எல்லாரும் பேசும் படம் இது...நானும் போகலாம் என்றால் 20 டாலருக்கு டிக்கட்டு . ஆனபட்ட 3டி அவதாருக்கே $12 தான் கொடுத்து பார்த்தேன் $20 கட்டுபடியாகாது அதனால் டமில்டாரன்ட்.காமில் டவுன்லோட் செய்து பார்த்தாகிவிட்டது. பிரின்டு நல்லாதான் இருக்குது. (தரம் புளுரேக்கு கீழே டி.வி.டிக்கு மேலே)
டைரக்டர் சங்கருக்கு சல்யூட்...நன்றாக வேலை செய்து.....கடுமையான வேல வாங்கியிருக்கார்...எந்திரன் பட டீமுக்கு ஸ்பெசல் சல்யூட்.
அமெரிக்க டெக்கி பசங்க நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது அப்படிதான் நடக்கும் என்பது மாதிரி சூப்பரா கலிஜ் செய்துவிட்டார்கள்.(fact fact and fact) அதுவும் New jersy and New york பசங்க ரொம்ப மோசம். சான் உசே, சேன்டிகோ மக்கள் கொஞ்ஜம் டீசன்டாக நடந்து கொண்டார்கள்.வேறு ஏதோ ஆங்கில படத்திற்கு போன அமெரிக்க நன்பர் அங்கிருந்து போன் செய்து கேட்டார் what is the language, do you speak this language? why these people make noises and whistle on the theatre campus? don't they behave decent...இன்னும் கொஞ்ஜம் அதிகமாவே கேட்டார். நான் இது எங்க பாரம்பரியம் (the way we celebrate)என்று பொய் சொல்ல வேண்டியதாயிற்று.
Marketing and product promtion சன் டீவிக்கு கை வந்த கலை. பாடல் வெளியீட்டு விழா, preview விழா, relese விழா and making of Enthiran movie அப்படினு எல்லாத்திலேயும் பணம் கொட்டுது.
few bits
திரைப்படம் வெளியீட்டு விழா அப்படினு ஒர் மணி நேரம் ஓட கூடிய கிளிப்பிங் பார்க்க நேரிட்டது, நாமகிபேட்டை மற்றும் பணப்பாக்கம் பண்ணாடைகள் (sorry for the language) அலகு குத்தி தங்களது மூட நம்பிக்கியை வெளுப்படுத்தி சிரிக்கவைத்தார்கள் (இவங்கலாம் திருந்தவே மாட்டங்களா?, பணம் போட்டவனுக்கு/நடித்தவனுக்கு இல்லத அக்கற இவனுக்கு எதுக்கு?)
பாலாபிசேகம், சந்தன அபிசேகம் கேவலம்..... ரோபாட்டிக்ஸ் காலத்துல கூட இவனுங்களை திருத்த முடியாது.
கருணாஸ் ரஜினியை விட ஐஸ்வர்யா ராயை பற்றி அதிகம் பேசினார்.
மலேசிய தமிழர்கள் டீசண்டாக படத்தை பார்த்து கருத்து சொன்னார்கள்.
சிங்கை தமிழர்கள் (வழி வந்தவர்கள்) அதிகம் அலட்டாமல் அருமையான கருத்துகளை சொல்லிவிட்டு போனர்கள், பொழப்பு தேடி போன தமிழர்கள் அமெரிக்க டெக்கி தமிழர்களுக்கு இனையாக நடந்து கொண்டார்கள்.
பிரகாஷ் ராஜ் மற்றும் பார்த்திபன் படத்தை பற்றி எந்த ஒரு மிகப்படுத்தல் இல்லாமல் அழகாய் உயர்வாய் பேசினாரகள்.
எதோ ஒரு ஊரில் ரசிக சிங்கங்களை தடியால் அடித்து விரட்டினார்கள் தியேட்டர்காரர்கள்...பார்க்க பரிதாபமாக இருந்தது. அடிக்கும் உரிமையை கொடுத்தது யார்?
நிறைய பால் மற்றும் காய்கறிகள் வீணக்கப்பட்டது ரசிகர்களால்.
மொத்தத்தில் இது ஒரு விருந்து - ரஜினி ரசிகர்களுக்கு
எந்திரன் பணம் காய்க்கும் மரம் - சன் புரடக்ஸ்ஸனுக்கு
சங்கருக்கு இன்னும் ஒரு மெகா பட்ஜட் திரைப்படம்
4 comments:
//பாலாபிசேகம், சந்தன அபிசேகம் கேவலம்..... ரோபாட்டிக்ஸ் காலத்துல கூட இவனுங்களை திருத்த முடியாது. //
நச் வரிகள்!
உங்களை எழத வைக்க சன் பிக்சர்க்கு எவ்ளோ செலவு பாருங்க தல!
என்னத்த சொல்ல
இங்க சண்டிகலா 250 ரூபாய் பால் கனி
புதுவீடு நல்லாருக்குணே :-))
Post a Comment