24 Jan 2009

குமுதம் வார இதழுக்கு ஒர் கடிதம்

எல்லாரும் இப்பொழுது எதாவது ஒரு வார இதழுக்கு கடிதம் எழுதுகிறார்கள், இது நான் எழுதும் முதல் கடிதம்...இல்லை வின்னப்பம்னு கூட என்று சொல்லலாம்.

அன்புள்ள குமுதம் இதழ் மார்கெட்டிங் மேனேசருக்கு வணக்கம்.
தங்கள் குமுதம் டாட் காம் சனவரி 31ம் தேதி முதல் பே சைட் ஆகிறது என்றும் சந்தா கட்டுங்கள் என்று அறிவித்து இருந்தீர்கள் சரி நானும் நினைவு தெரிந்த நாளில் இருந்து படிக்கும் இதழ் என்று ( ஒரு டீஸ்பூன் ஒரு கொலை, நான் படித்த முதல் கதை என்று நியாபகம்)சந்தா கட்ட சென்றேன்...வந்ததே மயக்கம் சாதா, டீலக்ஸ், ஸ்பெசல் டீலகஸ் என்று ஆம்னி பஸ் கனக்கா சந்தா கட்ட சொல்லியிருந்தது. (முறையே 50.00 USD, 99.00USD, 250.00USD (3 years)).

ஏனுங்கனா நாட்டுல விலைவாசிலாம் ஏறிப்போச்சு, உலகமே பொருளாதார மந்ததுள இருக்குது அப்பரம் எப்படிங்கனா நாங்க போயி அப்புட்டு பணம் கட்ட முடியும், சரி அதுக்கு நாங்க இலவசமா தரமுடியும்னு கேட்காடீங்க...(ஏன் குடுத்தாதான் என்ன அரசு கலர்டீவி தருது, நெலம் தருது, அரிசி ஒருரூபாய்கு தருது)

ஒரு நியாயமான் ரேட்டு வச்சு குடுபா நாங்கனா வேனாம்னா சொல்லபோரோம், ஏன் உன் கூட்டாளி விகடன் பாரு சூப்பரா ரேட்டு வெச்சுனு இன்னாம கலக்கரான். நீ மெய்யாலுமே ரோஜனை பன்னு ராசா, எத்தினி பேரு நீ குடுக்குர வீடியா லாம் எரக்கினு இருக்கபோரானுங்க, எங்கள் மாதிரி சனம் லாம் சும்மா வந்தமோ, படிச்சோமானு தான் போராங்க, வேனும்றவங்க பே பெர் டவுன்லோட் நு குடுக்கசொல்லுமா.கொஞ்ஜம் மன்சு வைராஜா.

சரி வாங்கர காசுக்கு ஒழுங்கா கஸ்டமர் சர்வீஸ் இருக்கா? (அப்டீனா என்னானு கேட்கராங்க உங்க ஆபிஸ்ல) பிரின்ட் சந்தால சில குளருபடி இருந்தது பேக்ஸ், ஈ-மெயில்னு அனுப்பிபார்த்து பதில் இல்லை, சரினு மெனக்கெட்டு ராத்திரி முழிச்சிட்டு இருந்து உங்களுக்கு போன் பன்னினா (வெளிநாட்டில் இருந்து) காது குடுத்து கேட்க கூட ஆள் இல்லை உங்க ஆபீஸ்ல. வார இதழுக்கு பணமும் கட்டி அதை பற்றி விசாரிப்பதற்கு பணமும் விரையம் செய்து பிளட் ப்ரசர் ஏற்றி கொன்டதுதான் மிச்சம்.
இப்ப கூட பாருங்க சனவரி 31ம் தேதி வரை இலவசம் என்று சொல்லிட்டு சனவரி 24 அன்றே என்னை உளே விட மாட்டேன்ங்குது. (சரி உங்க சைட்டு உங்க இலவசம், எப்பவேனும்னாலும் ஸ்டாப் செய்ங்க, ஆனா வார்த்தைனு ஒன்று இருக்கு இல்ல?)

அப்பறம் ஒன்னு நியாபகம் வைத்து கொள் ராசா வெளிநாட்டில் இருக்கும் எல்லாரும் (அதிக) பணம் கட்டி படிக்கும் அளவிற்கு வசதி இல்லை ராசா, எல்லாரும் உங்க டைரக்டர் சவகர் அளவிற்கு 3 மில்லியன் டாலர்லாம் சம்பதிப்பதில்லை. ஏதோ எங்களால் முடிந்த அளவிற்கு பணம் கட்டுரொம், கொஞம் மனசு வைங்க, நியாயமான ரேட்டு வைங்க,நிறய கஸ்டமர்களை வைத்து நிறெய பணம் சேருங்க.

(அது சரி இந்தியாவில் இருக்கும் கஸ்டமர்களுக்கும் அமெரிக்க டாலரிலா தெரிகிறது?)

12 comments:

குப்பன்.யாஹூ said...

கொஞ்ச நாள் சும்மா இருங்கன்னா, தானா வந்து விலை குறைப்பாங்க.

அம்பலம், ஆறாம்திணை கதை தெரியாதா.

அவசரப் பட்டு சந்த கட்டிராதிங்க, நம்ம பதிவர்கள் குமுதம் படிச்சு ஸ்கேன் பண்ணி போடுவாங்க.

குப்பன்_யாஹூ

boopathy perumal said...

