17 Dec 2009

ஆன‌ந்த‌விக‌ட‌ன் ம‌ற்றும் எழுத்தாள‌ர் எஸ்.ராம‌கிருஷ்ண‌ன்

இது ஆன‌ந்த‌விக‌ட‌னில் வ‌ந்த‌ இந்த‌வார‌ க‌ட்டுரை....காப்பி பேஸ்டு செய்து உள்ளேன் (ந‌ன்றி ஆன‌ந்த‌ விக‌ட‌னுக்கு)

மதுரை ரயிலில் இரண்டு வெளிநாட்டுப் பயணிகளைச் சந்தித்தேன். தனது பெயர் ரஃபேல். மனைவி பெயர் ஆடா. பிரேசிலைச் சேர்ந்தவர்கள். தாங்கள் கொடைக்கானலுக்குப் போவதாக அறிமுகம் செய்துகொண்டார். ஆடா, ஜெர்மனியைச் சேர்ந்தவர் என்பதால் அவரால் சரளமாக ஆங்கிலம் பேச முடியாது என்று மெல்லிய புன்னகையுடன் சொன்னார்.

என் அருகில் அமர்ந்திருந்த கரை வேஷ்டி அணிந்த கவுன்சிலர் வியப்புடன், "வெள்ளைக்காரனுக்கு இங்கிலீஷ் பேசத் தெரியாதுன்னா ஆச்சர்யமா இருக்கில்ல?" என்றார். உலகம் முழுவதும் ஆங்கிலம் பேசப்படுவது இல்லை. அந்தப் பெண் ஜெர்மானியர் என்று சொன்னேன். தான் கரெஸ்பாண்டென்ஸ் கோர்ஸில் எம்.ஏ., படித்திருப்பதாகச் சொல்லி, அவரும் வெள்ளைகாரர்களிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அவர்கள் கைகுலுக்கிக்கொண்டார்கள்.



பிறகு கவுன்சிலர் என்னிடம், "இவங்களைப் பார்த்தா அமெரிக்கர்கள் மாதிரி தெரியுது" என்று சொன்னார். அந்தப் பெண் அமெரிக்காஎன்றசொல் லைக் கேட்டவுடன் பலமாகச் சிரித்துவிட்டார். பிறகு, "இந்தியாவில் எந்த வெளிநாட்டுப் பயணியைப் பார்த்தாலும் நீங்கள் அமெரிக்காவா என்று ஏன் கேட்கிறார்கள்? அமெரிக்கா மட்டும்தான் இந்தியர்களுக்குத் தெரிந்த வெளிநாடா?" என்று கேட்டார்.

ஆமாம் எங்க‌ள் ஊர் ப‌த்திரிகைக‌ளுக்கு தெரிந்த‌து அமெரிக்க‌ ம‌ட்டும் தான், அவ‌ர்க‌ள் அதை ப‌ற்றி ம‌ட்டும் தான் செய்தி வெளியிடுவார்க‌ள் அதை ப‌டித்து என்க‌ளுக்கு அமெரிக்கா ம‌ட்டும் தான் தெரியும்

"அது பொதுப் புத்தி. 20 வருடங்களுக்கு முன்பு வரை எந்த வெளிநாட்டுப் பயணியைப் பார்த்தாலும் நீங்கள் லண்டனில் இருந்து வருகிறீர்களா என்று கேட்பார்கள். இப்போது அது மாறியிருக்கிறது" என்று சொன்னேன். கவுன்சிலரின் இரண்டு செல்போன்கள் ஒரே நேரத்தில் ஒலிக்கத் துவங்கின.அவர் இரண்டு செல்போன்களையும் எடுத்து ரயில் பெட்டியே கேட்கும்படியான உச்சக் குரலில் பேசிக்கொண்டு இருந்தார். அவர்கள் கண்களாலேசிரித்துக் கொண்டார்கள்.

