12 Jan 2009

க(ஷ்)ஸ்டமர் சர்வீஸ் அனுபவங்கள் பாகம்-2

வணக்க்கம் நன்பர்களே, எப்படி இருக்கீங்க, அலைகடலென திரன்ட ஈ-மெயில்கள் எங்கே பாகம் இரண்டு எனகேட்டு இருந்தார்கள். இதோ இங்கே தொடர்கிறது. க(ஷ்)ஸ்டமர் சர்வீஸ் அனுபவங்கள் பாகம்-1

முன்கதை...
ஆத்தா நான் 3 மாசம் மின்னாடியே புக்கு/நோட்டு லாம் செஞ்ஜாச்சு, இது கன்பார்ம்டு டிக்கட்டு அக்கா, உங்க கம்பியூட்டரில் நல்ல பார்ட்து சொல்லுங்க அக்கா. ..கிளி திருப்பி திருப்பி அதெயே சொல்லுச்சு.சரி இது வேலக்க்காவாதுனு ஏர்லைன்ஸ் மேனஜர் பார்த்து பேசலாம்னு அவர எப்படி பார்க்கரதுனு கேட்டா..3மாடி போயி பாருங்க்கனு ரூட் போட்டாங்க.

இனி...
அங்க போனா அவர் How to deal Angry Customers என்ற புத்தகத்தை படித்து கொன்டிருந்தார்.நாங்கள் வந்த விசயத்தை சொல்லி அதே பிளேனில் இடம் கேட்டோம். அவரும் எங்களுடன் இறங்கி கீழே வந்தார். கிளிகளிடம் பேசிவிட்டு சாரி சார் இது கம்யூனிகேசன் கேப்பில் வந்த குளருபடி சற்று பொருங்கள் என்று கூறிவிட்டு வேறுஒரு பூத்திற்கு நடந்து போனார்...அங்கிருந்து சில போன்கள் மற்றும் வாக்கி டாக்கியில் யாரிடமோ பேசினார்.நேரங்கள் கடந்தது, மணீத்துளிகள் கரைந்தது விமானம் புறப்படும் நேரம் நெருங்கியது. நான் பொறுமை இழந்து அவரிடம் விமானம் புறப்படும் நேரம் நெருங்கி விட்டது என்றும் என்ன சார் என்று கேட்க இல்லிங்க பைலட்டிடம் பேசிவிட்டேன், எதோ எடை பிரச்சனை எனாறும் சில லக்கேஜிகளை இறக்கிவிட்டு ஆட்களை ஏற்ற முயற்சி செய்வதாக கூறினார்.
(காமளையன் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்ஜளாக தெரியுமாம் அது மாதிரி அவர் என்ன சொன்னாலும் கேட்கும் மன நிலையில் தான் இருந்தோம்.பின்னாடிதான் தெரிந்தது அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே பரந்து போச்சி என்று.)

