வாசகர்களே... வாங்க கலக்கலாம் இந்த தொடர் விகடனில் வருகிறது.
இந்த வாரம் நண்பனின் காதலுக்கு உதவச் சென்று 'நாடோடிகள்' ஆனவர்களின் கதைகள்...
ஆஹா நம்ப கிட்டயும் ஒரு உண்மை சம்பவம் இருக்கிறது....பலநாள் நினத்து நினத்து மணம் விட்டு சிரித்த சம்பவம்....
ஈரோட்டில் காதலன் இன்ஞினியரிங் காலேஜ்ஜில் படித்து கொண்ணிருந்தான்...காதலி பெருந்துறை மருத்துவ கல்லுரியில் படித்து கொண்டிருந்தார்கள், 13ம் நம்பர் பஸ்ஸில் தான் இருவரும் பயனம்....அப்போது வந்த ஜெமினி படம் பார்த்து எல்லோரும் 'ஓ' போட்டு பயனம் இனிதே ஆரமித்து காதலும் ஜோராக வளர்ந்தது.
கடைசி வருடம் காதலனுக்கு...என்ன பன்னுவதுனு தெரியவில்லை...நம்ப ஹீரோவிடம் வந்து வழிகேட்டார்கள் ( சோடியாக வந்து)அலை பாயுதே படத்தில் வந்த மாதிரி ரிஜிஸ்டர் மேரேஜ் பன்னிகலாம் அப்பறம் பிரச்சனை வந்தா பார்த்துகலாம் என்று அவரும் ஐடியா கொடுத்துவிட்டார்.
சரி என்று சிவன் மலையில் திருமனம், காங்கேயத்தில் ரிஜிஸ்டிரேசன் என்று தடபுடல் கல்யானசேவை நடந்தது ( கோயிலுக்கும், ரிஜிஸ்டிரேசன் ஆபிஸுக்கும் பணம் மற்றும் சில பேப்பர் ஒர்க்குக்கு கஸ்டபட்டதுக்கு தனியாக உன்மை சம்பவம் தொடர்கதை எழுதலாம்)அவர் அவர் வீட்டுக்கு மதியம் 3.30க்கு போய் விட்டார்கள்.
அன்று இரவு மாப்பிள்ளையும் திருமனம் நடத்தி வைத்த ஆளும் அப்போதைய டாஸ்மார்க் ( Private bar) போயி விட்டார்கள் அங்கு நம்ப ஈரோ.. பாருடா கல்யானம் நடந்து முதலிரவில் இருக்க வேண்டிய ஆளு பாருக்கு வந்து இருக்கான் என்று கலாய்க்க..அருகில் ஒட்டு கேட்டு கொண்டு ( அரை குரையாக) இருந்த புல் மப்பு பார்ட்டி இன்னா தலைவா பிரச்சனை கல்யானம் பிடிக்கலையா? இல்ல பொன்னு பிடிக்கிலியா என்று கேட்டு ஒரே தொந்தரவு...எவ்வளொவோ சொல்லியும் அந்த நபர் கேட்கவில்லை...அப்பறம் மாப்பிள்ளை விட்டார் பார் ஒரு அறை...மப்பு பார்ட்டி சாரி பாஸ் என்று அடுத்த ரவுண்டுக்கு போய்விட்டார்.
சில மாதங்கள் ஓடின...ரிஜிஸ்டார் அலுவலகத்துக்கு மாற்றல் ஆகி வந்த ஒருநபர் பொன்னுக்கு சொந்தகரார் என்று தெரியாமல் அவரிடம் போய் சார் ஒரு certificate காபி வாங்கனும் எவ்வளுவு காசு என்று கேட்க அவர் விவரத்தை கேட்க அவன் விவரத்தை சொல்ல certificat காபி கொடுத்துவிட்டு பெண்ணின் வீட்டில் போட்டு கொடுத்துவிட்டார்.
ஒரு சுப யோக வெள்ளிகிழமை மதியம் மாப்பிள்ளையுடம் இருந்து ஹீரோவிற்கு போன்..ஹீரோவும் அடித்து பிடித்து மாப்பிள்ளை வீட்டுக்கு போய் என்ன ஏது என்று விசாரிக்க விஷயம் புரிந்து... மாப்பிள்ளையின் பெற்றோரிடம் சம்மதம் வாங்கி அவனை அழைத்து கொண்டு அடுத்த பிளானை போட ஆரமித்துவிட்டார்கள்.
பெண்ணுக்கு சப்போர்ட் யாரு பன்னுவாங்க? இப்படி அடிசசா எப்படி அடிக்கலாம்? பொன்னு மாத்தி பேசுனா என்ன பன்னுரது? மற்றும் பல... சில... அப்படினு பிளானை போட்டாகிவிட்டது. அன்று இரவு நன்பனுக்கு ஏதும் ஆக கூடது என்று இருவரும் வீட்டில் தங்காமல் வேறு இடத்தில் தங்கினார்கள்.
நம்ப ஹீரோ தனது தந்தையிடம் இந்த மாரி.. இந்த மாரி..பஞ்ஜாயத்து பன்ன நீங்க வரமுடியுமானு கேட்க அவர் விவரத்தை கேட்க அடபாவி அவன் நம்ப சொந்தகாரன் (பொன்னு வீடு) என்று ஜகா வாங்க..இவன் சமாதானபடுத்தி... வேண்டும் என்றால் நீங்கள் கன்டிப்பாக வர வேண்டும் என்று உறுதி வாங்கி கொண்டு அடுத்த பிளானை ஆரமித்து விட்டான்.
அடுத்தா நாள் காலை (3.30am) பெண்னிடம் இருந்து போன் வந்தது ஹீரோவின் வீட்டுக்கு ஹீரொவின் தந்தையிடம் ஒரு விஸயத்தை சொல்லி ( அப்பலாம் செல்லு கிடையாது)எங்க சித்தப்பா ஒருத்தர் இருக்கார் அவரிடம் போயி உதவி கேளுங்க என்று..நம்ப ஹீரோவும் அந்த சித்தபா வீட்டிற்கு கோலம் போடும் நேரத்திற்கு சற்று முன்பாகவே போய் அவரை தூக்கதிலிருந்து எழுப்பி விவரத்தை சொல்லி அவர் வீட்டிலே இருந்து சூடாக காபி சாப்பிட்டு மேலும் விவாதித்து அடுத்து மதியம் சந்திகலாம் என்று அனுப்பிவிட்டார்.......
கன்டிப்பாக இதன் 2ம் பாகம் எழுதுகிறேன்...அதுலதான் சரியான் டிவிஸ்டு இருக்கிறது- to be Continue...
5 comments:
ஓ,காத்திருக்கணுமா முடிவை தெரிஞ்சுக்க...அடுத்த வாரமா??
//கன்டிப்பாக இதன் 2ம் பாகம் எழுதுகிறேன்...அதுலதான் சரியான் டிவிஸ்டு இருக்கிறது- to be Continue.//
eppa 2 maasam kalicha???
pls write and complete the story as early as possible
இங்கயும் சித்தப்பாவா ? :-)
அண்ணே இதுல உங்க கேரெக்டர் எதுன்னே!
Post a Comment