"முதன்முறையாக கொடைக்கானலுக்குப் போகிறீர்களா?" என்று கேட்டேன். ஆமாம் என்று தலையாட்டினார்கள். "எப்படி இருக்கிறது உங்களது இந்தியப் பயணம்?" என்றதும், "இந்தியர்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஒன்று, எங்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்அல்லது வியந்து வியந்து பார்க்கிறார்கள். படித்தவர்களுக்கே கூட வெளிநாட்டுப் பயணிகளைப்பற்றிய தவறான நம்பிக்கைகள் நிறைய இருக்கின்றன" என்றார்.

அதை ஆமோதிப்பதுபோல ஆடா, "வெளிநாட்டுப் பெண்கள் என்றால் வேசைகள் என்றுதான் இந்தியாவில் படித்தவர்கள்கூட நினைக்கிறார்கள். பொதுஇடங்களில் நாங்கள் பாலுறவுகொள்வோம் என்று நம்பி, பின்னாடியே துரத்துகிறார்கள். எவ்வளவு அபத்தமான கற்பனை இது."

அப்ப‌டிதானே நாங்க‌ள் தின‌ச‌ரிக‌ளில் ப‌டித்தோம்...உத‌டு முத்த‌ம், த‌ண்ணீரை விட‌ பீர் விலை குறைவு,எங்க‌ள் தின‌ச‌ரிக‌ள் அதை ம‌ட்டும் தானே செய்தியாக‌ வெளியிட்ட‌து

ரஃபேல் தொடர்ந்து பேசினார், "நான் அசைவம் சாப்பிடுவது இல்லை. முழுமையான வெஜிடேரியன். அதை ஒருவர்கூட நம்ப மறுக்கிறார்கள். வெளிநாட்டுக்காரர் எப்படி வெஜிடேரியனாக இருக்க முடியும் என்கிறார்கள். இதுவாவது பரவாயில்லை. வெள்ளைக்காரர் என்றால் கட்டாயம் கிரிக்கெட் பிடிக்கும், மைக்கேல் ஜாக்சன் பாடல்கள் கேட்பார்கள், போதை மருந்து சாப்பிடுவார்கள், எல்லோரும் பையில் துப்பாக்கி வைத்திருப்பார்கள் என்று நம்பு கிறார்கள்.

ஆந்திராவில் ஒரு ஆட்டோ டிரைவர் எங்களிடம், தான் அனகோண்டா பார்த்திருப்பதாகச் சொல்லி, அது சூப்பராக இருப்பதாகப் பாராட்டினார். அனகோண்டா என்றால் என்னவென்றே புரியவில்லை. பிறகு, விசாரித்தபோது அது ஹாலிவுட் படம் என்று தெரிந்துகொண்டோம்" என்று சிரித்தார்.

கவுன்சிலர் தனது துணிப் பையைத் திறந்து அதிலிருந்து ஒரு பிளாஸ்டிக் டம்ளர், குளிர்பானம் இரண்டையும் வெளியே எடுத்துவைத்தார். பிறகு, இடுப்பில் இருந்து ஒரு குவாட்டர் பாட்டிலை எடுத்து டம்ளரில் ஊற்றிக் கலந்தார். பிறகு, அவர்களிடம் தன்னிடம் இன்னொரு குவாட்டர் இருப்பதாகவும் அவர்கள் விரும்பினால் சேர்ந்து சாப்பிடலாம் என்றும் சொன்னார். அதற்கு ரஃபேல் தாங்கள் பயணத்தின்போது குடிப்பது இல்லை. அதிலும் பிளாஸ்டிக் டம்ளரில் ஊற்றிக் குடிப்பது பார்க்கவே ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது என்றார்.

