28 Mar 2008

America -911- Experiance

ரொம்ப நாள் ஆச்சுபா பதிவிட்டு இப்பதான் ஒரு சுவாரிசியமான விசயம் நடந்தது அதான் பகிர்ந்து கொள்ளலாம் என்று வந்துள்ளேன்.

அமெரிக்காவில் அவசர தேவைக்கு 911 என்ற நம்பரை அழைத்தால் அதிகபட்சம் 9 நிமிடத்தில் வந்துவிடுவார்கள். நான் சாக்ரமென்டோ வந்த புதிதில் ஒருமுறை அழைத்துள்ளென்.இன்று ஒரு அழையா அழைப்புக்க்கு வந்து நோன்டி நொங்கு எடுத்துவிட்டார்கள்.இந்தியா தொலைபேச காலிங் கார்டு வாங்கி கட்டுபடிஆகலை என்ரு ஒரு VOIP (http://www.majicjack.com/) அடாப்டர் வாங்கி அனுப்பினேன்.அதற்கு பிறகு காலிங் கார்டு பக்கம் போவதே இல்லை.

நாங்கள் பேசியதை பார்த்து அகலப்பட்டை வைத்துளல அனைத்து இந்திய நன்பர்களும் எனக்கு உனக்கு என்று ஆளாளுக்கு ஒன்று கேட்டார்கள்(வருடத்திற்கு 1000 ரூபாய் அவர்களுக்கு ஓன்றும் இல்லையாம்).

அதில் உள்ள சாதக பாதகங்கல்ளை தெளிவாக கூறி நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டேன். (ஆமா இவங்களுக்கு எதுக்கு அமெரிக்க போன் நம்பர் தெரியுமா? அதுல ஒரு பெரிய விஸயம் இருக்கு அப்பரம ஒருனாள் சொல்லுறேன்)

நான் ஒரு அப்பாவி/வெவரம் தெறியாத சின்னபிள்ளைங்க ஒரு மாதிரி என்னை கன்வின்ஸ் செய்து முதலில் 2 நன்பர்கள் வாங்கி விட்டார்கள்.அவங்க பேசுறதை பார்த்து/உபயோகிப்பதை பார்த்து இன்னும் ஒரு 5 பீஸ்க்கு ஆர்டர் வந்தது. பந்தாவா வாங்கி அனுப்பிவிட்டேன். அவர்களும் தொழில் முறையாகவும், நட்பாகவும் ஒழுங்காக use செய்தார்கள். இதை வாங்கும் போது நாம் வசிக்கும் இடத்தை குறிப்பிட்டு ரெஜிஸ்டர் செய்ய வேன்டும்,இது இங்கு சட்டம். ( If we register the wrong address it wont register your name,Y they have address data base and it should match with the registration address)

கடந்த 7 மாசமா ஒழுங்காகதான் இருந்தது.இன்னிக்கு காலையில் ஒரு 6.30 மனிக்கு கதைவை சத்தமாக தட்டும் சத்தம் கேட்டு குளியல் அறையில் இருந்து ஓடி வந்தேன்.திறந்தால் கருப்பு சட்டை அனிந்த வாட்டசாட்டமன் காவல்துறை அதிகாரி. எனக்கு ஆச்சிரியமாகவும்,எதற்கு என்ற ஒரு வியப்பாகவும் இருந்தது.

Officer: Sir we have received an emergency call form your phone number/addres are u alright, you guys doing OK?

Me: We're OK but we havn't called 911.

இல்லை இதுதானே அட்றசு, போன் நம்பர்னு ஒரு நம்பர் கொடுத்தார். நான் பார்த்துவிட்டு அட்றசு சரிதான் ஆனா போன் நம்பர் இது இல்லைனு சொன்னேன்.ஒரு நிமிடம்னு தன்னுடைய காரில் உள்ள கம்யூட்டரில் தகவல்களை சரிபார்த்து விட்டு நான் வாங்கிய சரித்திரத்தை எனக்கு தெளிவாக கூறினார்.அப்பரம் தான் நியாபகம் வந்தது அது இந்தியாவிற்கு வாங்கிய Majic Jack number என்று.அவரிடம் விவரத்தை சொல்லி மன்னிப்பு வேண்டினேன். அவர் அதை நம்பிய மாதிரி தெரியவில்லை, கீழே காருக்கு சென்று ஒரு 3 நிமிடம் கழித்து வந்தார்.

