில்லாத உணவு வகைகள், சரியான குடிநீர் வசதி தருவது கிடையாது, இன்னும் பிறகாரனங்களுக்காக அரசே அனைத்து உணவு விடுதிகளை நடத்த வேண்டும்.
தங்கும் விடுதிகள்:விபசாரம், கடத்தல் பேர்வழிகள் தங்குமிடம், அரசியல் குண்டாஸ்கள் புகலிடம் ஆகியவற்றிர்க்கு இங்கு நிறய இடம் இருப்பதால் இந்த தொழிலையும் அரசே எடுத்து நடத்த வேன்டுகிரோம்.
அரசியல் கட்சிகள்.
நிறைய லெட்டர்பேடு கட்சிகள் இருப்பதால், தேர்தலில் சீட் பகிர்ந்தளிப்பதில் அனைத்து தேர்தலிலும் குழப்பம் நடைபெறுவதால் இருகட்சி முறைக்கு பா.மா.கா ஆதரவளிக்கிறது. இரு கட்சிகளில் ஒன்று பா.மா.கா என்பது நாடறிந்த உன்மை, மற்ற ஒரு கட்சி தேசிய கட்சியாக இருந்தால் நாட்டிற்க்கு நன்மை பயக்கும் என்பது மக்கள் அறிந்த உரிமை.ஆகவே கட்சிகளை கட்டுபடுத்துவதிலும் அரசாங்கம் அக்கறை காட்டவேன்டும்.