16-Nov-2007

நீங்க I.T ஐ. டீ ல இல்லையா?

நீங்க ஐ. டீ ல இல்லையா? சந்தோசபடுங்க மக்களே, ஆமாங்கா நெசமாத்தான் சொல்லுறேன்...நம்ப கோவாலும், ராசாத்தியும் நேத்து காலைல மேரிக்கவுல ருந்து வந்துட்டாங்க. அவிக ஊட்டுல பேசுனத கேட்டேன்கா...அவங்க சம்பளம் சாஸ்தி வாங்கினாலும் நம்பல மாறி சவுரியமாவா இருக்கா? அவிக சம்பாரிசாலும், ஊட்டு வேலைக்கு ஆள வெக்கமுடியுமா? அவுகதான் கக்கூசு கிளின் செய்யோனோம், கக்கூசு போனா தொடைக்குற பேப்பர காசு போட்டுதான் வாங்கனுமாம்,பாத்தூரூம் அவிகதான் கிளீன் செய்யோனோமா, அவிகதான் வாரம் ஒருக்கா தொவிக்னுமாமே, கன்றாவி நாத்தம் அடிக்காது? அவிகதான் சமைக்கனும், எனனாத்த காலையில் சாப்பிடுறாக அந்த காஞ்ஜி போன எதொ சீரியலாமே,பொறவு மத்யானம் நம்ப சாப்பாடு சாப்டமுடியாதமே ஏதோ பன்னுல கீர வெச்சி துக்குலூன்டு சாப்பைடுவாகளாம், பொறவு நைட்டுக்கு வந்துதான் சாதம் சாப்புடுவாளாம்.என்ன கிரகமோ போ தெரியல...பேசாம் இந்த வேலைக்கு காட்டுல நின்னு கணக்கு பாத்துட்டு போலாம்,


//சாஃப்டுவேரு இஞ்சினியருங்க சம்பளம் அதிகம் வாங்கனாலும் வாங்கறாங்க. வீடு விலை ஏறிபோச்சி, வாடகை ஏறிபோச்சி, ஹோட்டல பில்லு ஏறி போச்சி, பஸ் டிக்கட் ஏறிபோச்சி, தியேட்டர் டிக்கட்ல இருந்து பாப்கார்ன் வரிக்கும் எல்லாமே ஏறிபோச்ச//

ஆமாங்க நாங்க வந்துதான் எல்லாத்தையும் ஏத்திட்டோம், அதுக்கு முன்னாடி வெலையே ஏரல பாறுங்க...பெட்ரோல் வெல ஏறியதால் மற்ற விலையெல்லாம் ஏறிப்போச்சு பெட்ரோல் விலை ஏறதுக்கு நாங்க என்னா செய்யமுடியும்? பொயி OPEC- ல கேளுங்க. தலீவா - ன்னு சினிமா பாக்கதெரியுது இல்ல, அவனுக்கு நீ காசுகொடுத்து விசில் அடிச்சு அவன் ரேட் ஏத்துரல... அப்ப பாப்கார்னுக்கும் டிக்கடுக்கும் வெலை ஏரத்தான் செய்யும்.அவனுக்கு கொடுக்க உங்காசுதான் போகுது.

மக்கள் தொகை ஏற்றம் இருக்கப்ப வீடு பத்தாதுபா, நீறையா வீடு கட்டி விடு ஆட்டோமேட்டிகா வீடு வாடகைலாம் கொறைஞ்ஜிடும். (Here you have to think this, Low production high price, think this way huge production resanable price)

//அவன் சம்மளம் ஜாஸ்தி வாங்குரான்//

அமாம்பா ஆமாம்... அவன் சம்பளம் ஜாஸ்திதான், ஆனா அவன் எவ்லோ கஸ்டபடுறான் தெரியுமா? முதல்ல கூகிள்-ல தேடனும், அப்பால தேவையானதை மட்டும் எடுத்து காப்பி/பேஸ்டு பன்னனும் அதுவும் கரீட்டா பன்னனும் இல்லாட்டி வேலை காலி. (இங்க நீ கொஞ்ஜம் நெனைச்சிபாருபா...டாக்டரு எதாவது மாத்தி வெச்சிட்டா உடம்பு கலீஜாயிராது, அது போல்தான் இதும்)

தேடுரப்ப கிடைக்கிலனா அவனா எலுதனும்பா, மூலைய கசக்கி, பிஸ்கி தேடு, தேடுனு தேடி, புக்குபட்சி, அல்லார்கிட்ட பேசி,ஓசனை பன்னி,எல்பு கேட்டு... கோடு எள்தி ...அத்த சரிகட்னும்பா....இம்மாம் கஸ்டப்பட்டு அவன் எள்துரான் இல்ல.... அவனா அத்த ஊஸ் பன்னுரான்?, நாமதான் உக்காந்து Online banking, Online reservation, Online shopping, Fun chat அப்டீனு ஊஸ் பன்னுரொம்பா.