If it happens again you will be in big trouble coz this number is registred with your name and address and you are the responce for all the activites.ஒரு கடுமையான் வார்னிங் கொடுத்து சில அட்வைஸ் களும் இலவசமாய் கொடுத்து இந்த நாள் மகிழ்சிகரமாக இருக்க வாழ்த்துகள் என்று சிரித்துவிட்டு போனர்.(அது சரி காலையிலே கடுப்படிச்சிட்டானுங்க இனிமே என்னத்தை சந்தோசமான் நாளு)

அவரை அனுப்பிட்டு அதே கோபத்தோடு இந்தியா நம்பருக்கு கூப்பிட்டா மக்கள் தெளிவாக மப்பில் சிரித்தார்கள்.சும்ம டெஸ்டு பன்னி பார்த்தார்களம்

நான் நடந்ததை கூறினேன், மப்பில் இருந்தவர்ளுக்கு புரிந்ததா ந்ன்று தெரியவில்லை, சிரி சிரி என்று சிரித்தார்கள், மாப்ளெ உங்க ஊரி போலிசு சூப்பரா வேலை செய்ராங்கபானும் ஒரு கமென்டு வேற. கையோடு மேஜிக் ஜாக் கஸ்டமர் சர்வீஸ் கூப்பிட்டு என்னுடைய அடாப்டர் while in travel தொலந்துவிட்டது அப்படினு ஒரு கம்ளைன்டு செய்து விட்டேன் அதற்கு அவர்கள் சரி நாட் எ பிராப்ளம் வி வில் சென்ட் அனொதெர் அடாப்டர்னு சொலிலிடாங்க.

ஊரு பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க தெருவில போற ஓனான எடுத்துகிட்டு சூ...ல சொரிகி கிட்டு அப்பறம் குத்துதெ கொடையுதேனு பொலம்பினா நான் என்ன பன்றது?அந்த மாதிரி ஆச்சு இன்று

Sorry for the எழுத்து பிழைகள்

9 comments:

ILA (a) இளா said...

நடந்தது எல்லாம் நினைச்சா பாவமா இருக்கு. ஆனா விவரம் தெரியாம சிரிச்ச உங்க நண்பர்களை(?!) நினைச்சா கடுப்பா இருக்கு.

சுரேகா.. said...

அடேயப்பா!

உதவி செய்யுறது ஒரு குத்தமா?

ம்..

நல்லா சொல்லியிருக்கீங்க

வால்பையன் said...

வெகு நாளைக்கப்புறம் எழுத வந்திருக்கிங்க!
எடுத்தவுடனே சோகமா!

இங்கே கம்பம் பிடுங்கம் திருவிழா எல்லாம் நல்லபடியாக முடிந்தது.
சீனி அண்ணா வழக்கம் போல் எல்லோருக்கும் குங்கும திலகம் இட்டார்
நீங்க எப்போ ஈரோடு வர்ரிங்க

அடிக்கடி பதிவு எழுதுங்க

வால்பையன்

Unknown said...

உங்க நிலைமைக்கு என் வருத்தங்கள். இது போல் இனிமேல் நிறைய நடக்க வாய்ப்புகள் இருக்கு. ஏன்னா, நெறைய பேர் இந்த அடாப்டர் வாங்கி இந்தியாவுக்கு அனுப்புறாங்க (நான் கூட ஒண்ணு வாங்கி அனுப்பி, கண்டிப்பா 911 கூப்பிடக் கூடாதுன்னு சொல்லிட்டேன்!)

சிரித்த உங்க நண்பர்களுக்கு கடுமையா சொல்லிடுங்க. இது விளையாட்டு காரியம் இல்லன்னு. ஆம்புலன்ஸ மட்டும் கூப்புட சொல்லிடாதீங்க. கூப்பிட்டா 5 நிமிஷத்துல வந்துடுவாங்க. ஒரு வாரத்துல $1000-க்கு பில்லும் கூடவே வந்துடும் :))

எனக்கும் ஒரு 911 அனுபவம் இருக்கு. பதிவா போடற எண்ணமும் இருக்கு. விரைவில் :)

வடுவூர் குமார் said...

இது எழுத இவ்வளவு நாளா??
:-))

KARTHIK said...

// இது எழுத இவ்வளவு நாளா?? //

தொடர்ந்து எழுத முயற்சியுங்கள் பீம்

Unknown said...

நீங்க ரொம்ப உஷாரைடீங்க நட்பு ...


ஆனால் வேடில உட்ட ஓணான் கடுசுதா? இல்லையா?


கடுச்ச அனுபவத்த தான் எழுதி இருக்கீங்க போல........ சரி .... சரி ....

dondu(#11168674346665545885) said...

நிஜமாகவே மிகவும் சீரியசான விஷயம்தான். செப்டம்பர் 9, 2001 காலக் கட்டமென்றால் முதலில் உள்ளே தள்ளிவிட்டுத்தான் மறுவேலை பார்த்திருப்பார்கள்.

நீங்கள் இப்பதிவு போட்டது பற்றி எனது ஈரோடு நண்பர் வால்பையன்

http://valpaiyan.blogspot.com/

சொன்னார். ஆகவே வந்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Beemboy-Erode said...

தங்கள் வருகைக்கு ந்ன்றி திரு டோண்டு சார்

Anbudan

Beemboy