4 Oct 2010

எந்திரன் ப‌ட‌மா ப‌ண‌மா?

எல்லாரும் பேசும் ப‌ட‌ம் இது...நானும் போக‌லாம் என்றால் 20 டால‌ருக்கு டிக்க‌ட்டு . ஆன‌ப‌ட்ட‌ 3டி‍ அவ‌தாருக்கே $12 தான் கொடுத்து பார்த்தேன் $20 க‌ட்டுப‌டியாகாது அத‌னால் ட‌மில்டார‌ன்ட்.காமில் ட‌வுன்லோட் செய்து பார்த்தாகிவிட்ட‌து. பிரின்டு ந‌ல்லாதான் இருக்குது. (த‌ர‌ம் புளுரேக்கு கீழே டி.வி.டிக்கு மேலே)

டைர‌க்ட‌ர் ச‌ங்க‌ருக்கு ச‌ல்யூட்...ந‌ன்றாக‌ வேலை செய்து.....க‌டுமையான‌ வேல‌ வாங்கியிருக்கார்...எந்திர‌ன் ப‌ட‌ டீமுக்கு ஸ்பெச‌ல் ச‌ல்யூட்.

அமெரிக்க‌ டெக்கி ப‌ச‌ங்க‌ நாயை குளிப்பாட்டி ந‌டு வீட்டில் வைத்தாலும் அது அப்ப‌டிதான் ந‌ட‌க்கும் என்ப‌து மாதிரி சூப்ப‌ரா க‌லிஜ் செய்துவிட்டார்க‌ள்.(fact fact and fact) அதுவும் New jersy and New york ப‌ச‌ங்க‌ ரொம்ப‌ மோச‌ம். சான் உசே, சேன்டிகோ ம‌க்க‌ள் கொஞ்ஜ‌ம் டீச‌ன்டாக‌ ந‌ட‌ந்து கொண்டார்க‌ள்.வேறு ஏதோ ஆங்கில‌ ப‌ட‌த்திற்கு போன‌ அமெரிக்க‌ ந‌ன்ப‌ர் அங்கிருந்து போன் செய்து கேட்டார் what is the language, do you speak this language? why these people make noises and whistle on the theatre campus? don't they behave decent...இன்னும் கொஞ்ஜ‌ம் அதிக‌மாவே கேட்டார். நான் இது எங்க‌ பார‌ம்ப‌ரிய‌ம் (the way we celebrate)என்று பொய் சொல்ல‌ வேண்டிய‌தாயிற்று.

Marketing and product promtion ச‌ன் டீவிக்கு கை வ‌ந்த‌ க‌லை. பாட‌ல் வெளியீட்டு விழா, preview விழா, relese விழா and making of Enthiran movie அப்ப‌டினு எல்லாத்திலேயும் ப‌ண‌ம் கொட்டுது.

few bits

திரைப்ப‌ட‌ம் வெளியீட்டு விழா அப்ப‌டினு ஒர் ம‌ணி நேர‌ம் ஓட‌ கூடிய கிளிப்பிங் பார்க்க‌ நேரிட்ட‌‌து, நாம‌கிபேட்டை ம‌ற்றும் ப‌ண‌ப்பாக்க‌ம் ப‌ண்ணாடைக‌ள் (sorry for the language) அல‌கு குத்தி த‌ங்க‌ள‌து மூட‌ ந‌ம்பிக்கியை வெளுப்ப‌டுத்தி சிரிக்க‌வைத்தார்க‌ள் (இவ‌ங்க‌லாம் திருந்த‌வே மாட்ட‌ங்க‌ளா?, ப‌ண‌ம் போட்ட‌வ‌னுக்கு/ந‌டித்த‌வ‌னுக்கு இல்ல‌த‌ அக்க‌ற‌ இவ‌னுக்கு எதுக்கு?)

