09-Feb-2009

கொஞ்ஜம் வலி, ஒரு போன்கால் = ஹார்ட் அட்டாக்

இது சமிபத்தில் ஏற்ப்பட்ட நிகழ்வு.

ஒரு தந்தைக்கு மார்பில் கொஞ்ஜம் வலி, மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார், பரிசோதனைகள் முடிந்து வேறு ஒன்றும் இல்லை பீ.பீ சற்று அதிகம் என்று ஐ.சி.யு வில் அட்மிட் செய்துள்ளார்கள். ஒரு 12 ஆயிரத்திற்கு மருந்துகள் எழுதி கொடுத்து... வாங்கியும் கொடுத்து விட்டார்கள்.

தந்தையின் உடல் நலன் அறிய தமையன் அமெரிக்காவில் இருந்து டாக்டரின் கைபேசிக்கு அழைக்கிறான். யார் என்று கூறிவிட்டு விவரம் கேட்கிறான். சற்று நேரம் கழித்து கூப்பிடுங்கள் கேஸ் ரிக்கார்ட் பார்த்துவிட்டு விவரம் கூறுகிறேன் என்றார். ஒரு 15 நிமிடம் கழித்து மறுபடியும் டாக்டரின் கைபேசிக்கு அழைக்கிறான்.

அமாங்க கொஞ்ஜம் பிளாக் இருக்குது இன்னும் ஒருநாள் ஐ.சி.யு வில் மானிட்டர் செய்துவிட்டு பின்னர் ஆஞ்ஜியோ வா அல்லது ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்வதா என்று முடிவெடுக்கலம் என்று கூறினார். நம்ப ஆளு சில பல குறுக்கு கேள்விகளை கேட்கிறார் அதற்கும் அவர் பதில் அளித்துவிட்டு மறுபடியும் கூப்பிடுங்கள் என்று சொல்லி அழைப்பை துன்டித்து விடுகிறார்.

எதோ ஒரு உள்ளூனர்வு டாக்டரிடம் தவறு இருக்கிறது என்று சொல்லியது...உடனே தந்தையிடம் பேசுகிறான். (Technology works, thanks to cell phone ) அவரும் இப்போதுதான் டாக்டர் வந்து பரிசோதனை செய்துவிட்டு பிளாக் இருக்கும் போல் உள்ளது என்றும் குடும்பத்தை பற்றீ விசாரித்ததாகவும் சொன்னார்.

இவனின் உள்ளுனர்வு சரிதான் என்று டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றுவிடுமாறு கூறினான், அவரும் சரி என்று மருத்துவ மனை சிப்பந்திகளிடம் கூறிவிட்டு பில்லுக்கு ஏற்பாடு செய்ய சொன்னார்.ஒரு அரை மணி நேரம் கழித்து மறுபடியும் டாக்டரின் அலைபேசிக்கு அழைக்கிறான், என்னங்க உங்க அப்பா டிஸ்சார்ஜ் ஆகனும்னு சொல்லுரார், பிளாக் இருக்குது இன்னும் ஒரு நாள் பார்த்துட்டு சொல்லுறேன் என்றால் சின்ன பிள்ளை போல் வீட்டுக்கு பொகனும்னு சொல்ரார், எதாவது என்றால் என்மேலதான் அப்பறம் சொல்லுவீங்க அப்படி இப்படி என்று சொல்லி அழைப்பை முடித்து கொன்டார்.

அவரும் டிஸ்சார்ஜ் அகி (Rs:22.500) ஒரு இரவு ஐ.சி.யூ வாடகை செலுத்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார், அன்று இரவே சென்னை நோக்கி பயனம், அங்கு பரிசோதனைகள் முடிந்து ஒன்றும் பிரச்சனை இல்லை பி.பி அதிகம் என்று மருந்துகள் அளித்துள்ளார்கள்.

ஒரு தொலைபேசி அழைப்பு பி.பி என்ற நோயை ஹார்ட் அட்டாக் அக மாற்ற முடிந்தது. பாவம் அவருக்கு என்ன கஸ்டமோ இன்று இந்த அப்பாவி தந்தை மாட்டினர். நாளை யாரோ?

ஐ.சி.யுக்கு இவ்வளவுதான் கட்டனம் என்று ஒரு வரை முறையிலாமல் பணம் பிடுங்கும், நோயின் தன்மையே மாற்றிய டாக்டரின் மேல் நடவடிக்கை எடுக்க என்ன வழி?

நடந்த இடம்: ஈரோடு.
நடந்த மாதம் : சனவரி- 2009
மருத்துவ மணை: கோவையில் உள்ள பெரிய மருத்துவ மனையின் ஈரோடு கிளை.
( இவர்களுக்கு ஈரோட்டில் 2 கிளைகள் உள்ளது)

மருத்துவரின் பெயர்: தூத்துகுடி (மூழ்கி எடுக்கும் )குமார்

7 comments:

ILA said...

அந்த நாதாறிப் பசங்க பொணத்தை வெச்சிகிட்டே 2.15 லட்சம் வாங்கிட்டானுங்க. ரமணா படம் எல்லாம் சும்மா பாஸ், நம்ம ஊர்ல இதுக்குமேலேயும் பண்றானுங்க. பாஜக பூ ஆசுபத்திரியோ இதுக்குமேல

Anonymous said...

உங்க பதிவ பார்த்துட்டு முத்துகுமார் தான் டாக்டரா வந்து இருப்பாரோ?

வால்பையன் said...

அப்பாவுக்கு உடம்பு சரியில்லையா?

நீங்கள் குறிப்பிடுவது போல் ஈரோட்டில் சில மருத்துவமனைகள் இருக்கிறது.

அரசு மருத்துவமனையிலும், பெருந்துறை மருத்துவ கல்லுரியிலும் இருக்கும் மருத்துவர்களே இம்மாதிரியான தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிகிறார்கள்.
அவர்களுக்கு சம்பளம் கிடையாது அவர்களிடம் வரும் நோயாளிகளிடம் இருந்து வாங்கும் கட்டணத்தில் பங்கு.

அதனால் அவர்கள் பில்லு போட்டு தீட்டுறாங்க!

Beemboy-Erode said...

//உங்க பதிவ பார்த்துட்டு முத்துகுமார் தான் டாக்டரா வந்து இருப்பாரோ?//

ஹா ஹா..முகம் தெரியாத அனானிக்கு ரொம்பவும் குசும்பு...முகம் காட்டினால் என்னாவாம்?

//அப்பாவுக்கு உடம்பு சரியில்லையா?//

ஆம்... இப்பொழுது ஒரு வக்கீலிடம் பேசி உள்ளேன்...அவர் இன்று போய் டாக்டரிடம் பேசுவதாக சொல்லியுள்ளார் பார்ப்போம் என்ன முடிவெடுக்கிறார்கள்.

கார்த்திக் said...

// பாஜக பூ ஆசுபத்திரியோ இதுக்குமேல.//

விவசாயி சொல்லுரதும் சரிதான் மனசாட்சியே இல்லாத பசங்க.
சொந்தக்காரன் வசதி இல்லாதவன்னு கூட பாக்க மாட்டானுங்க.GH தான் பெஸ்டாட்ட தெரியுது

Beemboy-Erode said...

வாங்க கார்ட்திக் ரொம்ப நாளா ஆளையே கானோம்? சவுக்கியமா?

zubair said...

namkkum kudumbam kulantha kutti irukkunnu doctorunga ninachchaave pothum