நாங்கள் பொறுமை இழந்து அனைவரும் சண்டைக்கு இறங்க பிற்பாடு சாரிங்க ஏதோ தவறு நடந்துவிட்டது, உங்கள் அனைவருக்கும் 5 ஸ்டார் விடுதியில் அறை எடுத்து தங்க வைக்கிரோம் காலை முதல் விமானத்தில் ஏற்றி அனுப்புகிரோம் என்று அடுத்த வலையை வீசினார். அந்த வலையில் 2 குடும்பங்கள் சரி என்று தலை ஆட்டியது. எனக்கும் புரிந்துவிட்டது இது வேலைக்காவாது நாமும் தலை ஆட்டிவிட வேண்டியதுதான் என்று முடிவெடுத்து அவரிடம் சரி சொல்ல போனேன் அவரோ நீங்கள் பட்ஜெட் ஏர் இன்டியா-வில் (Air India Budget) போகிறீர்களா என்று கேட்டார், ஏதோ ஒன்று முதலில் சென்ணை போய் சேர்ந்தால் போதும் என்று சரி என்று தலை ஆட்டிவிட்டேன்.பிற்பாடு ரொம்பவே...வருத்தபட்டேன்.அவரும் அந்த ஆபீஸ் சென்று வந்து கொஞம் பொறுங்கள் அவர்களின் ரிசர்வேசனுக்கு முன்னுர்மை தந்து அவர்களின் ஆட்கள் எல்லாம் ஏறிய பிறகு இடமிருந்தால் நீங்களும் போகலாம் என்று கூறிஅனார். அதற்கும் தலை ஆட்டிவிட்டு பொறுமை காத்திருந்தோம்.10.25 விமானத்திற்கு 10.05 க்கு எங்களுக்கு போர்டிங் பஸ் கொடுத்தார்கள். சரி என்று வாங்கி கொண்டு விமானம் நோக்கி ஓடினால், செக்யூரிட்டி செக்கில் கைப்பட்டியின் எடை 6 கிலோவிற்கு மேல் இருக்க கூடதுஎன்று சொல்லிட்டார்கள். மெயின் பெட்டி ஏதும் எங்களிடம் இல்லை, நாங்கள் நடந்ததை கூறி அட்லான்டிக் கடல் தான்டி வந்து உள்ளோம் எங்களுக்கு 9 கிலோ வரை அனுமதி இருக்கிறது என்று சொல்லியும் விடவில்லை. சரி 3 கைப்பட்டியை எப்படி பிரித்தாலும் 6 கிலோவிற்கு மேல தான் இருந்தது. கைபெட்டியில் இருப்பது அனைத்தும் முக்கியமானவை எதையும் வீசி எறிய முடியாது.மறுபடியும் மேனேசரிடம் ஓடினோம், சரி 2 கைப்பிட்டியில் முக்கியமானது எடுத்து கொன்டு ஒரு பெட்டியை லக்கேஜ் ஆக மாற்றிவிடுங்கள் என்று கூறினார்.சரி என்று மாற்றிவிட்டோம். பின் செக்கிங் முடிந்து விமானம் நோக்கி ஓடினோம், அங்கிருந்து அந்த விமானம் செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்று குறித்திருந்தார்கள். 12 mins (ஒரு நல்ல விசயம் இது )ஓடோடி போனால் விமானத்தின் கடைசி சீட் (வால் பகுதி) இடம் அளித்திருந்தார்கள்.அனைவரின் கண் பார்வைக்கு இலக்காகி போய் அமர்ந்தோம், வரிசையாக அனத்து குடும்பங்களும் வந்து சேர்ந்தனர்.ஒருவழியாக விமானம் புறப்பட்டது, அருகில் அமர்ந்து இருந்த சிங்கபூரியனிடம் அலை பேசி வாங்கி நன்பருக்கு விவரத்தை சொல்லி இந்தியாவில் எங்களை வறவேர்கக சென்னை விமான நிலையத்த்ல் காத்திருக்கும் குடும்பத்தாரிடம் தகவல் தெரிவிக்க சொல்லிவிட்டோம்.
(இங்குதான் அலைபேசியின் முக்கியத்துவம் தெரிகிறது)

