06-Jan-2009

நான் குடித்த காபி மற்றும் பல..

டாக்டர்-லாம் ஒன்னும் சொல்லலை, நம்ப பையன் தான் சொன்னார் அப்பா உங்க டம்மி கொஞ்ஜம் பெரிசா இருக்கு அப்படினு.நாம யார் பேச்சை கேட்டிருக்கோம் அதனால மணம் திருந்தி பையன் பேச்சை கேட்கலாம்னு(இல்லன பையன் நம்ப பேச்சை கேட்க மாட்டான்?) முடிவெடுத்து கொஞ்ஜம் குறைக்கலாம்னு புதுவருட முடிவெடுத்தாச்சு.

ஆச்சு சனவரி- 1 வெற்றிகரமான் டயட். 2-ம் தேதி சூப்பரான் சைக்கிள் ஓட்டம், 3-ம் தேதி குறைச்சலான சிக்கன் சாப்பாடு 4-ம் தேதி சூப்பர் கட்டுபாடுடன் ஓடிவிட்டது. சனவரி 5 ம் தேதி காலை அடித்து பிடித்து எல்லாரயும் கிளப்பிட்டு நானும் அலுவலகம் கிளம்பும் போதுதான் நியாபகம் வந்தது நான் காலை சாப்பிடவே இல்லை என்று, சரி நம்ப டயட்டுக்கு இயற்கையே வழிவகுத்து விட்டது என்று கிளம்பி விட்டேன்.

காரில் ஒரு 20 மைல் பயனம், பாதி தூரம் போன பிறகு வயிறு கர்...புர் என்ற் சத்தம் போட்டு என்னை கவனி என்று சொன்னது. வழியுல் ஒரு லைடில் (Light/Signal) நிற்க வேன்டியதாயிற்று, பாட்டு கேட்டுகொண்டே சன்னல் வழியாக பார்த்தால் ஸ்டார் பக்ஸ் வா..வா என்று வறவேற்றது. மனதில் ஒரு சஞ்ஜலம் காபி குடிக்கலாம் என்று, ஆனால் மூளை சொன்னது வருட ஆரம்பத்தில் காபிக்கு எல்லாம் செலவு செய்யாதெ என்று...சரி என்று விட்டு விட்டேன். அடுத்த லைட்டில் இன்னொர் ஸ்டார் பக்ஸ் இந்த முறை கிறுஸ்து பிறந்த நாளைக்கு வந்த கிப்டு கார்டு உபயாகபடுதலாம் என்று முடிவெடுத்து காரை திருப்பிவிட்டேன். (ஆமாம் அவர் பிறந்த நாளைக்கு என்க்கு எதுக்கு எங்க டேமேஜர் கிப்டு கார்டு கொடுத்தார்?)

போயி ஒரு டால் லாடே( Tall Latte) Minimum size காபி சொன்னால் வந்தது ஒரு கால் லிட்டர். (ஈரோடா- யிருந்தால் நம்ப டேவிட் ஆறுமுகம் அளவா தந்து இருப்பார்.) குடித்து கொன்டே அலுவலகம் போய் சேர்ந்தாயிற்று.போனவுடன் அல்லா பேருக்கும் புதுவருட வாழ்த்து சொன்ன பிறகு பொட்டிய தட்டி உக்காந்த பிறகு வயிறு சத்தம் போட்டது. சரினு நம்ப டிராயர் திரந்து பார்த்தால் கடலை உருன்டை பாக்கட் நான் இருக்கிறேன் என்று சொன்னது அதற்காக அவரை ஒரு தடவை சாப்பிட வேன்டியதாயிற்று.

சில மெயில்களை ஓப்பன் செய்து பார்த்து விட்டு ஒருமுறை rest room போயிட்டு வந்தாச்சு. மறுபடியும் கர்...புர் சத்தம் இந்த முறை திறந்தால் எள்ளூ உருன்டை என்னப்பார் என்றது அவருக்காக ஒன்று, எனக்காக ஒன்று, ருசிக்காக ஒன்று மொத்தம் 3 ஆச்சு.

மணி 10.30 அச்சூ ஒரு மீட்டிங் இருந்தது அங்க போயி கர்..புர் சத்தம் கேட்டல் நன்றாக் இருக்காதே என்று கப்டீரியா போய் நம்ப காபி கப்ல ஒரு காபி புல் பன்னியாச்சு..குடித்துகொன்டே கிறுஸ்துமஸ் மற்றும் புது வருட கொன்டாட்டம் பற்றி பேசிகொன்டே கலைந்து போனோம். காபி கப் காலி...(இதுதான் மீட்டிங்கா என்றால் ????? நிறைய பொட்டி தட்டும் மக்களுக்கு தெரியும்)

மணி 11.15 கர் ...புர் சத்தம் இந்த முறை திறந்தால் ஒன்றும் இல்லை ( அதான் எல்லாம் முடிச்சாச்சே) கையை உள்ர விட்டு தோலாவி பார்த்தால் ஒரு மேங்கே ஜீஸு டப்பா இருந்தது சரினு அவரை வயிற்றுகுல் தள்ளியாகி விட்டது.

சிரிது நேரம் சத்தம் இல்லை....சரி மணி 12.30 ஆயிற்று மதிய சாப்பாடு நேரம் அல்லவா...பசியுடன் கொன்டு போன சப்பாத்தி துன்டுகளை முழுங்கினேன்.
ஒழுங்கா காலைல ஒரு கப் சீரியல் சாப்பிட்டு போயிருந்தா ஒருகப் காபி யுடன் காலை நேரம் ஓடியிருக்கும் இப்ப டயட் டயட் அப்படினு நிறைய சாப்பிடுர்னோ? நீங்க சொல்லுங்க என்னால வயிறை குறைக்க முடியுமா?

பின் குறிப்பு: இது என் தொப்பை இல்லை.

ஒரு புதிர்: வால்பையன் புதுவருட பிறப்பிற்கு சாப்பிட்ட சரக்கின் பெயர் என்ன? சரியாக் சொன்னால் அதே சரக்கு பரிசளிக்கப்படும்.

5 comments:

ILA said...

அடங்கொக்க மக்கா. நாந்தான் எள்ளுரண்டை எல்லாம் ஆபிசுக்கு எடுத்துட்டுப்போறேன்னு நினைச்சேன். நீங்களுமா?

Beemboy-Erode said...

வாங்க இளா,

ஒரு தடவை இந்தியா குரோசரிஸ் போனா $50 ஆபீஸ் ஸ்நாக்ஸ், $50 வீட்டு ஸ்நாக்ஸ் க்கு ஆகுது. நான் ஸ்நாக்ஸ் வாங்கி, வாங்கி கடை ஓனர் 2 வீடு வாங்கிட்டார். பேசாம நானும் ஒரு கடை போடலாம்னு இருக்கேன்.

வால்பையன் said...

இது என் தொப்பை இல்லை.//

ஆமாம் உங்களுடயது இதை விட பெரியது

வால்பையன் said...

உங்கள் பெயரை பயன்படுத்தி பதிவிட்டு கொள்ளலாமா?

கேட்காமல் போடகூடாதே என்று தான் காத்து கொண்டிருக்கிறேன்

வால்பையன் said...

//புது வருட கொன்டாட்டம் பற்றி பேசிகொன்டே கலைந்து போனோம். காபி கப் காலி...(இதுதான் மீட்டிங்கா என்றால் ????? நிறைய பொட்டி தட்டும் மக்களுக்கு தெரியும்)//


இது தான் ஒவ்வொரு மீட்டிங்குளயும் நடக்குதே!