பாலாபிசேக‌ம், ச‌ந்த‌ன‌ அபிசேக‌ம் கேவ‌ல‌ம்..... ரோபாட்டிக்ஸ் கால‌த்துல‌ கூட‌ இவ‌னுங்க‌ளை திருத்த‌ முடியாது.

க‌ருணாஸ் ர‌ஜினியை விட‌ ஐஸ்வ‌ர்யா ராயை ப‌ற்றி அதிக‌ம் பேசினார்.

ம‌லேசிய‌ த‌மிழ‌ர்க‌ள் டீச‌ண்டாக‌ ப‌ட‌த்தை பார்த்து க‌ருத்து சொன்னார்க‌ள்.

சிங்கை‌ த‌மிழ‌ர்க‌ள் (வ‌ழி வ‌ந்த‌வ‌ர்க‌ள்) அதிக‌ம் அல‌ட்டாம‌ல் அருமையான‌ க‌ருத்துக‌ளை சொல்லிவிட்டு போன‌ர்க‌ள், பொழ‌ப்பு தேடி போன‌ த‌மிழ‌ர்க‌ள் அமெரிக்க‌ டெக்கி த‌மிழ‌ர்க‌ளுக்கு இனையாக‌ ந‌ட‌ந்து கொண்டார்க‌ள்.

பிர‌காஷ் ராஜ் ம‌ற்றும் பார்த்திப‌ன் ப‌ட‌த்தை ப‌ற்றி எந்த‌ ஒரு மிக‌ப்ப‌டுத்த‌ல் இல்லாம‌ல் அழ‌காய் உய‌ர்வாய் பேசினார‌க‌ள்.

எதோ ஒரு ஊரில் ர‌சிக‌ சிங்க‌ங்க‌ளை த‌டியால் அடித்து விர‌ட்டினார்க‌ள் தியேட்ட‌ர்கார‌ர்க‌ள்...பார்க்க‌ ப‌ரிதாப‌மாக‌ இருந்த‌து. அடிக்கும் உரிமையை கொடுத்த‌து யார்?

நிறைய‌ பால் ம‌ற்றும் காய்க‌றிக‌ள் வீண‌க்க‌ப்ப‌ட்ட‌து ர‌சிக‌ர்களால்.

மொத்த‌த்தில் இது ஒரு விருந்து‍ - ர‌ஜினி ர‌சிக‌ர்க‌ளுக்கு
எந்திர‌ன் ப‌ண‌ம் காய்க்கும் ம‌ர‌ம் - ச‌ன் புர‌ட‌க்ஸ்ஸ‌னுக்கு
ச‌ங்க‌ருக்கு இன்னும் ஒரு மெகா ப‌ட்ஜ‌ட் திரைப்ப‌ட‌ம்

7 Jul 2010

குடி அரசு வெளியீட்டுக்கான தடையை நீக்கி நீதியரசர் சந்துரு அளித்த தீர்ப்பு

வ‌லைப்ப‌க்க‌த்தில் தேடிய‌தில் தீர்ப்பின் ஒரு ப‌குதியை ப‌டிக்க‌ முடிந்த‌து அத‌ர்கான‌ லின்க்

குடி அர‌சு இத‌ழ்க‌ள் இல‌வ‌ச‌மாக‌ த‌ற‌விர‌க்க‌ம் செய்ய‌ அனும‌தி அளித்து உள்ளார்க‌ள்

ஏற்க‌னெவே உங்க‌ளுக்கு த்ரிந்து இருக்க‌லாம் இருந்தாலும் ஒரு முறை உங்க‌ளுக்காக‌...

14 Apr 2010

2030-- ல் ஒரு சிறுக‌தை

என் பெய‌ர் லேஸ் (என்ன‌ பேரு இதுனு கேட்காடீர்க‌ள் அப்பா வைத்த‌து) நான் பிற‌ந்த‌து இந்தியாவில் அதுவும் த‌மிழ் நாட்டில் என்று ம‌ட்டும் தான் என‌க்கு தெரியும், வ‌ள‌ர்ந்த‌து, ப‌டித்த‌து, க‌ல்யான‌ம் செய்த‌து எல்லாம் எந்த‌ நாடு என்று தெரியாது ( அவ்ளோ நாடுக‌ளில் வ‌ள‌ர்ந்து இருக்கேன்).