இம்மாம் கஸ்டப்டுர பெய்ன போயி துட்டு சாஸ்தி வாங்கரனு கோச்சுகளாமா? ஏன் நீ வாங்குல ஒரு ஸ்குரு திருப்பிட்டு 100 ரூபா கேட்ட
எதுக்கு நைனா இம்மாம்னு கேட்டப்ப ...எந்த ஸ்குரு டிருப்புனும்னு உன்க்கு தெரியல இல்ல அப்ப கேட்ட காஸ கொடுனு நீ கேக்கல, மன்சாட்சி தொட்டு சொல்லுப்பா, அப்பறம் அந்த புள்ளான்டான மட்டும் கோச்சுகுர..

//நீங்க 10...12 மணி நேரம் வேலை செய்துவிட்டு Stress, Stress என்று புலம்புவீர்கள், 8 மணி நேரம் மேல் வேலை செய்ய முடியாது என்று உங்களால் கூறமுடியாது, காரணம் பணம் ஒரு கூலி தொழிலாளி கூட 8 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்ய முடியாதுனு கூறிவிடுவார், அவருக்கு தெரியும் அது உடல் நலத்தை கெடுக்கும் என்று.//

நாங்க படிக்கும் காலத்தில் வேலை செய்யும் இடத்தில் வாங்குற காசுக்கு வக்கனையா உழைனு சொல்லிருக்க்காங்க, அதே போலதான் காற்றுள்ல போதே தூற்றிகொள்னு சொல்லிருக்காங்க.அதுக்கு ஏத்த மாதிரிதான் நாங்க வாழரோம்னு சொல்லுறாங்க. எல்லா நாளும் நாங்க 10- 12 மனி நேரம் உழைப்பதில்லை, அவசியம் கருதிதான் சில நேரங்களில் அதிக நேரம் உழைக்கிறோம், மற்ற நேரங்களில் வேலப்பளு அதிகம் தான் அது தான் எங்கள் தொழில்.

எனக்கு கூடதான் பஸ் ஓட்டுபவரை பார்த்தால் ஆச்சிரியமாக இருக்கும்
இவ்ளோ பெரிய பஸ்ஸ எவ்லோ கேர் புல்லா ஓட்டுராரேனு...

பேங்க் கேஷியர பார்க்கும் போதுலாம் ஆச்சிரியபடுவேன் எவ்லோ காச கணக்க்க வெச்சிருகாரேனு ...டூர் போய்ட்டு வந்தா மக்களுக்கு காச கணக்கு பார்த்து சொல்லுவதற்குள் தாவு தீர்ந்திடும்.

அதெல்லாம் அவங்க தொழில் அத விரும்பி செய்யுராங்க...அதுமாதிரிதான் இதுவும்.

//இந்த சாப்டுவேர் மக்களால் சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகள் அதிகம்//.

இது அவங்களா தேடிக்கொன்டது கிடையாது...சமுதாயம் அவர்களுக்கு அளித்துள்ள மாற்றம்.

ஒரு சிறு உதாரனம் சொல்ல விரும்புகிறேன்...சில வருடங்களுக்கு முன் பாதங்கள் வலிகிறது என்று மருத்துவரிடம் சென்றேன் அவை சோதித்துவிட்டு ஸ்பெசல் செருப்பு ஒன்று அனிய வேன்டும் என்று கூறிவிட்டார். சரி என்று ஈரோடு- கருங்கல்பாளையம்- ராசாசி நகரில் இருக்கும் ஒரு செருப்பு செய்யும் தொழிலாலியிடம் சென்று மருத்துவர் கூறியதை சொல்லி காலனிக்கு ஆர்டர் கொடுத்துவிட்டுவந்தேன், அவர் கூறிய விலையும் அதிகம் சாதாரன பாட்டா செருப்பை விட 25 மடங்கு விலை அதிகம், கேட்டதற்கு இது ஒர் ஸ்பெஸல் ரப்பர் மற்றும் அவரை தவிற யாரும் அதை செய்வதில்லையாம், அவரும் 4 தினங்கள் கழித்து கொடுப்படாக சொன்னார். அந்த 4 தினங்கள் வ்ருவதற்குள்
பாதங்களில் வலி மரனக்கொடுமை என்று சொல்லுவார்களே அந்த அளவிற்கு போய்விட்டது.நான்காவது தினம் மதியம் சென்று கேட்ட போது செருப்பு ரெடியகவில்லை என்றும் இன்னும் ஒருவாரம் ஆகும் என்று கூறிவிட்டார் ஏன் என்று கேட்ட போது வேளக்க்கு ஆள் வரவில்லை என்றும் இன்றிலிருந்து 3 நாட்கள் கடை விடுமுறை என்றும் கூறிவிட்டார். ஏன் என்று கேட்டதற்கு சொந்தகாரர் செத்துட்டார் அதனால் லீவுனு சொன்னார். எவ்வளேவோ கேட்டு பார்த்தும் அவரிடம் இருந்து அந்த செருப்பை அன்று வாங்க முடியவில்லை...10 தினங்கள் Pain Killer உதவியுடன் தான் வாழ்ந்தேன்.
இந்த இடத்தில் கொஞ்ஜம் யோசனை பன்னுங்களேன்...இறந்தவர் போயிட்டார், போனமா துக்கத்தில் பங்கெடுத்தோமா, மூக்கை சிந்திட்டு வந்தோமானு இல்லாம் அவர் பேர சொல்லிட்டு இவர் 3 நாள் தன்னியடிசிட்டு கவுந்து கிடப்பாராம். இதனால என்ன செத்தவர் திரும்பியா வந்துட போறார்?