அதுச‌ரி உங்க‌ள் ஊரில் ச‌ட்ட‌ம் த‌ன் க‌ட‌மையை செய்யும் எங்க‌ள் ஊரில் அவ‌ர்க‌ளுக்கும் சேர்த்து தான் பாட்டில் வாங்க‌ வேண்டும் (ச‌ட்ட‌த்தை நிறைவேற்ற‌ வாண்டிய‌ கன‌வான்க‌ளுக்கு)

கவுன்சிலர், "அதெல்லாம் பழக்கமாகிருச்சி சார்" என்றபடியே உணவுப் பொட் டலங்களைப் பிரித்து சாப்பிடத் துவங்கியிருந்தார். சிக்கன் நூடுல்ஸ் மற்றும் பரோட்டா - மட்டன் சுக்கா வாசனை ரயில் பெட்டி எங்கும் நிரம்பியது.

ஏன் உங்க‌ ஊரு சாப்பாட்டுல‌ வாச‌ம்/நாத்த‌ம் வ‌ர்ர‌து இல்லையா? இல்ல‌னா நீங்க‌ யாரும் டிராவ‌‌ல்ல‌ சாப்ப‌டுர‌தே இல்ல‌ பாருங்க‌..

ரஃபேல் ரகசியமான குரலில், "ஏன் இந்தியாவில் சைனீஸ் ஹோட்டல்கள் மீது இவ்வளவு மோகம். நெடுஞ்சாலையில்கூட சைனீஸ் நூடுல்ஸ் கடைகள் இருக் கின்றனவே, அது எப்படி வந்தது?" என்று கேட்டார். "10 வருடங்களுக்குள் இந்திய உணவு முறை பெரிதும் மாறிவிட்டது. இப்போது எல்லா இடங்களிலும் ஃபாஸ்ட் ஃபுட்தான்" என்றேன். ரஃபேல் கண்சிமிட்டி, "அது உண்மை யில் ஃபாஸ்ட் ஃபுட் இல்லை, ஸ்லோ பாய்சன்" என்று சொன்னார்.

கவுன்சிலர் தன்னிடம் இருந்த பரோட்டாவில் ஒன்றை அவர் கள் சாப்பிட்டுப் பார்க்கும்படி வற்புறுத்தினார். தாங்கள் இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிட்டதாகச் சொன்னார்கள். அதை கவுன்சிலர் நம்பத் தயாராக இல்லை.

ஆடா என்னிடம், "தமிழ்நாட்டில் வெள்ளை உடை அணிந்தவர்கள் அத்தனை பேரும் அரசியல்வாதிகளா?" என்று கேட்டார். இல்லை என்றேன். "பிறகு, ஏன் இவர்கள் பேன்ட்-ஷர்ட்அணிவது இல்லை. பெண் அரசியல்வாதிகளுக்கும் இப்படி ஏதாவது டிரெஸ் கோட் இருக்கிறதா என்ன? சுடிதார் அல்லது ஜீன்ஸ் அணிந்த ஒரு பெண் அரசியல்வாதியைக்கூடப் பார்க்க முடியவில்லை. ஏன் அப்படி? ஏதாவது கலாசாரத் தடையா?"

"ஒரு வரியில் இதற்கு விளக்கம் சொல்ல முடியாது. விளக்கிச் சொல்ல முடியாத நம்பிக்கைகள், மரபு மற்றும் கலாசார அடை யாளங்கள் இருக்கின்றன" என்றேன்.

எங்க‌ ஊர் அர‌சிய‌ல்வா(ந்)திக‌ள் அரை நிக்கார் போட்டு வ‌ந்தால் அதையும் ப‌ட‌ம் எடுத்து போட்டு பின்வ‌ருமாறு எழுதுவார்க‌ள் இந்த‌ ப‌த்திரிகைக‌ள்

(த‌லைப்பாக‌) பிர‌ப‌ல‌ அர‌சிய‌ல்வாதி ட‌வுச‌ரில் ஆட்ட‌ம்

இர‌ண்டு எழுத்து பிர‌ப‌ல‌ அர‌சிய‌ல்வாதி த‌ன‌து குடும்ப‌த்துட‌ன் மூன்று எழுத்து ஊரில் உள்ள‌ க‌ட‌ற்க‌றை‌க்கு சென்று இருந்த‌போது ஊரில் உள்ள‌ பிர‌ச்ச‌ன‌க‌ளை ம‌ற‌ந்து ட‌வுச‌ரில் ஆட்ட‌ம் போட்டார் க‌ண்டிப்பாக‌ இவ‌ர் சுய‌நினைவோடு செய்து இருக்க‌ மாட்டார் என‌ த‌க‌வ‌ல் அறிந்த‌ நான்கு எழுத்து வ‌ட்டார‌ங்க‌ள் தெரிவிக்கின்ற‌ன‌

