13 Jan 2009

கன்டிப்பாக இன்டர்வியு டிப்ஸ் அல்ல

IT பீல்டுல இந்தியா அலுவலகத்தில் 8வதில் இருந்து காலேஜ் வரை ரேங் பார்க்கிராங்கள், அப்பறம் 1008 கேள்விகள் மற்றும் குருப் டிஸ்கஸன்ஸ்.கேள்வி பட்ட வரையில் இதுதான் நடந்துள்ளது.எக்ஸ்பீரியன்ஸ்க்கு அப்பறம் கான்செப்ட்--ல ரொம்ப கேள்வி கேட்கிறாங்களாம் இதுவும் கேள்விபட்டதுதான்.

ஆனால் அமெரிக்காவில் வேறு மாதிரி நீங்க ரெஸ்யூம் ல என்ன போடுரீங்களோ அத நம்பி இன்டர்வியுக்கு கூப்பிடுவாங்க. இந்த ஐ.டி பீல்டுல 60% போன் இன்டர்வியுதான் இருக்கும். (My guess)இது நம்ப மக்களுக்கு வசதியா போய்டும், கம்ப்யூட்டர்ல கூகிள் ஆண்டவரை ஓப்பன் செய்து வைத்துகொண்டு, இன்னும் ஒரு விண்டோவில் கீக் இன்டர்வியு.காம் ஓப்பன் செய்து போனில் பதில் அளிப்பார்கள். ஒரு சிலர் தனக்கு பதில் வேறு ஒருவரை பதில் அளிக்க விட்டு ஸ்பீக்கர் போனில் அதை கவனித்து கொண்டு இருப்பார். (இந்த வசதி சில தெலுகு நன்பர்களுக்கு வசதியாக் போய்விட்டது)

அமெரிக்காவில் வேலை புடிப்பது எப்படினு சிம்பிளாக ஒரு பார்வை. (Consultant).
H1B ஹெ.ச் 1பி விஸா வைத்து இருப்பவர்கள் ஸ்பான்சர்டு கம்பெனியில் வேலை செய்யலாம். அல்லது கன்ஸல்டன்ஸி மூலமாக் கிளையன்ட் சைடில் வேலை செய்யலாம்.கிளையன்டிடம் வேலை என்பது 6 மாதம் முதல் 1 வருடம் அல்லது சில வருடங்கள் நீடிக்கும்.

The H1B Sponsored Company: Work for them.
The H1B Sponsored Company: work for their clients.
The H1B sponsored Company: Will sell u to other Clients/bodyshops. This Client/bodyshop may or maynot sell to others. (these people are called Middle man)

இந்த Will sell you to others என்ற பிரிவில் நிரைய கோல்மால் நடக்கும் மற்றதில் கொஜ்ஜம் குறைவு.

A simple example. Once ur project is over in Client X then one will post his/her resume either in Monster, Jobs DB, AJB. The middle man or body shops who won/have the project or wanted you they will call u/email u. இங்கு நீங்கள் டைரக்டாக அவர்களிடம் வேலை செய்ய முடியாது, உங்கள் H1B ஸ்பான்சர் மூலமகதான் போக வேண்டும்.
இதில் ரேட் பேரம் நிறைய நடக்கும், ஒத்து வந்தால் ஓ.கே. அல்லது புதுசா வந்த பசங்கள/பொன்னுங்களை எக்ஸ்பீரியன்ஸ் உள்ள மாதிரி கான்பித்து உள்ளே நுழைத்துவிடுவார்கள்.

அமெரிக்கா மேனேஜர் இன்டர்வியு பன்றார் என்றால் ஜஸ்ட் 3- 5 கான்செப்ட் கேள்விதான் இருக்கும், மீதி எல்லாம் அரட்டை தான். They just look in to the persons Communicating/ability to speak/how he/she behaves.

பிடித்திருந்தால் ஐ ஏம் ஓ.கே, I வில் கால் யு பேக் இன் எ டே, என்று சொல்லிவிடுவார். சொன்ன மாதிரி பிடித்திருந்தால் கால் செய்து கன்கிராட்ஸ் சொல்லி வேலைக்கு வரும் தேதியை சொல்லுவார். பிடிக்கவில்லை என்றால் ஒரு ஈ-மெயில் வந்து சேரும் சாரியுடன்.

