16 May 2009

அர‌சிய‌ல் வாந்திக‌ள்....

பா.ம.க‌
இவ‌ர்க‌ளின் திட்ட‌ங்க‌ள் சில‌ நாட்டுக்கு ந‌ல்ல‌துதான் ப‌ல‌ திட்ட‌ங்க‌ள் ந‌ம்மை க‌ற்கால‌த்திற்கு அழைத்து சென்றுவிடும்.

கூட்டணிக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அதை பேசி தீர்த்திருக்க வேண்டும், ஆனால் பா.ம.க அந்த விஷயத்தில் ரொம்பவும் அரசியல் நாகரீகத்தை கடைபிடிக்க வில்லை, மாறாக உடனே அந்த கூட்டணியை விட்டு விலகி எதிரணியில் சேர்வதையே ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் தங்களுடைய கொள்கையாக வைத்திருந்தன.(பணம் சம்பாதிப்ப‌த‌ற்கு)

எப்போது பார்த்தாலும் தாங்கள் கூட்டணி வைத்திருக்கும் கட்சியின் ஆட்சியை பற்றியே குறை சொல்லிக்கொண்டிருப்பதும், அவர்கள் ஏதாவது புதிய திட்டங்கள கொண்டு வந்தால் அதைஎதிர்ப்பதும், அதைப்பற்றி கேலியும்,கிண்டலும் செய்வதும் என பா.ம.க தலைவர் ராமதாஸ் அதை தவிர வேறு எதையுமே உருப்படியாக செய்யவில்லை, ஈழப்பிரச்சனையை கூட இவர்கள் தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்திக்கொண்டர்களே தவிர அதில் உருப்படியாக எதையுமே செய்யவில்லை.
இந்த‌ க‌ட்சிக்கு வாக்க‌ளிக்காத‌வ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி! ந‌ன்றி!! ந‌ன்றி!!!


பார‌திராசா, சீமான், க‌விஞ‌ர் தாம‌ரை ம‌ற்றும் ப‌ல‌ர்....
இவ‌ர்க‌ளுக்கு ஏன் இந்த‌ வேன்டாத‌ வேலை? தேவை இல்லாத‌ அசிங்க‌மான‌ வ‌ச‌ன‌ங்க‌ள் ( இத்தாலி ச‌ர்வாதிகாரி/ தாலி அறுப்ப‌வ‌ள்/ தொப்புள் கொடி உற‌வுக‌ள்/ என் அண்ண‌ன் பிராபாக‌ர‌ன்,அமாவாசைக்கு அடுத்த‌ நாள் ம‌ற்றும் ப‌ல‌ வீர‌ வ‌ச‌ன‌ங்க‌ள்) இந்த‌ சீமான் யார்? க‌ட‌ந்த‌ சில‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ தான் இவ‌ரை தெரியும்.ரொம்ப‌ ஓவ‌ராக‌ உன‌ர்சிவ‌ச‌ப்ப‌ட்டார்க‌ள்.
இந்திய‌ திரு நாட்டில் ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள் இருக்கும் போது முக்கிய‌மாக‌ த‌மிழ் நாட்டில் அதிக‌மாக‌வே உள்ள‌து. ஈழ‌ த‌மிழ‌னை ப‌ற்றீ பேச‌ வ‌ந்துவிட்டார்க‌ள். ஈழ‌த்த‌மிழ‌னை கொள்வ‌தை த‌டுத்து நிறுத்த‌வேண்டும் அதில் மாற்று க‌ருத்துஏதும் இல்லை. இவ்வ‌ள‌வு பேசும் நீங்க‌ள் விடுத‌லைபுலிக‌ளை போர் நிருத்த‌ம் ம‌ற்றும் சுய‌ ஆட்சி கொள்கைக‌ள‌ ஏற்று கொள்ள‌ செய்தால் ஈழ‌ ம‌க்க‌ள் கொல்ல‌ப‌டுவ‌து நிறுத்த‌ப‌டுமே.


சிறில‌ங்கா ரானுவம் சில‌ புகைப‌ட‌ங்க‌ளை வெளியுட்டுள்ள‌து அந்த‌ புகைப‌ட‌த்தில் பிராப‌க‌ர‌ன் ம‌க‌ன் என் கூற‌ப்ப‌டும் ந‌ப‌ர் உன்மையாக‌ இருக்கும் ப‌ட்ச‌த்தில் அவ‌ரை நான் ஒருமுறை முத‌ல் முறை விமான‌ப‌ய‌ன‌த்தில் ச‌ந்தித்து இருக்கிரேன்.அவ‌ர் இல‌ங்கை த‌மிழ‌ர் என்ப‌தில் ஒரு மாற்று க‌ருத்தும் இல்லை. அவ‌ருட‌ன் க‌தைத்து இருக்கிரேன்...அவ‌ரின் புகைப்ப‌டம் இருக்கிற‌து என்று நினைக்கிறேன். அடுத்த‌ முறை இந்திய‌ ப‌ய‌ன‌த்தில் அதை வெளியுடுகிறேன். அது பிலிம் ரோலில் எடுக்க‌ப‌ட்ட‌து..இல‌க்ட்ரானிக் புகைப்ப‌ட‌ம் கிடையாது.


