16-Mar-2009

பிரிவோம் சந்திப்போம் பாகம்- 2

நேற்று தற்செயலாக சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் பாகம் 2 கிடைத்தது, முதல் பாகம் படிக்கவில்லை ஆனாலும் என்னதான் என்று படிக்க ஆரமித்தேன். விறு விறுபான எழுத்து நடை ஒரே மூச்சில் படிக்க தூன்டிற்று. இந்த நாவல் எழுதி 25 ஆண்டுகள் இருக்கும் என்பது கூகிள் ஆண்டவர் தகவல் அருளினார்.

நியுயார்க் விமான நிலையம் அதன் பிரமாண்டம், ஹைவே, ஃபிரி வே, ஸ்டேட்டன் ஐலென்டு, பிராட்வே, மோசமான் இரவு வாழ்க்கை, 100 K வாங்கிரவங்கலாம் மேல் தட்டு மக்கள், பிட்ஸ்பர்க் கோயில், வீக் என்டு பார்ட்டிகள்,பேஸ்மென்டு, ஆண்கள் குடி, பெண்கள் டீ.வீ, கட்டிபிடி முத்தங்கள்,லாஸ்வேகாஸ் சூதாட்டம்,டேன்ஜூர் (Tanjore) பாட்டிகள், மாமா, மாமிகள், பஞ்ஜகட்சம்,பொரபசர் அசைன்மெட்டுகள்,வகுப்புத்தோழியின் கர்பம்,ரெஸிசன், வேலை போய்டும் என்ற பயம், எதியும் பிரம்மாண்டமாக படைக்கும் அமெரிக்க தொழில் நுட்ப்பம்,அமெரிகா அப்படியே இருக்கிறது, மிகசில மாற்றங்களை தவிர.

இப்போது மாமா மாமிகளை தவிர கொங்கு அய்யன் ஆத்தாள் களும், டின்னல்வேலி ஏலெய் களும்,சென்ணை நைனாக்களும், இன்னாபாக்களும், சாப்ட்வேர் புண்ணியத்தால் நிறைய தமிழ் மக்கள் இருக்கிரார்கள்.அதே வீக் எண்டு பார்ட்டிகள்,இன்னும் 100-கே வாங்கரவங்களாம் மேல் தட்டு மக்கள் (அவங்களாம் பி.எம்.டபிள்யு சாதி)அவர் சொன்ன மாதிரி சாப்ட்வேர் ஒரு சுனாமி போல வந்து 25 ஆண்டுகள் நிலைத்து விட்டது,. இப்போது சிறிது ஆட்டம் கண்டுள்ளது.

யோசனை செய்து பார்த்தால் அமெரிக்கா எபோதும் தொழில் நுட்பத்தில் 50 ஆண்டுகள் முன்னேரி இருக்கிரது.(Advanced) 80களின் கால கட்டத்தில் ரெஸிஸன் பீரியட்களில் தகவல் தொழில் நுட்ப்பம் போன்ற புதிய டெக்னாலஜிகல் அறிமுகம் ஆகி பீறுநடைப்போட்டு வந்தது.
அதற்கு முந்தைய ரெஸிஸன் பீரியட்கள் மெக்கானிகல், மற்றும் மருத்துவர்களும், அதற்கும் முன் பசுமை புரட்சியும், பேஸிக் இன்பராஸ்டக்ச்சர் களும் ரெஸிஸன்களி தூக்கி நிறுத்தியது.இப்போது என்ன செய்ய போகிரார்கள் என்பது ஒரு டிரில்லியன் டாலர் கேள்வி.

Year 1982 கால கட்டத்தில் ஒரு டாலர் என்பது 10 ரூபாய். இப்பொழுது அப்படி இருந்தால் 95 சதவிகித நம் மக்கள் இந்தியா திரும்பி விடுவார்கள்.

ஒரு சில அபத்தங்களும் இருக்கிரது நாவலில். அமெரிகா வந்தவுடன் பாபனாசம் பெண் மது அருந்த கற்று இருக்கிறாளாம், ஆனால் கற்பு விஸயத்தில் தமிழச்சியாக இருக்கிறாளாம்,(அதற்காக மது அருந்துபவர்கள் எல்லாம் மோசமானவர்களாக இருக்க வேண்டும் என்ரு அர்த்தம் கொள்ளகூடாது) கணவனின் பெண் லீலைகள் பார்த்து தானும் பழைய காதலுடன் ஓடிப்போவது என்பதுலாம் இப்போது ஓ.கே தான் ஆனால் அந்த கால கட்டத்தில் எப்படினு தெரியலை, ஒருவேளை எழுத்து புரட்சியோ?

3 comments:

கார்த்திக் said...

// அமெரிகா வந்தவுடன் பாபனாசம் பெண் மது அருந்த கற்று இருக்கிறாளாம், ஆனால் கற்பு விஸயத்தில் தமிழச்சியாக இருக்கிறாளாம்.//

புத்தகத்த படிச்சா அனுபவவிங்க ஆராய்ச்சி செய்யாதிங்க.
அப்படியே கொஞ்சம் விரிவான விமர்சனத்தையும் எழுதுங்க.

வால்பையன் said...

நான் இன்னும் படிக்கலையே!
அதுக்கு முன்னாடியே இப்படி பிரிஞ்சி மேஞ்சிட்டிங்களே!
படிக்கிற சஸ்பென்ஸ் போயிடுச்சே!

Beemboy-Erode said...

ஒருத்தர் விரிவாய் விமர்சனம் எழுதுங்க என்கிறார், மற்றொருவர் பிரிச்சி மேஞ்ஜிட்டீங்க என்கிறார் இருந்தாலும் வால் உங்களுக்கு நக்கல் தான்...சரி சரி நம்ப ஊர் காரர் என்கிற பாசத்தில் ஒரு பினூட்டம் போடுரீங்க சரி...சரி...