அவர் தலையசைத்தபடியே, "எங்களுக்கு இன்னொருசந்தே கமும் இருக்கிறது. பையன்களுக்குப் பூ வைத்து அலங்காரம் சூடி பெண்போல போட்டோ எடுத்துவைத்திருப்பதைப் பார்த்தோம். அது எதற்காக? சிறுமிகள் அதுபோல ஆண் வேஷம் போட்டு போட்டோ எடுத்துக்கொள்வார்களா என்ன?" என்றார். நான் சிரித்துவிட்டேன்.

"இந்தியக் குடும்பங்கள் கிரேக்கப் புராணங்களைவிட விசித்திரமானவை. அதன் நம்பிக்கையின் வேர்கள் எங்கே இருந்து துவங்குகின்றன என்று எந்த ஆராய்ச்சியாளனாலும் கண்டுபிடித்துவிட முடியாது. அதுபோலவே அவர்கள் மனஇயல்பை அறிந்துகொள்வது மிகப் பெரிய சவால்" என்றேன். அவர்கள் உறங்கத் தயராகிவிட்டார்கள். கவுன்சிலர் போதை பற்றாமல் இரவெல்லாம் அலைந்துகொண்டே இருந்தார்.

வெளிநாட்டுக்காரர்கள் மீதான தோற்ற மயக்கத்தைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் கோவாவில் உள்ள தங்கும் விடுதியில் செக் நாட்டைச் சேர்ந்த ஒருவருடைய அறிமுகம் கிடைத்தது. அவரிடம் மிக ஆர்வமாக காப்கா, மிலன் குந்தேரா, மிலாஸ் ஃபோர்மென் என்று பேசியபோது, அவர் அந்தப் பெயர்களைத் தான் கேள்விப்பட்டதே இல்லை என்றார்.

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் காப்காவைக் கூடவா தெரியாது என்று கேட்டேன். அவர் தனக்குப் படிக்கும் பழக்கமே கிடையாது. தான் ஒரு நீச்சல் வீரர் என்றார். இந்தியாவுக்கு வரும் பெரும்பான்மை வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலா நிமித்தம் வருபவர்களே. அதுவும் குறைந்த செலவில் இயற்கையை அனுபவிக்க நினைப்பவர்கள். மற்றபடி அவர்களை அறிவு ஜீவிகளாக நினைத்துக்கொள்வது நாமாக ஏற்படுத்திக்கொள்ளும் அறியாமை.

வெளிநாட்டுக்காரர்கள் மீதான தோற்ற மயக்கத்தை த‌ந்த‌து யார்...நாக்க‌ள் என்ன‌ போயி பார்த்டோமா என‌ன‌? ப‌த்திரிக‌க‌ள் தானே எங்க‌ளுக்கு அந்த‌ செய்திஅக்ள‌ த‌ருகிற‌து

இன்னொரு பக்கம், சேவை மனப்பாங்குடன் வரும் வெள்ளைக்காரர்களையும் கண்டிருக்கிறேன். முன்பு ஒரு முறை தேனாம்பேட்டை சந்திப்பு அருகில் உள்ள கூவம் ஆற்றை இரண்டு வெளிநாட்டுப்பயணி கள் உள்ளே இறங்கி சுத்தப்படுத்திக்கொண்டுஇருப் பதைக் கண்டேன். கழிவுகளின் துர்கந்தம் காரண மாக, அருகில் உள்ள வீதிகளில் வசிப்பவர்கள் எவரும் அந்த இடத்தில் நிற்பதுகூடக் கிடையாது. சாலையில் போகிற வருகிறவர்கள் அதை வேடிக்கை பார்த்தார்கள். கேலியாக விமர்சனம் செய்தார்கள். ஆனால், அந்தப் பகுதிகளை வெள்ளைக்காரர்கள் இரண்டு நாளில் தூய்மைப்படுத்திவிட்டார்கள். அந்த தன்முனைப்பு அக்கறை நம்மிடம் இல்லாதது.

