29 Dec 2008

வால்பையனின் பொய்யும்-புரட்டும்

நம்ப வால் பையன் ஒரு பதிவிட்டு இருந்தார் அது இங்கே.

அவர் சொன்னபடி ஆனந்த விகடன் அவருக்கு சோப் அனுப்பியிருந்தால் அந்த சோப்பின் படம் எங்கே? ஹா..ஹா.

நடந்தது என்னவென்றால் அபிராமி தியேட்டர் எதிர் சந்தில் உள்ள டாஸ்மார்க் கடைக்கு சென்று வந்ததில் ஏற்ப்பட்ட மயக்கத்தில் எழுதிய பதிவு. இது தெரியாமல் அவரது மொக்கைக்கு சீரியஸான பின்னூட்டங்கள்... பின்னூட்டத்தை பார்த்து மேலும், மேலும் மருத்துவர் ராமதாஸின் கோபத்திர்க்கு ஆளாகிறார்.

உங்களுக்கு தெரியுமா? வால் பையனின் புதுவருட சபதம் என்ன வென்று? சரியாக கூறினால் ஒரு பரிசு உன்டு...

21 Dec 2008

Marathon-08

கலிபோர்னியா தலை நகர் சாக்ரமென்டோ வில் இரண்டு வாரங்களுக்கு முன் மாரத்தான் போட்டி நடைபெற்றது. அதிலிருந்து சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

யார் இவர்?

12/21/2008 8:58:25 AM 122.164.183.66 CHENNAI, TAMIL NADU (INDIA)

இன்று யார் யார் எனது மொக்கயை பார்ப்பதற்கு வந்துள்ளார் என்று IP to track அவரிடம் விசாரித்தால் அவர் மேலே கண்ட ஐ.பி என்ணை அளித்து.. பார் அவர் பல முறை (50க்கும் அதிகமான) உன்னை வந்து பார்த்துள்ளார்...அவருக்கு உனது நன்றி-ஐ தெரிவிக்கவும்.

Whoever it may be thanks for vising more then 50 times. (நெஜமா அவ்ளா மொக்கையா இருக்கா என்னா?)

அது சரி இப்ப இந்த மொக்கை எதுக்குனு கேட்கிறவங்களுக்கு? ஹி..ஹி...100 வது மொக்கை தொட இன்னும் கொஞ்ஜம் தான் கம்மியா இருக்கு.ஹி..ஹி..ஹி

20 Dec 2008

கிருஸ்துமஸ் விளக்கு அலங்காரங்கள்

அமெரிக்கவில் விடுமுறை காலம் ஆரமித்து விட்டது, மோசமான பொருளாதாரம் சற்றே மக்களை சோர்வடைய வைத்துவிட்டது. அன்பளிப்புகள் அளிப்பது குறைந்துள்ளது அல்லது விலை குறைந்த அன்பளிப்புகள் வழங்குகிரார்கள். பெரிய பெரிய கம்பெனிகள் 22.DEC- 08 முதல் 05.Jan.09 வரை விடுமுறை அளித்துள்லார்கள். காஸ்ட் கட்டிங்?

சாக்ரமென்டோ சிட்டியில், பேர் ஓகஸ் முடியும் இடத்திலும், போல்ஸம் ஆரமிக்கும் இடத்திலும் உள்ள வால் நட் அவென்யுவில் (In Madison avenue Between Fair Oakas and Folsom)உள்ள ஒரு 20 வீடுகள் மின் விளக்குகளால் அருமையாக அலங்காரம் செய்துள்ளார்கள். இதை பார்ப்பதற்க்கு நிறைய பேர் வண்டி கட்டி கொண்டு வருகிரார்கள். நானும் வண்டி கட்டி கொண்டு போய் பார்த்தேன் வாவ்...கூல்.....சோ பியுட்டிபுல்...















Santa in Hawaii?


Is Santa in rest?

Count Down to x-mas?