இப்போ எல்லோருக்கும் கிடைத்தவரை சுருட்டலாம் என்ற கொள்கைதான், நாமதான் இவர்களப்போன்றவர்களிடம் எச்சரிகையாக இருக்கனும், நான் படிப்பதே குமுதத்தில் சில பக்கங்களும், ரிப்போர்ட்டர் மட்டும்தான், இதற்கு எப்படி இவ்வளவு சந்தா கட்டமுடியும். தமிழ்ன்னாவே ஏமாளின்னு ஒரு முடிவுவோடதான் இருக்காங்கப்பு எல்லோரும். இப்போது ஓசியில் கிடைத்தாலே நான் திரைப்படங்களை பார்க்க தயாராக இல்லை. விரைவில் விகடன் அளவுக்கு மாற்றுவார்கள் என நம்புவோம்

Anonymous said...

//சரி வாங்கர காசுக்கு ஒழுங்கா கஸ்டமர் சர்வீஸ் இருக்கா? (அப்டீனா என்னானு கேட்கராங்க உங்க ஆபிஸ்ல) பிரின்ட் சந்தால சில குளருபடி இருந்தது பேக்ஸ், ஈ-மெயில்னு அனுப்பிபார்த்து பதில் இல்லை, சரினு மெனக்கெட்டு ராத்திரி முழிச்சிட்டு இருந்து உங்களுக்கு போன் பன்னினா (வெளிநாட்டில் இருந்து) காது குடுத்து கேட்க கூட ஆள் இல்லை உங்க ஆபீஸ்ல. வார இதழுக்கு பணமும் கட்டி அதை பற்றி விசாரிப்பதற்கு பணமும் விரையம் செய்து பிளட் ப்ரசர் ஏற்றி கொன்டதுதான் மிச்சம்.//

//படிப்பதே குமுதத்தில் சில பக்கங்களும், ரிப்போர்ட்டர் மட்டும்தான், இதற்கு எப்படி இவ்வளவு சந்தா கட்டமுடியும்.//

I FULLY AGREE WITH THE ABOVE.

//அவசரப் பட்டு சந்த கட்டிராதிங்க, நம்ம பதிவர்கள் குமுதம் படிச்சு ஸ்கேன் பண்ணி போடுவாங்க.//

READERS PLEASE BE KIND ENOUGH TO DO THAT

Rajaraman said...

ஜனவரி 31 தேதி வரை இலவசம் என்று அறிவித்துவிட்டு நம்மளை கேணயர்கள் என்று நினைத்து 24 தேதியே மூடிவிட்டது கடைந்தெடுத்த மோசடி

Anonymous said...

7 வருடமாக மிக சில பக்கஙள் மட்டுமே படித்து வரும் எனக்கு 10 $ ண OK.
மலேசியாவிலும் டாலரில் தான் தெறிகிறது.

Ramesh

இல்யாஸ் said...

i also paid US$ 9.99 for kumudam movies and i got comfirmation from them, but still i cant access that movie part, whenever i click movies, it directs to the payment page..
i mailed to them but no response until now

☀நான் ஆதவன்☀ said...

அண்ணே சரியா சொன்னீங்க...ஏற்கனவே ஒருத்தர் பே சைட் ஆக்குறேன்னு சொன்னதுக்கு அவர் கடை காத்து வாங்குச்சு...அதே நிலைமை குமுதத்துக்கும் வரும். அதுவரை காத்திருப்போம்

வால்பையன் said...

ஓ பக்கங்கள் மட்டும் படிச்சிகிட்டு இருந்தேன்! இப்ப அதுக்கும் ஆப்பு வச்சிட்டாங்க!

அவுங்க கேக்கிற காசு அதிகம் தான்

வால்பையன் said...

எழுத்து நடை அருமையா இருக்கு!
கலக்குறிங்க

Beemboy-Erode said...

வந்த அனைவருக்கும் நன்றி.

இல்யாஸ் உங்க பிரச்சனை தீர வாழ்த்துக்கள்

அப்பறம் வால் (அருண்) சவுக்கியமா? ரொம்ப நாளா ஏன் போஸ்டிங் காணோம்? வருமானத்தை என்னுவதற்கு நேரம் போதவில்லையா?

KARTHIK said...

இது என்ன கடிதமாதமா.

லதானந்த்சார் இதை பாக்கனும் ஏந்தான் பரிசலுக்கு இப்படி ஒரு பதிவெழுதினோ்ம்னு நொந்துக்குவாரு

// அப்பறம் வால் (அருண்) சவுக்கியமா? ரொம்ப நாளா ஏன் போஸ்டிங் காணோம்? வருமானத்தை என்னுவதற்கு நேரம் போதவில்லையா? //

நீங்க தான் ஊர விட்டு அங்க போயிட்டீங்க.இங்க ஒரு நாளைக்கு எவ்ளவு பஞ்சாயத்து,அடிதடி,வலைல வர்ர சன்ன சன்ன பிரச்சனை எல்லாத்தையுமே பாத்துதான ஆகனும்.

அமர பாரதி said...

சரியாக சொல்லியுள்ளீர்கள். விகடனுக்கு கொடுக்கும் சந்தாவே அதிகம், இதில் 249 டாலர் 3 வருட சந்தாவாம். படிக்கிறவர்களை கேனையர்கள் என்று நினைத்துக்கொண்டார்கள் போல இருக்குது. குறைந்த பட்ச அக்கவுன்டுக்கே 49 டாலர்கள். மொத்த இதழ்களுக்கும் சேர்த்து விகடன் போலவே ஆறு மாதத்துக்கு 15 டாலர் என்று வைக்கலாம். யாருக்கு வேண்டும் வெப் டீ.வி யும் திரைப்பட டவுன் லோடும்?