சன்ரைஸ் புலவாட், சன்ரைஸ் மாலில் உள்ள சியர்ஸ்
( Sunrice Blvd, Sunrice Mall, Sears ) கடையின் பார்கிங் லாட்டில் ஒவ்வொரு சனிக்கிழமை காலை 7 மணி முதல் மதியம் 12 வரை உழவர் சந்தை இருக்கும். நிறைய உழவர் சந்தைகள் இருக்கிறதாம், 65 th street, புளோரின் ( Florin) ரோடு மற்றும் பல இடங்களில் உள்ளதாம்.
ஒருசனிக்கிழமை காலையில் நானும் நன்பரும் சென்றுவந்தோம், கடைகள் டென்டு போட்டு தான் வைத்துஇருக்கிரார்கள். அனைவரும் விவசாயிகள், மற்றும் அவர்கள் குடும்பத்தார்கள் தான். அதிசியமாக பார்ம்மில் வேலை செய்யும் சில ஸ்பானிஷ் வேலையாட்களை இருந்தார்கள்.
விவசாயிகளிடம் பேசியபொழுது நம்நாட்டு விவசாயிகளை போலவே புலம்பல்தான். ( மழை இல்லையாம், இந்த வருடம் ( Drout) டிரவுட்-ம், வேலைக்கு ஆட்கள் பற்றாகுறை, உற்பத்தி செலவு அதிகம், ) இதையெலாம் மீரி வருட மொத்த வருமானமே 70, 80-k தானாம்.
(அடப்பாவிகளா copy & Paste செய்ரவங்களுக்கு இதைவிட ஜாஸ்தியா கிடைக்குதே)
அது சரி இவங்களுக்குலாம் டேக்ஸ் கிடையாது. Copy & Paste செய்ரவங்க நிறைய டேகஸ் கட்டுராங்க.
( அப்பாடா யாரும் திட்டமாட்டிங்க தானே).
இவர்களின் கல்வி அறிவு பற்றி பின்னாளில் எழுதலாம் என்று இருக்கிறேன், இது சம்பந்தமாக சிலரிடம் பேசிகொன்டு இருக்கிரேன்.
கேரட், முள்ளங்கி, வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், ஆரஞ்சு, ஆப்பிள், தேன், சீஸ், தர்பூஸ், சலரி, லீக்ஸ், காளான் கீரைககளனைத்தும் கிடைக்கிறது. விலையும் சரியான சீப்புதான்....நன்பரின் குடும்பம் பெரியது என்பதால் நிறய அள்ளி போட்டுகொண்டு வந்தோம்.
எல்லாம் வாங்கிகொண்டு வந்து கணக்கிட்டு பார்த்தால் மொத்தமே 25 டாலர் தான் ஆகியிருந்தது, இதேயே சேப் வே ( SAFEWAY)- ராலி (RALE) யில் வாங்கியிருந்தால் 80- 100 டாலர் ஆகியிருக்கும் என்று கூறினார்.என்ன ஒரே பிரச்சனையென்றால் இவைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும், ( நம்ப ஊர் மாதிரி) Super stores- ல் வாங்கினால் கழுவவேன்டியதில்லை. நன்பரின் வீட்டில் பெற்றோர் இருப்பதால் அவர்களுக்கு இது எல்லாம் ஒரு விஷயமே இல்லை.
அப்படியே பால்ஸம், ஈஸ்ட் பிட்வில் ரோடில் ( Folsom, E.Bidwell) உள்ள கடைக்கு சென்று சிக்கன் வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். இங்கு சற்றே விலை அதிகம் ( பவுன்டுக்கு 10 சென்டு) என்றாலும் நம் ஊர் கடைகளைபோல் தோல் எடுத்து சிறியதாக கட் செய்து கொடுக்கிறார்கள். Safeway- Costco- வில் வாங்கினால், நாம் தான் கசாப்பு கடைகாரர் வேலை செய்யவேண்டும், (பின்னர் அந்த இடத்தை சுத்தம் செய்ய ஒரு அரைமனி நேரம் செலவிட வேன்டும்).
வாங்கிவந்த சிக்கனை பார்( என்னை பார்) ப (படுத்து) கியு (கில்பன்னி சாப்பிடு) BAR B Q செய்து சாப்பிட்ட அனுபவம் பின்னொருநாளில் படத்துடன் போடலாம் என்று இருக்கிறேன், வேன்டாம்னா பின்னூட்டத்தில் சொல்லிடுங்கனா.....( சேம்பிள் சிக்கன் பாருங்க...)