எனக்குப் பிரபல ஹாலிவுட் இயக்குநர் மனோஜ் நைட் சியாமளன் இயக்கிய 'Praying with Anger' படம் நினைவுக்கு வந்தது. அது சியாமளனின் முதல் படம். 1992-ல் வெளியானது. பாண்டிச்சேரியைச் சேர்ந்த சியாமளன் அமெரிக்காவில் வளர்ந்தவர். இந்தப் படம் சென்னைக்குப் படிக்க வரும் ஓர் அமெரிக்க இளைஞனைப் பற்றியது.

பொதுவாக, சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு படிக்கப் போகிறவர்கள்தான் அதிகம். இந்தப் படத்தில் பல வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வந்த தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த தேவ் ராமன் என்ற இளைஞனை, 'ஒரு வருடமாவது சென்னையில் போய்ப் படித்துவிட்டு வா. அப்போதுதான் நமது பராம்பரியம் மற்றும் வேர்த் தொடர்ச்சி புரியும்' என்று கட்டாயப்படுத்தி அனுப்பிவைக்கிறார்கள். சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறான். அவன் எதிர்கொள் ளும் கலாசாரச் சிக்கல்கள்தான் படம்.

அமெரிக்காவைப்பற்றி தமிழ் மக்களிடம் பொதுவான மனப் பிம்பங்கள் நிறைய இருக்கின்றன. அமெரிக்காவில் வசிக்கிற பெரும்பான்மை இளைஞர்கள். பெண் மோகம்கொண்டவர்கள். இரவெல்லாம் நடனம் ஆடுவார்கள். பேஸ்பால் விளையாடுவார்கள். அதிகம் குடிப்பார்கள். மூன்று வேளையும் பீட்ஸா சாப்பிடுவார்கள். லட்ச லட்சமாகச் சம்பாதிப்பார்கள் என்பது போன்ற தவறான கற்பிதங்களை சியாமளன் இந்தப் படத்தில் கேலி செய்திருக்கிறார்.

ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர் அவனிடம், 'நீ அமெரிக்க ஆங்கிலத்தில் பேசினால் பெரிய ஆளாகிவிட முடியாது. நான் 30 வருடங்களாக ஷேக்ஸ்பியர் நடத்துகிறேன்' என்பார். அவர் இப்போதும் ஷேக்ஸ்பியர் காலத்திலேயே வாழ்ந்துகொண்டு இருப்பதாக தேவ் சொல்வான். அவனைச் சந்திக்கும் ஒரு பெண், அவன் மைக்கேல் ஜாக்சனைச் சந்தித்திருக்கிறானா என்று படம் முழுவதும்கேட்டுக்கொண்டே இருப்பாள். அது போலவே ஆட்டோ டிரைவர் துவங்கி டீக்கடைக்காரன் வரை அவனிடம் அதிகமாகப் பணம் கேட்பார்கள். அவனைக் காதலிக்கும் பெண் டேட்டிங்பற்றி நிறையப் பேசுவாள்.

இந்திய இசையின் மகத்துவம்பற்றி அவனுக்குத் தினமும் வகுப்பு எடுப்பார்கள். தேவின் உண்மையான பிரச்னை அமெரிக்காபற்றிய தமிழ் மக்களின் தவறான கற்பிதங்களே. அதைப் படம் முழுவதும் அவன் விளக்கிச் சொல்கிறான். எவரும் கேட்பதே இல்லை. அமெரிக்காவில் ஆதிவாசிகள்கூட இருக்கிறார்கள் என்பதை அவன் சொல்லும்போது, அதை ஒருவரும் ஒப்புக்கொள்வதே இல்லை. நீங்கள் கற்பனையான அமெரிக்கா ஒன்றை வைத்திருக்கிறீர்கள். நிஜம் அப்படி இல்லை என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு, முடிவில் அவன் அமெரிக்காபோய் விடுகிறான்.