இந்த‌ ம‌னித‌னைதான் வீர‌ர்/தீர‌ர்/ விமான‌ப‌டையை வ‌ழி ந‌ட‌த்தி செல்லும் ந‌ப‌ர் என்று சில‌ வார‌ங்க‌ளுக்கு முன் ஒரு ப‌த்திரிக்கை செய்தி வெளியிட்டு இருந்த‌து..lol


யாம் அறிந்த‌ உன்மையான‌ போர‌ட்ட‌த்த‌லைவ‌ர்க‌ள்/ யாரும் நீச்ச‌ல் குள‌ம் க‌ட்டி, மூன்று வேள‌ உன‌வ‌ருந்தி, தின‌மும் ம‌சாஜ் செய்து கொள்வ‌தில்லை. இவ‌ரின் ராச‌யோக‌ வாழ்க்கை சிறில‌ங்கா ரானுவம் ச‌ரியான‌ நேர‌த்தில் வெளியிட்டுவிட்ட‌து. ( பார‌திராசாவின் வீட்டில் கூட‌ நீச்ச‌ல் குள‌ம் கிடையாது)

ம‌திமுக‌/ நெடுமாற‌ன்
இந்திய‌ த‌மிழ‌ர்க‌ள‌ ப‌ற்றி க‌வ‌லை படாத‌ இந்திய‌ த‌மிழ் பேசும் வீர‌ர்க‌ள். பிராபாக‌ர‌னிட‌ம் இருந்த‌ ப‌ழைய‌ போர‌ட்ட‌ குண‌ம்/ விடுத‌லை‌ வேட்கையில் இருந்து அவ‌ர் வ‌ழி த‌வ‌ரிவிட்டார் என்று அறிந்தும் அறியாம‌ல் போல் இருப்ப‌வ‌ர்க‌ள். வைகோ வெற்றிபெற்று இருந்தால் அவ‌ருக்கு வெளிநாடு வாழ் த‌மிழ‌ர்( இந்திய‌ர் )குறை தீர்க்கும் துறை அளித்து இருக்க‌லாம்.


காங்கிர‌ஸ், திமுக
வெற்றி க‌ளிப்பிள் அந்த‌ கூட்ட‌ணி இருக்கலாம் ஆனால் வெற்றி என்ப‌து மிக‌சில‌ வாக்கு வித்யாச‌த்தில் தான் என்ப‌தை அவர்க‌ள் உண்ர‌ வேண்டும். ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌து செய்யுங்க‌ள் ம‌க‌த்தான‌ வெற்றியை ம‌க்க‌ள் த‌ருவார்க‌ள்.

கார்த்திக் ச‌ர‌த்குமார் பாஜக‌
ப‌ல‌ காம‌டிக‌ளின் ச‌ங்க‌ம‌ம்....


தென் சென்னை வேட்பாள‌ர் ச‌ர‌த்பாபு...
இட்லி வேக வில்லை


align="center">விஜ‌ய‌காந்த்
பிழ‌க்க‌ தெரியாத‌ ம‌னித‌ர்...இவ‌ருக்கு அர‌சிய‌ல் எதிர்கால‌ம் சிர‌(ற‌)ப்பாக‌ இருக்கிர‌து ( ஈழ‌ம் ப‌ற்றி அதிக‌ம் மூச் விட‌லையே). கால‌த்திற்கு ஏற்ப‌ அனுச‌ரித்து போனால் தான் ( தொலை நோக்கு பார்வையோடு) அர‌சிய‌ல் ந‌ட‌த்த‌ முடியும் என்ப‌தை இவ‌ர் இனிமேல் புரிந்து கொள்வார் இல்லை என்றால் சீக்கிர‌ம் க‌ட்சியில் இருந்து அனைவ‌ரும் வில‌கி த‌னியாவ‌ர்த‌ன‌ம் போட‌வேன்டிய‌துதான். தேர்த‌ல் வேலை செய்ய‌ இவ‌ர்க‌ள் க‌ட்சிக்கு தெரிய‌வில்லை.


மு.க‌. பெற்று எடுத்த‌ நான்கு எழுத்து அழ‌கிரி

ப‌ண‌ம், ப‌ன‌ம், ட‌ப்பு மூன்று எழுத்து...அய்யோ என்னை எழுத‌ விட‌லை ப‌ண‌த்தால் அடித்து விட்டார்க‌ள்..

தூத்துகுடி வ‌க்கீல்க‌ள்
த‌மாசு வ‌க்கீல்க‌ள்...ஒரு ப‌ட‌த்தில் வ‌டிவேலு ந‌டித்து இருப்பார் அவ‌ரை மின்ஜி விட்டார்க‌ள்


ஈரோடு வேட்பாள‌ர்
இருவ‌ருமே த‌னிப்ப‌ட்ட‌ முறையில் தெரியும்..ம‌க்க‌ள் ந‌ல்ல‌வ‌ரை தேர்ந்து எடுத்தார்க‌ளா இல்லை மிக‌வும் ந‌ல்ல‌வ‌ரை தேர்ந்து எடுத்தார்க‌ளா என்று கேட்டால் நான் மிக‌வும் ந‌ல்ல‌வ‌ரை தேர்ந்து எடுத்தார்க‌ள் என்று தான் சொல்லுவேன்....அவ‌ர் மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர் ஆக‌ இருந்து எந்த‌ பிர‌யாச‌ன‌மும் கிடையாது....
வாக்க‌ளித்த‌ அனைவ‌ருக்கும் ந‌ன்றி ந‌ன்றி...

2 comments:

வால்பையன் said...

ஈரோடு தேர்தல் குறித்து இட்லிவடையில் நான் எழுதிய ரிப்போர்ட்

KARTHIK said...

பாமக தலைவர் நெனச்சிருப்பாரு மக்கள்லாம் இன்னும் முட்டாளுங்கன்னு.
பாவம் தப்புக்கணக்கு போட்டுட்டார் :-))