நான் பிற‌ந்து சில‌ வ‌ருட‌ங்க‌ளில் இந்த‌ உல‌க‌ம் அழிய‌ போகுது என்றும் அதை ப‌டித்த‌ முட்டாள்க‌ள் தான் ச‌ரி செய்ய‌ முடியும் என்றும் பீ‍காம் முடித்து இருந்த‌ என‌து த‌ந்தை க‌ம்யூட்ட‌ர் என்ற‌ மெசினை க‌ற்று கொன்டு இந்தியாவில் இருந்து அமெரிகா வ‌ந்துவிட்டார், ப‌ல‌ர‌து உழைப்பு வீன் போக‌வில்லை, அனைவ‌ரும் சேர்ந்து ஒய் 2 கேவில் இருந்து இந்த‌ உல‌க‌த்தை காப்பாற்றினார்க‌ள். என‌து த‌ந்தையின் உழைப்பு ம‌திக்க‌ப‌ட்டு ப‌டிப்ப‌டியாக‌ ந‌ல்ல‌ நிலமையில் எங்க‌ளை வ‌ள‌ர்த்தார், வ‌ருட‌ங்க‌ள் அதிக‌ரிக்க‌ அதிக‌ரிக்க‌ நாங்க‌ளும் ப‌ல‌ நாடுக‌ளில் ப‌டித்தோம் (அப்பாவின் வேலை அப்ப‌டி, இந்தியாவில் (Bank) பேங் குக‌ளில்/மிலிட்ட‌ரியில் வேலை செய்ப‌வ‌ர்க‌ள் மாநில‌ம் விட்டு மாநில‌ம் மாறுவ‌தை போல‌) கின்ட‌ர் கார்ட‌ன் முத‌ல் 4 ம் வ‌குப்பு வ‌ரை அமெரிகாவில், 5 முத‌ல் 7 வ‌ரை மெக்ஸிகோவில், 8 முத‌ல் 10 வ‌ரை தென் அமெரிகா சிலியில், பின் உகான்டா, மால‌தீவு, சிங்க‌பூர், குவைத் என்று என‌து க‌ல்லூரி வாழ்கை விரிந்த‌து.(அன்டார்டிகா ம‌ட்டும் தான் போக‌வில்லை) நானும் மாலிகுலிஸ் ப‌யால‌ஜி ப‌டித்தேன். இப்போது இருப்ப‌து Brazil. இத்த‌னை நாடுக‌ளில் சுற்றினாலும் த‌மிழை ம‌ட்டும் ம‌ற‌க்க‌வில்லை ஏனென்றால் தாத்தா பாட்டியுட‌ன் வ‌ள‌ர்ந்த‌தால்.பாட்டியும், அவ‌ர‌து ம‌க‌னும் போய் சேர்ந்துவிட்டார்க‌ள், பின் திரும‌ண‌ம் ந‌ட‌ந்த‌து (ம‌னைவிக்கும் பின்னே இதைவிட‌ பெரிய‌ க‌தை உள்ள‌து அவ‌ர்க‌ள் மூதையார்க‌ள் த‌மிழ் வ‌ம்சாவ‌ளியை சேர்ந்த‌வ‌ர்க‌ளாம் ஆனால் அவ‌ள் த‌ற்போழுது ஆஸ்திரேலியா சிட்டிச‌ன்)நான் த‌மிழில் பேசினால் புரிந்து கொள்ள‌ யாரும் இல்லை. ஒருநாள் பேம‌லி TIME- குடும்ப‌த்தில் அனைவ‌ரும் பேசி கொண்டு இருந்த‌போது என‌து ம‌க‌ள் கேட்டாள் உங்க‌ள் அப்பா யார் என்று.

