இது சமிபத்தில் ஏற்ப்பட்ட நிகழ்வு.
ஒரு தந்தைக்கு மார்பில் கொஞ்ஜம் வலி, மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார், பரிசோதனைகள் முடிந்து வேறு ஒன்றும் இல்லை பீ.பீ சற்று அதிகம் என்று ஐ.சி.யு வில் அட்மிட் செய்துள்ளார்கள். ஒரு 12 ஆயிரத்திற்கு மருந்துகள் எழுதி கொடுத்து... வாங்கியும் கொடுத்து விட்டார்கள்.
தந்தையின் உடல் நலன் அறிய தமையன் அமெரிக்காவில் இருந்து டாக்டரின் கைபேசிக்கு அழைக்கிறான். யார் என்று கூறிவிட்டு விவரம் கேட்கிறான். சற்று நேரம் கழித்து கூப்பிடுங்கள் கேஸ் ரிக்கார்ட் பார்த்துவிட்டு விவரம் கூறுகிறேன் என்றார். ஒரு 15 நிமிடம் கழித்து மறுபடியும் டாக்டரின் கைபேசிக்கு அழைக்கிறான்.
அமாங்க கொஞ்ஜம் பிளாக் இருக்குது இன்னும் ஒருநாள் ஐ.சி.யு வில் மானிட்டர் செய்துவிட்டு பின்னர் ஆஞ்ஜியோ வா அல்லது ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்வதா என்று முடிவெடுக்கலம் என்று கூறினார். நம்ப ஆளு சில பல குறுக்கு கேள்விகளை கேட்கிறார் அதற்கும் அவர் பதில் அளித்துவிட்டு மறுபடியும் கூப்பிடுங்கள் என்று சொல்லி அழைப்பை துன்டித்து விடுகிறார்.
எதோ ஒரு உள்ளூனர்வு டாக்டரிடம் தவறு இருக்கிறது என்று சொல்லியது...உடனே தந்தையிடம் பேசுகிறான். (Technology works, thanks to cell phone ) அவரும் இப்போதுதான் டாக்டர் வந்து பரிசோதனை செய்துவிட்டு பிளாக் இருக்கும் போல் உள்ளது என்றும் குடும்பத்தை பற்றீ விசாரித்ததாகவும் சொன்னார்.
இவனின் உள்ளுனர்வு சரிதான் என்று டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றுவிடுமாறு கூறினான், அவரும் சரி என்று மருத்துவ மனை சிப்பந்திகளிடம் கூறிவிட்டு பில்லுக்கு ஏற்பாடு செய்ய சொன்னார்.ஒரு அரை மணி நேரம் கழித்து மறுபடியும் டாக்டரின் அலைபேசிக்கு அழைக்கிறான், என்னங்க உங்க அப்பா டிஸ்சார்ஜ் ஆகனும்னு சொல்லுரார், பிளாக் இருக்குது இன்னும் ஒரு நாள் பார்த்துட்டு சொல்லுறேன் என்றால் சின்ன பிள்ளை போல் வீட்டுக்கு பொகனும்னு சொல்ரார், எதாவது என்றால் என்மேலதான் அப்பறம் சொல்லுவீங்க அப்படி இப்படி என்று சொல்லி அழைப்பை முடித்து கொன்டார்.
அவரும் டிஸ்சார்ஜ் அகி (Rs:22.500) ஒரு இரவு ஐ.சி.யூ வாடகை செலுத்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார், அன்று இரவே சென்னை நோக்கி பயனம், அங்கு பரிசோதனைகள் முடிந்து ஒன்றும் பிரச்சனை இல்லை பி.பி அதிகம் என்று மருந்துகள் அளித்துள்ளார்கள்.
ஒரு தொலைபேசி அழைப்பு பி.பி என்ற நோயை ஹார்ட் அட்டாக் அக மாற்ற முடிந்தது. பாவம் அவருக்கு என்ன கஸ்டமோ இன்று இந்த அப்பாவி தந்தை மாட்டினர். நாளை யாரோ?
ஐ.சி.யுக்கு இவ்வளவுதான் கட்டனம் என்று ஒரு வரை முறையிலாமல் பணம் பிடுங்கும், நோயின் தன்மையே மாற்றிய டாக்டரின் மேல் நடவடிக்கை எடுக்க என்ன வழி?
நடந்த இடம்: ஈரோடு.
நடந்த மாதம் : சனவரி- 2009
மருத்துவ மணை: கோவையில் உள்ள பெரிய மருத்துவ மனையின் ஈரோடு கிளை.