அவரால் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு ஏன் வர முடியவில்லை..உழைக்க தயாரால்லை, இறந்த மனிதரின் பேரில் பழியை சுமத்தி 3 நாள் வருமானத்தை இழந்தார்.

சாப்டுவேர் காரங்க இந்த மாதிரி இருக்கமுடியுமா? ஒருமணிநேரம் Online Reservation website வேலை செய்யலனா ங்...தா எனன எழவுடா இந்த website
என்னத்த கிழிக்கறானுங்க....சம்பளம் வாங்குரான் இல்ல அப்படினு திட்டறோமா இல்லையா?

மக்களே சாப்டுவேர் ஒன்னும் கம்பசூத்திரம் இல்லை வாங்க, கத்துகிட்டு வாங்க, நீங்களும் அள்ளுங்க சந்தோசமாவும், அதே நேரம் சாக்ரதையாவும் இருங்க.


(அப்பவும் சாப்டுவேர் மக்கள் இப்படி எழுதுவாங்க ஒன்னும் தெரியாதவன் எல்லம் கோடு எழுதவந்துட்டான் இவனுங்களால சம்பளம் கொறைஞ்ஜி போச்சுனு.)

இப்படிக்கு சாப்டுவேர் தொழில் சார்ந்து நிற்கும் சாதாரன் தொழிலாளி.

7 comments:

ILA(a)இளா said...

:)

PRK said...

// மக்களே சாப்டுவேர் ஒன்னும் கம்பசூத்திரம் இல்லை வாங்க, கத்துகிட்டு வாங்க, நீங்களும் அள்ளுங்க சந்தோசமாவும், அதே நேரம் சாக்ரதையாவும் இருங்க. //

இத விட கொடுமை வேற இல்லை!

உறையூர்காரன் said...

புதுசா சொல்றதுக்கு ஒண்ணும் இல்லீங்கோ!

ஏற்கனவே ஊருக்கு இளைத்தவன் சாப்ட்வேர்காரன் , சாப்ட்வேர்காரனா? - விடாதே அவன! னு சொன்னதுதாங்க!

ஆனாலும் கண்ண மூடிக்கிட்டு ஐயோ உலகம் இருட்டிக்கிச்சேனு புலம்புனா நாம என்னங்க பண்ணமுடியும்

Beemboy-Erode said...

வாங்க இளா, பி.ஆர்.கே, உறையூராரே வருகைக்கு நன்றி.
நம்ப இளா எப்பவும் ஒரு ஸ்மைலி தான். ( ஊருக்கார பய என்ற பாசம் தான்)

PRK இத விட கொடுமைலாம் இருக்குங்க..

ஏனுங்க வந்தாரை வாழவைக்கும் தமிழகம் மாதிரி, வந்தாரை வாழவைக்கும் தொழில் தானுங்க சாப்ட்வேர்.

Anonymous said...

//கக்கூசு போனா தொடைக்குற பேப்பர காசு போட்டுதான் வாங்கனுமாம்//

நக்கலுக்கு அளவே இல்லாம போச்சு, ஏன் கழுவமுடியாதா?

தஞ்சாவூரான் said...

//மக்களே சாப்டுவேர் ஒன்னும் கம்பசூத்திரம் இல்லை வாங்க, கத்துகிட்டு வாங்க, நீங்களும் அள்ளுங்க சந்தோசமாவும், அதே நேரம் சாக்ரதையாவும் இருங்க.//

ரிப்பீட்டேய்... சீக்கிரம் அள்ளுங்க. இந்த நிலை சீக்கிரம் மாற வாய்ப்பிருக்கு!

முரளி கண்ணன் said...

போதும்பா நிறுத்தீருங்க. அடி வாங்கி வாங்கி, அழுதுருவேன்