என் பெயர் லேஸ் (என்ன பேரு இதுனு கேட்காடீர்கள் அப்பா வைத்தது) நான் பிறந்தது இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் என்று மட்டும் தான் எனக்கு தெரியும், வளர்ந்தது, படித்தது, கல்யானம் செய்தது எல்லாம் எந்த நாடு என்று தெரியாது ( அவ்ளோ நாடுகளில் வளர்ந்து இருக்கேன்).
நான் பிறந்து சில வருடங்களில் இந்த உலகம் அழிய போகுது என்றும் அதை படித்த முட்டாள்கள் தான் சரி செய்ய முடியும் என்றும் பீகாம் முடித்து இருந்த எனது தந்தை கம்யூட்டர் என்ற மெசினை கற்று கொன்டு இந்தியாவில் இருந்து அமெரிகா வந்துவிட்டார், பலரது உழைப்பு வீன் போகவில்லை, அனைவரும் சேர்ந்து ஒய் 2 கேவில் இருந்து இந்த உலகத்தை காப்பாற்றினார்கள். எனது தந்தையின் உழைப்பு மதிக்கபட்டு படிப்படியாக நல்ல நிலமையில் எங்களை வளர்த்தார், வருடங்கள் அதிகரிக்க அதிகரிக்க நாங்களும் பல நாடுகளில் படித்தோம் (அப்பாவின் வேலை அப்படி, இந்தியாவில் (Bank) பேங் குகளில்/மிலிட்டரியில் வேலை செய்பவர்கள் மாநிலம் விட்டு மாநிலம் மாறுவதை போல) கின்டர் கார்டன் முதல் 4 ம் வகுப்பு வரை அமெரிகாவில், 5 முதல் 7 வரை மெக்ஸிகோவில், 8 முதல் 10 வரை தென் அமெரிகா சிலியில், பின் உகான்டா, மாலதீவு, சிங்கபூர், குவைத் என்று எனது கல்லூரி வாழ்கை விரிந்தது.(அன்டார்டிகா மட்டும் தான் போகவில்லை) நானும் மாலிகுலிஸ் பயாலஜி படித்தேன். இப்போது இருப்பது Brazil. இத்தனை நாடுகளில் சுற்றினாலும் தமிழை மட்டும் மறக்கவில்லை ஏனென்றால் தாத்தா பாட்டியுடன் வளர்ந்ததால்.பாட்டியும், அவரது மகனும் போய் சேர்ந்துவிட்டார்கள், பின் திருமணம் நடந்தது (மனைவிக்கும் பின்னே இதைவிட பெரிய கதை உள்ளது அவர்கள் மூதையார்கள் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர்களாம் ஆனால் அவள் தற்போழுது ஆஸ்திரேலியா சிட்டிசன்)நான் தமிழில் பேசினால் புரிந்து கொள்ள யாரும் இல்லை. ஒருநாள் பேமலி TIME- குடும்பத்தில் அனைவரும் பேசி கொண்டு இருந்தபோது எனது மகள் கேட்டாள் உங்கள் அப்பா யார் என்று.
நான் யார் என்கு இருந்து வந்தேன், எனது மூதையார்கள் எப்படி, என்று எல்லம் விவரித்தேன், அவளுக்கு ஒன்றும் புரியவில்லை
சரி அவள் வயதுக்கு (12) இது எல்லாம் அதிகம்தான். எங்க அப்பா சொல்லுவார் கம்யூட்டர் என்ற் ஒன்று இல்லவிட்டால் ஒரு தலை முறையே இன்னும் இந்தியாவில் அடிமைத்தனமான வேலகளில் தான் இருந்திருக்கும், இந்த கம்யூட்டர் வரவால் நிறெய பேர் வளமான வாழ்கைக்குள் வந்திருக்கிறார்கள்.
இப்போது எனது கவலை எல்லாம் எனக்கு பிறகு எனது பரம்பரை எனன ஆகும் என்று தெரியவில்லை. யாராவது சொல்லுங்களேன்.
புரிந்து கொள்ள யாரும் இல்லை, எனது மகள் பிறந்ததால் அது அவள் தாய் நாடு ஆகிவிடுமா? இந்தியா அவளது நாடு இல்லஎ என்றாகிவிடுமா? நான் எனது கடைசி காலத்தில் இறந்தால் என்ன சடங்குபடி என்னை புதைப்பார்களா? எறிப்பார்களா?
அய்யோ யாரவது வாங்களேன் எனக்கு உதவி செய்ய?
1 comment:
இன்னும் 20 வருசம் இருக்குல்ல! அதுகுள்ள இப்பவே என்ன கவலை! எல்லாம் அப்போ பார்த்துக்கலாம் விடுங்கண்ணே!
Post a Comment