பிற்பாடு விமான பணிப்பெண்கள் தள்ளு வண்டியில் ஒரு பிரெட் மற்றும் ஒரு ஜீஸ் கொடுத்தார்கள், மற்றொரு பணிப்பெண் சாரயக்கடை தள்ளி கொண்டு வந்தார். I just surprised they came with sample bottles coz usually they will open the big bottles and pour in to the small cups (cost cutting) சரி கலக்சனுக்கு ஆகும் என்று 3 பாட்டில் வாங்கி வைத்து கொன்டேன். அப்படியே கண் அயர்தேவிட்டேன். கொஞ்ஜ நேரம் கழித்து யாரோ தோளை தட்டி சார் சார் என்று அழைப்பு, பார்த்தால் பணிப்பெண் 18சிங்கை டாலர் கேட்டார், எதற்கு என்று வினவியபோது 3 பாட்டிலிக்கு என்று கூறினார். இது இன்டர்னேஸனல் பிளைட் தானே? அப்பறம் எதுக்கு காசு கேட்கிறீங்க என்று வினவிய போது இல்ல சர் இது பட்ஜெட் ஏர்லன்ஸ் சோ வி ஏவ் டு கலெக்ட் அப்படினு சொன்னாங்க, அப்படியே பாட்டிலை திருப்பி தந்துவிட்டு கடுப்புடன் அமர்ந்திருந்தேன்.பின் அவரை அழைத்டு குடிப்பதற்கு தண்ணி பாட்டல் கேட்ட போது ஒரு ஆளுக்கு ஒரு முறைதான் இலவசம் என்றும் மறுபடியும் வேன்டுமானால் பணம் கொடுத்து பெற்றுகொள்ளவும் என்று கூறிவிட்டார்.கடு கடு முகத்துடன் அமர்ந்திருந்தேன்.மனதுக்குள் ஆயிரம் என்னங்கள் கேஸ் போடலாமா? இல்லைனா எப்படி டீல் பன்னலாம்னு.கடைசியில் தானே அமர்ந்திருந்தேன், பனிப்பெண்கள் பேசுவது எல்லாம் கேட்டது அவர்கள் ஊர் கதி எல்லாம் பேசிவிமானம் இறங்குவதற்கு முன் வாழைப்பழ ஜோக் சொல்லி சிரித்து கொண்டு இருந்தார்கள். நான் குறுக்கால பூந்து அக்கா அது ரொம்ப பழைய சோக்குகா என்று கூறவும் அவர்கள் முகம் ஒருமாதிரி போனது.ஒருவழியாக விமானம் சென்னை வந்து சேர்ந்தது, இமிகிரேசன் முடித்து பொட்டி எடுப்பதற்கு வந்த போது பெரிய பொட்டி அனத்தும் முதல் விமானத்தில் வந்து விட்டது போலும் அனைத்தும் ஒரு தள்ளு வன்டியில் வைத்து இருந்தார்கள். சிங்கபூரில் செக் செய்த கைப்பெட்டி வரவில்லை. அதற்கு கம்பெளைன்டு குடுக்க வரிசையி நின்று அனத்து தகவலையும் சொல்லி ரசிது வாங்குவதற்குள் 2.30 மனினேரம் முடிந்திருந்தது.நாம் தான் 2 நாள் கழித்து வந்து வாங்கி கொள்ளவேன்டுமாம், அவர்கள் வீடிற்கு டெலிவரி செய்ய மாட்டார்களாம். மறுபடியும் ஒரு சென்னைப்பயனம் செய்யவேன்டியதாயிற்று.சென்னை டூ ஈரோடு கோவை எக்ஸ்பிரசில் அருமையான் பயனம், வண்டி முழுவதும் நடந்து நடந்து, தோசை, மசால் வடை, அனைத்தும் வாங்கி, கதவோரம் நின்று அருமையாக காற்று வாங்கி ஈரோடு வந்து சேர்ந்தோம். ( அது சரி ஏன் அமெரிக்க டூ இந்தியா ரயில் இல்லை)

பிற்பாடு பெட்டியை எடுக்க ஒரு பிரளயமே நடத்த வேன்டியதாயிற்று அதற்கு செலவு செய்த தொகை பெட்டியில் உள்ள மதிப்பை விட அதிகம் ஆயிற்று. பின்னாளில் ஏற்ப்பட்ட விபத்து , மருத்துவமனை அனுபவங்கள், டிக்கட் ரீகன்பார்ம் செய்ய அலைந்தது என்று நிறைய எழுத ஆசைதான், ஆனால் அது ரொம்ப சுயபுரானம் ஆகிவிடும். ஆதாலால் எழுத்து பிழையுடன் படித்ததற்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

11 comments:

யாத்ரீகன் said...

sometimes.. the travel becomes horribly memorably by such things.. pathetic..

Anonymous said...

ஏங்க, அதென்னா ஏர் இந்தியா பேர போட்டவரு, அமெரிக்காவுல நீங்க டிக்கட் வாங்குன ஏர்லைன் பேர விட்டுபோட்டீங்க... சொன்னா நாங்களும் உசாராயிடுவோமில்ல!

Beemboy-Erode said...

மரந்து போச்சு, அந்த ஏர்லைன்ஸ் பேரு கேத்தே பசிபிக்

வருகைக்கு நன்றி யாத்ரிகன், மற்றும் டவுசர்

வால்பையன் said...

//அலைகடலென திரன்ட ஈ-மெயில்கள் எங்கே பாகம் இரண்டு எனகேட்டு இருந்தார்கள்.//

வர வர உங்களுக்கு நல்லாவே பொய் சொல்ல வருது!

வால்பையன் said...

//அவர் How to deal Angry Customers என்ற புத்தகத்தை படித்து கொன்டிருந்தார்.//

நீங்க வரப்போற விசயம் காத்து வாக்கில வந்துருச்சு போல

வால்பையன் said...