எங்க‌ளுக்கு அந்த‌ க‌ற்ப‌ணையை த‌ந்தது யார்....நாங்க‌ள் பார்த்த‌ சில‌ ஆங்கில‌ ப‌ட‌ங்க‌ள், ப‌டித்த‌ ப‌த்திரிகைக‌ள், போய்வ‌ந்த‌ சில‌ வ‌ச‌தி ப‌டைத்த‌வ‌ர்க‌ள் (ந‌ம்ம‌ ஆளுங்க‌ சிங்க‌பூர்/தாய்லாந்து போனா நிறைய‌ பார்ப்பார்க‌ள் ஆனால் பேசுவ‌து என்ன‌மோ இர‌வு விடுதி ப‌ற்றி தான்) சொன்ன‌ செய்திக‌ள்தான் எங்க‌ளுக்கு க‌ற்ப‌ணையை த‌ந்த‌து

இது தனி நபர் சந்திக்கும் பிரச்னை மட்டும் இல்லை. மாறாக, 300 வருடங்களுக்கும் மேலாக அடிமைப்பட்டுக்கிடந்த ஒரு சமூகத்தின் ஆழ்மனதில் இருந்து உருவான பிம்பங்களே. இந்தியாவைப் பிரித்துத் துண்டாக்கிய மவுன்ட்பேட்டனை நாம் இன்றும் மவுன்ட்பேட்டன் பிரபு என்றுதான் சொல்கிறோம். இன்னொரு பக்கம், வெளிநாடுகளில் இருந்து திரும்பி வருகிறவர்கள் உருவாக்கும்நம்மைப் பற்றிய தாழ்வான பிம்பம் நம்மை எப் போதுமே குற்றவுணர்ச்சி கொள்ளவைக் கிறது. நம் வரலாற்று நூல்களில் உள்ளவை அதிகார மாற்றத்தின் பிம்பங்களே. உண் மையான இந்திய மக்களின் எழுச்சியும் சமூக, கலாசார மாற்றங்களின் நிஜமான வரலாறும் இன்னமும் முழுமையாக எழுதப்படவில்லை... அறிந்துகொள்ளப்படவும் இல்லை. அதுதான் இந்த அறியா மையை மாற்றுவதற்கான ஒரே வழி!

பார்வை வெளிச்சம்!

-நீங்க‌ள் உங்க‌ள் பார்வையை மாற்றுங்க‌ள் பிற‌ம‌க்க‌ளுக்கு... நீங்க‌ள் சொல்லுவ‌து எல்லாம் உண்மை என்று நின‌க்கும் ம‌க்க‌ளுக்காக...

-ந‌ல‌ல‌தை எழுதுங்க‌ள், கெட்ட‌தை சொல்லுங்க‌ள், அவ‌ர்க‌ளின் கலாசார‌ம் ப‌ற்றியும் எழுதுங்க‌ள்

-வெளிநாடுக‌ளில் இள‌சுக‌ளின் கூத்தை வெளியிடும் நீங்க‌ள் அவ‌ர்க‌ள் சாலைவிதிக‌ளை ம‌திப‌ப்தையும் ப‌ட‌த்துட‌ன் எழுதுங்க‌ள்

-வெளிநாட்ட‌வ‌ரின் காம‌த்தை வெளியிடும் நீங்க‌ள் அவ‌ர்க‌ளின் கால‌ம் த‌வராமையையும் வெளியிடுங்க‌ள்

5 comments:

அமர பாரதி said...