நான் யார் என்கு இருந்து வ‌ந்தேன், என‌து மூதையார்க‌ள் எப்ப‌டி, என்று எல்ல‌ம் விவ‌ரித்தேன், அவ‌ளுக்கு ஒன்றும் புரிய‌வில்லை
ச‌ரி அவ‌ள் வ‌ய‌துக்கு (12) இது எல்லாம் அதிக‌ம்தான். எங்க‌ அப்பா சொல்லுவார் க‌ம்யூட்டர் என்ற் ஒன்று இல்ல‌விட்டால் ஒரு த‌லை முறையே இன்னும் இந்தியாவில் அடிமை‌த்த‌ன‌மான‌ வேல‌க‌ளில் தான் இருந்திருக்கும், இந்த‌ க‌ம்யூட்ட‌ர் வ‌ர‌வால் நிறெய‌ பேர் வ‌ள‌மான‌ வாழ்கைக்குள் வ‌ந்திருக்கிறார்க‌ள்.

இப்போது என‌து க‌வ‌லை எல்லாம் என‌க்கு பிற‌கு என‌து ப‌ர‌ம்ப‌ரை என‌ன‌ ஆகும் என்று தெரிய‌வில்லை. யாராவ‌து சொல்லுங்க‌ளேன்.

புரிந்து கொள்ள‌ யாரும் இல்லை, என‌து ம‌க‌ள் பிற‌ந்த‌தால் அது அவ‌ள் தாய் நாடு ஆகிவிடுமா? இந்தியா அவ‌ள‌து நாடு இல்ல‌எ என்றாகிவிடுமா? நான் என‌து க‌டைசி கால‌த்தில் இற‌ந்தால் என்ன‌ ச‌ட‌ங்குப‌டி என்னை புதைப்பார்க‌ளா? எறிப்பார்க‌ளா?
அய்யோ யார‌வ‌து வாங்க‌ளேன் என‌க்கு உத‌வி செய்ய‌?

2 Mar 2010

சுவாமி நித்யான‌ந்தா-வ‌ய‌சுகேத்த‌ விளையாட்டு

watch video at : http://www.youtube.com/watch?v=DLdn_1ip6PI

சீக்கிர‌ம் போங்க‌ இல்ல‌னா வீடியோ ரிமுவுடு அப்ப‌டினு த‌க‌வ‌ல் வ‌ந்துடும்

அவ‌ரை ஏன்யா த‌ப்பா பேசுரீங்க‌? அவ‌ர் வ‌ய‌சுக்கேத்த‌ மாதிரி அவ‌ர் த‌ப்பு செய்திருக்கார். இந்த‌ பைய‌ன் அமெரிக்கா பே‍-‍‍‍ஏரியா வ‌ரும் போதுலாம் சும்மா ப‌க்க‌ம் ப‌க்க‌மாக‌ ப‌க்த‌ கோடிக‌ள் விள‌ம்ப‌ர‌ம் த‌ருவாங்க‌.

என‌க்கு ரொம்ப‌ பிடித்த‌து ச‌ன் டீவியின் பேக்ர‌வுன்டு மிசூசிக்தான்...அட‌ அட‌ என்ன‌மா க‌ல‌க்கிட்டாங்க‌ போங்க‌

24 Feb 2010

முடிய‌லை...எழுத‌ முடிய‌லை

எழுதுவ‌து என்ப‌து ஒரு க‌லை...எழுத‌ எழுத‌ எழுத்துந‌டை ச‌ர‌ள்மாக‌வும் அருமையாக‌வும் வ‌ரும் என்ப‌து ப‌ல‌ருக்கு வேண்டுமானால் உன்மையாக‌ இருக்கும். நானும் எழுதி எழுதி பார்த்தேன் ஒன்னும் வ‌ர‌லை. அதனால் எழுதுவ‌தை விட்டுட்டு வ‌ள்ளுவ‌ர் போல‌ சிறு சிறு துனுக்குக‌ளாக‌ சில‌ நாளைக்கு முய‌ற்சி செய்ய‌ போகிறேன்.