//மற்றொரு பணிப்பெண் சாரயக்கடை தள்ளி கொண்டு வந்தார்.//

கொச்சைவார்த்தைகள் வேண்டாம்,
மனிதனின் துக்கங்களை வாங்கி கொண்டு சுகத்தை மட்டும் தரும் மது கடவுளுக்கு சமமானது

வால்பையன் said...

//அது சரி ஏன் அமெரிக்க டூ இந்தியா ரயில் இல்லை//

இந்த தடவையும் புஷ்சே அதிபரா வர ஒரு வாய்ப்பு தந்திருந்தா கண்டிப்பா போட்டுரிப்பார், ஏன்னா அவருக்கு இந்தியா மேல அம்புட்டு பாசம்

வால்பையன் said...

//பின்னாளில் ஏற்ப்பட்ட விபத்து , மருத்துவமனை அனுபவங்கள், டிக்கட் ரீகன்பார்ம் செய்ய அலைந்தது என்று நிறைய எழுத ஆசைதான், //

கால் ஒடிந்து வீட்டிலேயே விட்டதை பார்த்து அமர்ந்திருந்த போது தோன்றிய எண்ணங்களை எழுதினால் சந்தோசமடைவேன்!

நிறைய தத்துவங்கள் தோன்றியிருக்குமே!

Anonymous said...

//மரந்து போச்சு, அந்த ஏர்லைன்ஸ் பேரு கேத்தே பசிபிக்//

ரொம்ப டேங்கஸ், ஆனா எனக்கு பெர்சா யூஸ் இல்ல ஏன்னா நான் அட்லாண்டிக் வழியாய் போற ஆளூ!

Beemboy-Erode said...

டவுசர்பையன் : நாங்க பசிபிக் வழியா போற ஆளுங்க சார், இந்த சைடுல இது கொஞ்ஜம் சீப்...காசு போனாலும் பரவாயில்லை என்று இனிமேல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தான் பெஸ்டு என்று தோனுது.

(ஆனாலும் டிக்கட் புக் பன்னும் போது எது சீப்போ அதுலதான் போக தோனுது..என்ன மனசு சாமி இது சீ..சீ)

Beemboy-Erode said...

வால்பையன் said...
\\வர வர உங்களுக்கு நல்லாவே பொய் சொல்ல வருது!//

பின்னே மொக்கைக்கு அழகே பொய் தானே? (மனசாட்சி தொட்டு சொல்லுங்க நீங்க 2 ம் பாகம் சீகிரம் எழுதுங்க என்று?)

//கொச்சைவார்த்தைகள் வேண்டாம்,
மனிதனின் துக்கங்களை வாங்கி கொண்டு சுகத்தை மட்டும் தரும் மது கடவுளுக்கு சமமானது//

அப்பறம் என்ன மதுக்கடவுள் என்று ஒரு போர்டை போட்டு கடை திறந்துடலாமா?

(காஞ்ஜிகோயில் போகும் வழியில் ஒரு கோயில் இருக்குமே அங்க கற்பூரம் மட்டும் தான் காட்டுவாங்க, செம சேல்ஸ் ஒவ்வொரு வாரம் வியாழன் அன்று)

அந்த மாதிரி மதுக்கடவுள் போட்டு சனிக்கிழமை ஸ்பெசல் போட்டுடலாம்

//கால் ஒடிந்து வீட்டிலேயே விட்டதை பார்த்து அமர்ந்திருந்த போது தோன்றிய எண்ணங்களை எழுதினால் சந்தோசமடைவேன்!//

அடபாவி மனுசா ஒரு போல்டு 2 நட்டு போட்டு வச்சிருந்தாங்க அதுக்கு போயி கால் உடன்ஜி போச்சுனு கத கட்டி விடுரீங்களே...இருங்க கருங்கல் பாளையத்தில் இருந்து ஸ்டீல் ரவி-- ய அனுப்புரேன்.

//நிறைய தத்துவங்கள் தோன்றியிருக்குமே//

தத்துவம் எல்லாம் ஏதும் வரவில்லை. ஆனல் திரும்பி வரும் போது சின்னதிரை நட்சத்திரத்திடம் விமானத்தில் ஒரு ஒரு சின்ன சன்டை தான் நடந்தது.