14 Nov 2007

காதல் கடிதம் படித்த அனுபவம்..

உங்களில் யாராவது காதல் கடிதம் படிச்சிருக்கீங்களா.என்னமோ தெரியல் எனக்கு இது திடீர்னு நியாபகம் வந்தது.

வருடம் சரியாக நினைவில்லை, அப்பொழுது ஈரோட்டிலிருந்து வேலைக்கு திருப்பூர் சென்றுகொன்டுருந்தேன். காலை 9.13 க்கு கிளம்பும் KR&CO (Mettur-Thirupur)பஸ்ஸில் தான் தினமும் பயனம், தினம் போவதால் நடத்துனர் சாமிநாதன் மற்றும் இன்னொருவர் (பெயர் மறந்துவிட்டது)நல்ல பழக்கம்.

ஈரோடு பஸ்டான்டில் ஏறும் உ, சு, ரா வேளாளர் மகளிர் காலேஜில் 2m ஆன்னு படிச்சாங்க.ஒருவர் உயரம், ஒருவர் சராசரி, ஒருவர் வருசம் 16 குஸ்பு கனக்க்கா இருப்பாங்க, ஆனா கலர் கம்மியாக இருந்தாலும் நல்ல லட்சனம்.

இவர்கள் அந்த பஸ்ஸின் தேவதைகள்.இவர்களுக்கு என்று பஸ்ஸில் ஒரு இளைஞர் பட்டாளம் சும்மா காலேஜ் வரை டிக்கட் எடுத்டுகொன்டு வருவார்கள்.அதில் ஒருவர் ஒரு பெண்னுக்கு கடிதம் கொடுத்துவிட்டார் (ஒரு 20 வருடம் முன்பு, இப்பலாம் லெட்டர் கொடுக்குறாங்களா என்ன?). அவர் அந்த கடிதம் வாங்கிகொண்டு இறங்கும் போது நம்ப frined Conductor கிட்ட கொடுத்து ******* யிடம் இதை கொடுத்துடுங்கனு காலேஜ் போய்ட்டாங்க.( அவங்க அத பிரிக்க கூட இல்ல, கொடுத்த நபர் கொடுத்ததும் இறங்கிவிட்டார்).

வண்டி பெருந்துறை தான்டியது, சிறிது கூட்டம் குறைந்தது, பின் விஜயமங்களம் தான்டியதும் almost வண்டிகாலி, வண்டி பெருமாநல்லூர் போகும் பொழுது நம்ப friend conductoreவந்து பீமா ****** அவன் அந்த ****** கிட்ட இந்த லெட்டர் கொடுத்துருக்கான் அந்த பொன்னு திருப்பி கொடுத்துடுச்சி, லெட்டர் என்கிட்டதான் இருக்கு படிக்கிறீங்களானு கேட்டாரு, என்க்கு அதுவரை யாருடைய கடிதம் படித்தது இல்லை எனக்குனு வந்தா படிப்பேன், வீட்டில் யாருக்கு வந்தாலும் அவங்கம் மட்டும் தான் படிப்போம் இப்படியே வளர்ந்து விட்டோம். அதனால் இல்லீங்க அப்படீனு சொல்லிட்டேன்.

காதல் கடிதம் அது வரை எழுதியதும் இல்லை, படித்ததும் இல்லை அவரிடம் சொல்லியபிறகுதான் அடடா வந்த சான்ஸ மிஸ் பன்னிடோமோனு வருத்தபட்டேன், சரி மறுபடியும் கேட்டால் சரினு சொல்லலாம்னு இருந்தேன்.வண்டி பு. புளியம்பட்டி தான்டிய பிறகு பக்கத்தில் வந்து அமர்ந்த நன்பர் அவர் பாட்டுக்கு லெட்டர பிரித்து படிக்க ஆரமிதுவிட்டார், அது ஆங்கிலத்தில் இருந்தது. என்னிடம் இதுக்கு என்னா பீமா அர்த்தம்னு கேட்க நான் இதுதான் சமயம் என்று அந்த கடிதம் வாங்கி படிக்க ஆரபித்தேன்.

Dear ******அப்படினு ஆரமித்து எதோ ஒரு ஆங்கில கவிதையில் இருந்து காப்பியடிக்கபட்டிருந்தது, ஆனால் சுத்தமாக சேர்க்க வெண்டிய இடத்தில் அவளின் பெயர் மலருடன் இனைக்கப்பட்டுருந்தது.அருமையான கவிதை நடை மற்றும், மிகவும் உயர்வாக ரசிக்கும் படி இருந்தது.

படித்து முடித்து அவரிடம் கொடுத்து சிரித்தேன். எதுக்கு பீமா சிரிகீரீங்கனு கேட்டார், நான் இப்பதாங்க முதன் முதலா ஒரு லெட்டர் படிக்கிறேன் இவ்படிதான் எழுதுவாங்களானு தெரியாது அதான்னு .காலங்கள் ஓடியது அவர்கள் இருவரும் காத்லிக்கவில்லை, படிக்கும் கடைசி செமஸ்டரில் அவளுக்கு திருமணம் நடந்தது. அந்த பையனை பின்னாளில் அடிக்கடி பார்க்க நேர்ந்தது, வசாரித்ததில் அவர் ஒரு தியேட்டர் அதிபரின் பையன் என்றும், சிறிது காலத்திற்கு பின் பேப்பரில் 4 பக்க அளவில் விளம்பரத்ஹ்டுடன் திருமனம் செய்துகொன்டார் அந்த திருமனத்திர்கு நம்ப Conductore friendசென்று வாழ்திவிட்டுவந்தார். பின்னாளில் அவர் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்தது தெரியும் ஆனால் என்னவானார் என்பது தெரியவைல்லை.


எழுத்து பிழைகளுக்கு வருந்துகிறேன்.

1 comment:

Anonymous said...

Hello,

I visited your site…and I was impressed!
Beautiful work.
Take also a look at my website…thanks and kind regards.
www.silverdreamer.be