( இவர்களுக்கு ஈரோட்டில் 2 கிளைகள் உள்ளது)
மருத்துவரின் பெயர்: தூத்துகுடி (மூழ்கி எடுக்கும் )குமார்
9 Feb 2009
2 Feb 2009
முட்டாள் முத்துகுமாரா
தற்கொலையை தூன்டுகிறவன் கையாலகதவன்
தற்கொலையை நினைப்பவன் பைத்தியகாரன்
தற்கொலையை நாடுபவன் முட்டாள்
முட்டாள் முத்துகுமாரா...
உன்னுடைய சாவுசெய்தி கேட்டு ரொம்ப கஸ்டமா இருந்தது. அதே நேரம் உன் செயல் நினைத்து ரொம்ப வேதனைப்பட்டேன்.வாழ வேண்டிய வயதில் தேவை இல்லாமல் எதுக்கு செத்துபோனாய்? நீ செத்து போனதால் எதாவது நடந்ததா? உன்னைப்பார்த்து இன்னொருத்தன் காப்பி அடிக்கிறான்.
மரணத்தினால் சாதிக்க நினைப்பதெலாம் அந்த காலம் அதாவது இந்தி எதிர்ப்பு போராட்டம், அப்போதலாம் மனசாட்சி உள்ள தலைவர்கள் இருந்தார்கள், பின்னாளிள் அவர்கள் எல்லாம் கூட மாரிவிட்டார்கள்.
அச்சுதுறையிதானே பணி உனக்கு ..எத்தனை தற்கொலைகளை நீ பார்த்திருப்பாய்? ...எத்தனை கம்போஸ் செய்துருப்பாய் அப்போது உன் மணம் எவ்வளவு வேதனை பட்டிருக்கும்? அதே வேதனை தானே இப்போது எங்கள் அனைவருக்கும்.
நீ செத்து போனதால் ராஜ பக்ஸே போரை நிருத்திவிட்டாரா?
நீ செத்து போனதால் இந்தியா ஏதும் நடவடிக்கை எடுத்ததா?
நீ செத்து போனதால் பிரபாகரன் தன் இன மக்களையே கேடயமாக உபயோகப்படுத்துவதை நிருத்திவிட்டாரா?
நீ செத்து போனதால் தமிழ் ஈழம் மலர்ந்துவிட்டதா?
நீ செத்துப்போனதால் சத்யம் ராஜு பின்னுக்கு போய்விட்டார்.
நீ செத்துப்போனதால் நாகேஸ் மரணம் குறைந்த விளம்பரம் கண்டது.
நீ செத்துப்போனதால் ம.தி.மு.க வில் ஒருவர் செத்து போனார்.
நீ செத்துப்பானதால் அரசியல் வாதிகளுக்கு விளம்பரம் தேடி கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது.
நீ யாருக்காக செத்து போனாய்? ஈழ தமிழனுக்கா அல்லது வீனாய் போன விடுதலைப்புலிகளுக்கா? யாரோ ஒருவருக்கு என்றாலும் நீ கன்டிப்பாக முட்டாள்தான். நீ செத்துபோனதால் உன் மரணத்தை வைத்து அரசியல் நடத்த ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது.
நீ வீனாய் போனவர்களுக்கு செத்து போய் இருந்தால்.
முட்டாளே நீ செத்து போனது நம்பகதன்மை இல்லாத/ வளையும் தன்மை இல்லாத/சமாதனத்துக்கு தயார் இல்லாத/எதையும் செய்ய துனிந்த/ சர்வாதிகார கூட்டத்திற்கு செத்து போய் இருக்கிறாய்.
ஈழ தமிழனுக்கு செத்து போயிருந்தால் நானெல்லாம் 1983- 1984 ல் செத்து போயிருக்கவேண்டும்.
நான் ஈழபோராட்டதையோ, விடுதலைப்புலிகளையோ ஆதரிப்பவன் இல்லை. ஒரு மனித இனம் தாக்குதலுக்கு உன்டாகிறது என்கிறபோது (அழிப்பதும் மணித இனம் தான்..வேதனையாக் உள்ளது) எழும் மனக்குமரல் உள்ள சாதாரன மணிதன் தான். யாருக்ககவும் யாரும் உயிரை விட தேவை இல்லை. பிறந்தோம், முடிந்தால் புகழுடன் வாழ்ந்தோம், இறந்தோம் என்பதுதான் வாழ்க்கை.
இடையில் முடித்து கொள்ள யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என தீர்மானமாக நம்பும் சராசரி மனிதன்.( தவிர்கமுடியாத காரணங்களால் கருனை கொலை தவிர்த்து)
Subscribe to:
Posts (Atom)