ஒரே ஒரு பிரப்ளம் என்ன வெண்றால் பார்க்கிங் மற்றும் அந்த இடத்தை அடைய நிறைய நேரம் வரிசையில் போக வேன்டியுள்ளது. நிறைய கார்கள் , நிறைய மக்கள், பொறுமையாக இருந்தால் அருமையான் அலங்காரம் செய்த வீடுகளை பர்க்கலாம்.

17 Dec 2008

வாழ்த்துக்களும்/ விளம்பரங்களும்

சில வருடங்களுக்கு முன்னால் தினமலர்-ல்(ஈரோடு பதிப்பு) வரும் விளம்பரங்கள் கவனத்தை ஈர்த்தது, அதாவது யராவது வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றாலோ அல்லது கருத்தரங்குகளில் கலந்து கொண்டாலோ வாழ்த்தி அனுப்பும் வரவேற்கும் விளம்பரங்கள் அதிகம் இருக்கும். அப்போது மக்கள் குறைவாகத்தான் விமானப்பயணம் செய்தார்கள்.(1990- 1998)உதாரனமாக இன்று கிழக்காசிய நாடுகளுக்கு சுற்று பயனம் மேற்கொள்ளும் எனது மருமகன் xxxxxxxx அவர்களை வாழ்த்தி வழியனுப்பும்
மாமனார் xxxx மாமியார் xxxxx கொழுந்தியா xxxxxx சித்தப்பா xxxxxx சித்தி xxxxxx
மாமா xxxxxx மற்றும் உறவினர்கள். என்று ஒரு விளம்பரம் வரும், 4 தினங்கள் கழித்து இன்று சுற்றுப்பயனம் முடித்து தாய் நாடு திரும்பும் எனது xxxxxxx வாழ்த்தி வரவேற்கும் xxxx
என்று ஒரு விளம்பரம் வரும்.

சில விளம்பரங்களில் கருத்தரங்க்கிற்கு செல்லும் எனது அலுவலக தோழர்xxxx அவர்களை வாழ்த்தி/வரவேற்கும் விளம்பரங்கள் வர ஆரமித்தது.பின்னாளில் டாட்காம் பெரும் வளர்ச்சியை சந்தித்த போது வாரத்திற்கு 3 விளம்பரங்கள் வர ஆரமித்தது.அந்த விளம்பரங்கள் இவ்வாரு இருந்தது.பணி நிமித்தமாக இன்று அமெரிக்கா செல்லும் எனது xxxxx தனது பனியில் சிறப்பித்து சீருடன் விளங்க வாழ்த்தும்-

மாமனார் xxxx மாமியார் xxxxx கொழுந்தியா xxxxxx சித்தப்பா xxxxxx சித்தி xxxxxx
மாமா xxxxxxx.

1) இந்த வருடம் இந்தியா சென்ற போது பார்த்த விளம்பரங்கள் சற்றே வித்யாசமாக இருந்த்து, அதாவது அமெரிக்காவில் உல்ள --- யூனிவர்சிட்டியில் மேல் படிப்பு முடித்து இன்று பணியில் சேரும் எனது அண்ணன் மகள்------ அவர்கள் பணியில் சிறப்பிக்க வாழ்த்தும்----------.

2)பணி நிமித்தமாக சென்றவாரம் நெதர்லாந்து சென்று இன்று அங்கிருந்து நியூசிலாந்து செல்லும் எனது-----அவர்களை வாழ்த்தி அனுப்பும்------

3)பணி நிமித்தமாக 7 வது முறையாக அமெரிக்கா செல்லும்----அவர்களை வாழ்த்தி வழியனுப்பும் ------

ஐ.டி என்ற துறை வந்த பிறகு நிறைய பேரு விமானப்பயனம் மெற்கொன்டுள்ளனர், அவர்களும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்லவேண்டியுள்ளது, ஒவ்வொருமுறையும் இவ்வாறு விளம்பரம் செய்தால் (புகைப்படத்துடன், டை கட்டிக்கொண்டு)அது அவர்களுக்கு சங்கோஜமாக இருக்காதா?