பீம்,

நான் நினைச்ச மாதிரியே எழுதியிருக்கீங்க. ஏதோ எழுத்தாளர் மட்டும் சொர்க்கத்துல் இருந்துகிட்டு மக்களைப் பார்த்து முதலைக் கண்ணீர் வடிக்கற மாதிரி இருக்குது. இந்த லூசு எழுத்தாளருக்கு தெரிஞ்சதை அப்படியே தமிழக மக்கள் நினைக்கற மாதிரி எழுதியிருக்கிறார். காப்கா, குந்தரோ பொந்தரோ பத்தி தெரிஞ்சுருந்த்தாத்தான் அறிவு சீவின்னு அறியாமையில் உளறியிருக்கிறார்.

அந்த நாட்டில் இருப்பவனுக்கே பொந்தரோவையும் போர்மேனையும் தெரியன்னா, அவிங்கள தூக்கி வெச்சுக்கிட்டு ஆடற இந்த மட மாந்தர்களை என்னவென்று சொல்வது?

//இந்தியக் குடும்பங்கள் கிரேக்கப் புராணங்களைவிட விசித்திரமானவை// இவருடைய குடும்பம் விசித்திரமா இருக்கலாம். ஆனா அதை இந்திய குடும்பங்கள் என்று சொல்வது அரசியல்வாதி பேச்சு.

ஆந்திரா, ஆட்டோ, அனகொன்டா என்று டீ.ஆர். பாணியில் வாந்தியெடுத்திருக்கிறார்.

//படித்தவர்களுக்கே கூட வெளிநாட்டுப் பயணிகளைப்பற்றிய தவறான நம்பிக்கைகள் நிறைய இருக்கின்றன// அந்த கூறு கெட்ட வெளி நாட்டுப் பயணிகள் எக்த்டனை பேரைப் பார்த்து இந்த முடிவுக்கு வந்திருப்பார்?

//ஆடா, ஜெர்மனியைச் சேர்ந்தவர் என்பதால் அவரால் சரளமாக ஆங்கிலம் பேச முடியாது என்று மெல்லிய புன்னகையுடன் சொன்னார்// அந்த ஜெர்மானியப் பெண் இந்தியர்களிடம் ஆங்கிலத்தில், எத்தனை பேரிடம் பேசியிருக்க முடியும்? இந்த கட்டுரையில் கவுன்சிலரையும் மட்டமாகவே எழுதியிருக்கிறார் இந்த அதி மேதாவி.

அமர பாரதி said...

//அதுதான் இந்த அறியா மையை மாற்றுவதற்கான ஒரே வழி// இவர் இவருடைய அறியாமையை முதலில் மாற்றட்டும். அதாவது இவர் முதுகில் இருக்கும் அழுக்கை அகற்றட்டும். காப்கா, பொந்தாரோ ழான் போந்தாஸ்கி, போன் ழாந்தாஸ்கி ந்னு உளறாம இருக்கட்டும்.

Anonymous said...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

வால்பையன் said...

பகிர்வுக்கு நன்றி!

நான் 15 வருடமாக ஆனந்தவிகடன் வாசகன்!

உங்களுக்கு தான் தெரியுமே!

KARTHIK said...

தாய்லாந்து = பட்டேயா

போய்வந்த மக்கள் இத மட்டும் தான் சொல்லுராங்க

// பொந்தரோ பத்தி தெரிஞ்சுருந்த்தாத்தான் அறிவு சீவின்னு அறியாமையில் உளறியிருக்கிறார்.//

அவர் தான் இருக்குர தொழில் சார்ந்த புகழ்பெற்ற ஆட்களை பத்திதானுங்க கேட்டார்.அதுல ஒன்னும் தப்பில்லைங்க.
அவனும் திறுப்பி இந்தியாவுல இருக்க நீச்சல் வீரர்கள பத்தி கேட்டிருந்தா சரியா போயிருக்கும்.

நியாயப்படி கரைவேட்டி பத்தி அவர் இதுல எழுதிருக்ககூடாது.டி டி கிட்ட சொல்லிருக்கோனும் :-))