"'கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையை, அழிக்கும் நடவடிக்கைகளில் கொ.மு.க. ஈடுபட்டு வருகிறது. ஈஸ்வரன் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் நீக்கப்பட்டிருக்கிறார்' - ஜினிய‌ர் விக‌ட‌ன்‍ க‌ழுகார் ப‌குதியில்

இது என்னாப்பா புது நியுசா இருக்குது? க‌வுண்ட‌ர் ச‌முதாய‌த்தை சார்ந்த‌வ‌ர் இல்லை என்றால் அவ‌ருக்கு எப்ப‌டி ப‌த‌வி கொடுத்தார்க‌ள்


''அஜீத் வளருகின்ற நடிகர். எந்தப் பின்னணியும் இல்லாமல் சுய திறமையை மட்டுமே நம்பி, திரையுலகுக்கு வந்தவர்- ஜினிய‌ர் விக‌ட‌ன்‍-ல் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இரா.சனார்த்தனம்

இன்னிக்கு சூரிய‌னுக்கு ஜ‌ங் த‌ட்டுனா நாளைக்கு எலைக்கும் த‌ட்டுனுமே...ஒருவேளை புள்ளி விவ‌ர‌ ந‌டிக‌ர் வ‌ந்தால் அப்ப‌ற‌ம் ப‌ம்ப‌ர‌மும் விட‌னுமே....ச‌ரி ச‌ரி ந‌டிக‌னை ந‌டிக‌னா ம‌ட்டும் எப்போ பார்க்க‌ ஆர‌மிக்க‌ போறீங்க‌ளே அப்ப‌தான் திருந்த‌முடியும்... அது ச‌ரி உலகத் தமிழர் பேரவை அப்ப‌டினா என்னாபா?

"ரஜினி நடித்துவரும் 'எந்திரன்' படமும் சரி... அஜீத் நடிக்கவுள்ள படமும் சரி... முறையே சன் டி.வி. மற்றும் அழகிரி மகன் ஆகியோர் தயாரிப்பு என்பதால்... சுற்றி வளைத்து அது ஆளுங்கட்சி தரப்பைப் புண்படுத்துவதாகவே இருக்கும்" ஜினிய‌ர் விக‌ட‌ன்‍-ல்

அப்ப‌ பெரிய‌ இட‌ம் த‌விற்த்து யார் த‌ய‌ரித்தாலும் ச‌ங்குதானா

"இந்த நேரத்துல நம்மளோட பொருளாதார வீழ்ச்சிக்கு நாமளே காரணமா இருந்துடு வோம்ங்கற பயம் வருது" ஜினிய‌ர் விக‌ட‌ன்‍-ல் ஏற்றுமதியாளரான செந்தில்வேல்

இப்ப‌ பாதி நேர‌ம் இதைதானே செய்துட்டு இருக்கிங்க‌...ஓ முழு நேர‌மும் உங்க‌ள‌ அர‌சு செய்ய‌ சொல்லுதா?

"'கோல்டு' ஹீரோயின் ஆன்ட்டியை உடனே பார்த்தாகணும் என சின்னப்படை வீரர் பல சமயம் காணாமல் போகிறாராம். ஜினிய‌ர் விக‌ட‌ன்‍- கிஸ் கிஸ் ப‌குதியில்

ர‌ம்யா கிருஷ்ன‌ண், ப‌ர‌த் ( ந‌ம்ப‌ பிர‌ண்டு ஒருத்தர் சொல்லுவார்) ர‌ம்யா கிருஷ்ன‌ண்= ஓல்டு ஒயின் என்று