இதே ஒரு இந்திய மேனேசர் என்றால் அவ்வளவுதான் ஒரு 60 கான்செப்ட் கேள்வி வரும், அவர் எதிர் பார்க்கும் பதில் வந்தால் தான் ஓ.கே. நீங்கள் சரியான் பதில் அளித்தும் அவர் எதிர் பார்த்த பதில் வரவில்லை என்றால் நீங்கள் ஏவெரேஜ் ரகம் தான். சோசியலாக எந்த கேள்வியும் இருக்காது. ஒன்லி ஜாப் சம்பந்த பட்ட கேள்விகள் மற்றும் முன்னால் வேலை பார்த்த அனுபவங்கள் சம்பந்தமாகதான் இருக்கும். அவரையும் குறை சொல்ல முடியாது ஏனென்றால் நாம் வளர்ந்த விதம் அப்படி.
இதில் உள்ள கொடுமை என்ன வென்றால் அவரும் கேள்விகளை கீகின்டர்வியு.காம் அல்லது வேறு எதாவது வெப் சைட்டுல இருந்துதான் உருவி இருப்பார்.

இன்டர்வியு முடிந்தவுடன் சரி ஐ வில் கெட் பேக் என்று சொல்லுவார், ஆனால் செலக்ட் ஆகவில்லை என்றால் ஒரு மெயிலும்/போனும் வ்ராது செலக்ட் ஆகிவிட்டால் அவரது ஆபிஸ்ல் இருந்து வேரொருவர் கூப்பிடுவார்.

அடுத்த ரகம் சின்கு என்று செல்லமாக அழைக்கப்படும் சீன வம்சாவளியின மேனேசர்கள். இவர்களும் இந்திய மேனேசர் க்கு குறைவில்லாமல் கேள்விகளை வீசுவார்கள், அனத்தும் வேலை மற்றும் அனுபவம் சம்பந்தபட்ததாகவும், படிப்பு சம்பந்தமாகவும் கேள்விகளை வீசுவார்கள்.நிறைய நேரம் ஆங்கிலம் கடித்து துப்புவார்கள்.பிடித்திருந்தால் ஓ.கே என்று கூறிவிடுவார்கள்.

நம்ப கன்ஸல்டன்சி யில் ஒருவர் இந்திய மேனேசர் என்றால் சாரிங்க வேர Company பாருங்க என்று சொல்லிவிடுவார்.

ஏன் இந்திய மேனேசர் இவ்வளுவு டெரெர் ஆக இருக்கிறாங்க்க தெரியுமா? பின்னே நம்ப ஆளுங்கள பத்தி நமக்கு தெரியாத என்ன? விட்டா மேனேசர் இடத்தை பிடித்து விடுவாங்களே

5 comments:

வடுவூர் குமார் said...

இப்படியெல்லாம் இருக்கா! ஆச்சரியமாக இருக்கு.

வால்பையன் said...

எனக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத சப்ஜெக்டு,

பரவாயில்லை, அமெரிக்காகாரன் எங்கிட்ட வேலைக்கு வரும்போது இண்டர்வியூ எடுக்கப் பயன்படும்

RAMASUBRAMANIA SHARMA said...

NALLA PATHIVU....HOPE THE WRITER MUST HAVE ATTENDED LOTS OF INTERVIEWS...WORLDWIDE....HOWEVER, THE INTERVIEW CONCEPTS DIFFERS FROM FIELD TO FIELD....BECAUSE MANY JOBS REQUIRES PRACTICAL EXPERIENCE TOO, WHICH THE INTERVIEW PANEL MEMBERS...ASK THE CANDIDATE TO DO ACCORDING TO THEIR DESIGNATED JOB...

Anonymous said...

If a person gets INterview like this in USA he is lucky.what ever u explained is in 1990's not now.
Try a job in NJ/NY area It's harder than an fresher get job in INdia.

In Ny now a days minimun you ahve to spend 2 hrs in Interview,Withs o much depth technical.

Don't fool around if u got job like this by pure luck.

Beemboy-Erode said...

//Anonymous said...
If a person gets INterview like this in USA he is lucky.what ever u explained is in 1990's not now.
Try a job in NJ/NY area It's harder than an fresher get job in INdia.

In Ny now a days minimun you ahve to spend 2 hrs in Interview,Withs o much depth technical.

Don't fool around if u got job like this by pure luck.
//
வாங்க முகம் தெரியாத நன்பரே, (முகத்தி காட்டியுருகலாம், சரி ஏதோ காரனத்துக்காக் மறைக்கிரீங்க) நீங்க சொல்ர பீரியட்ல கீ போர்டுல டைப் பன்ன தெரிந்து இருந்தாலே போதும், உள்ளே வந்துடுவாங்க.இப்ப கொஜ்ஜம்மாவது அறிவு வேனும், அதாவது எங்க, எப்படி தேடி காப்பி பேஸ்ட் செய்ரதுனு. நீங்க சொல்லிரது ஒருவேளை மிச்சம் இருக்கும் 40% ல இருக்கும். எனக்கும் தெரியும் இன்றைய பொருளாதாரத்தில் வேலை கிடைப்பது, ஏன் இன்டர்வியு கால் வருவதே கடினமாக தான் இருக்கிறது.