"படத்தில் நடித்து சம்பாதித்ததைக் காட்டிலும் அங்கேயும் இங்கேயுமாக பயணம் செய்தே அதிகமாக லாபம் பார்த்துக் கொண்டிருக்கிறாராம் மினரல் வாட்டர் கலாட்டா நாயகி. அவர் பாணியைப் பின்பற்ற கூடல் நாயகியும் சம்பந்தப்பட்ட புள்ளிகளிடம் நெருக்கப் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கிவிட்டாராம்- ஜினிய‌ர் விக‌ட‌ன்‍- கிஸ் கிஸ் ப‌குதியில்

நிலா, ச‌ந்தியா ( இப்ப‌ 2 பேரும் ப‌ட‌த்துல‌ லாம் ந‌டிக்க‌றான்க்க‌ளா என்னா?)


"காம குருக்கள் வழக்கில் சறுக்கல்- கேட்ட ஜாமீன் கிடைத்தது... கோட்டை விட்டது போலீஸ்- " ஜினிய‌ர் விக‌ட‌ன்‍ த‌லைப்பு செய்தி

அப்ப‌டியே ம‌துரை வ‌க்கீல் அங்கிள், என்.டி. திவாரி, வாட‌கை ம‌னைவிக‌ள், அந்தும‌ணி,ம‌ற்றும் ப‌ல‌ரின் செய்திக‌ளை பாலோஅப் செய்தால் ந‌ன்றாக‌ இருக்கும்

நடிகை அஞ்சலிதேவிக்கு சதாபிஷேகம்... சாய் பாபா வருகிறார்- ஒரு செய்தி

அவ‌ருக்கும் இவ‌ருக்கும் என்னா ச‌ம்ப‌ந்த‌ம்? அது ச‌ரி ம‌ஞ்ஞ‌ள் த‌லைவ‌ருக்கு ச‌தாபிசேக‌ம் ந‌ட‌ந்த‌தா இல்லையா?

"பிரசன்னாவின் பக்குமான பேச்சு----பட விழாக்களுக்கு சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகளே வராமல் தவிர்க்கப்பார்க்கும் இன்றைய சூழலில், தனக்கு தெரிந்த பத்திரிகையாளர் கூப்பிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு விழாவுக்கு வந்திருந்தார் நடிகர் பிரசன்னா. அது புதுமுகங்கள் நடித்த பாடகசாலை ஆடியோ வெளியீடு"-ஒரு செய்தி

ச‌ரி ச‌ரி ப‌த்திரிகையை ம‌தித்தால் அவ‌ர்க‌ளுக்கு பாராட்டு இல்லைனா வ‌ச‌வு தானா?ப‌த்திரிகையில் ந‌ட‌க்கும் அநியாய‌ங்க‌ளுக்கு நார் முடிவு க‌ட்ட‌போகிறார்க‌ள்

2 Feb 2010

எங்க‌ ஊரு வ‌லைப‌க்க‌த்திற்கு வாங்க‌ (ஈரோடு)

ந‌ன்ப‌ரும் ராஜ் டி.வி முத‌ன்மை செய்தியாள‌ருமான‌ (ஈரோடு ப‌குதி) திரு.குமார‌சாமி அவ‌ர்க‌ளின் முய‌ற்சியால் இந்த‌ வ‌லைப்ப‌க்க‌ம் ஆர‌மிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

வியாபார‌ நோக்கில்லாம‌ல் ம‌க்க‌ளுக்கு சென்று சேர வேண்டும் என்ற‌ என்ன‌த்தில் துவ‌ங்க‌ப‌ட்டுள்ள‌து.

விரைவில் இந்த‌ வ‌லைப்ப‌க்க‌ம் விரிவ‌டைய‌ உங்க‌ள் ஆத‌ர‌வு த‌ர‌ வேண்டுகிறோம்

www.dailyerode.com


இந்த‌ வ‌லைப‌திவு மெருகேற‌ ஈரோடு வ‌லைப்ப‌திவ‌ர்க‌ள் ஆலொச‌னைக‌ள் வ‌ர‌வேற்க‌ப‌டுகிற‌து