28 Apr 2007

கிரிகெட்டு...மற்றும் ஜாதககட்டு

சரி உலககோப்பைலாம் முடிஞ்சுதுபா....அப்பாடா. ஆனா இப்ப போயி ஒரு விசயம்லாம் நியாபகம் வருது எனுங்கனா?

இந்த கிரிகெட்டு பீவர் ஆரமிச்சபோது நிறைய பேரு ஜாதகம் சொன்னாங்க, கம்பேர்பன்னாங்க. அதுலாம் இப்ப அல்வாவா.....? இதோ ஒரு சாம்பிள் லிங்கு.... யாராவது விஞ்ஜானாரீதியாக விளக்கம் அளிப்பார்களா? சும்மா பொழுது போகமாட்டேன்குதுனா......

பின்குறிப்பு: 30தாவது நாள் விழா மற்றும் நாமக்கல் போன் பூத் ஓனருக்கு கார் கிடைத்ததா என்பது பற்றி மிக விரைவில்......உங்கள் பீம்பாய் பிளாக்கில்( ஸ்பான்சர் தேடிகிட்டுருக்கேன்)


4 Apr 2007

வெற்றிகரமான 30 தாவது நாள்.


எனது பிளாக் ஆரமித்து இன்றுடன் 30 நாட்கள் ஆகிறது, இதுவரை ஓர் ஆயிரம் பேர் என்னை பார்த்துள்ளார்கள். 50 பதிவுகள் இட்டுள்ளேன். வந்தவர்கள், வரப்போகிரவர்கள், பின்னூட்டம் இட்டவர்கள், சிரித்தவர்கள், திட்டியவர்கள் அனைவர்க்கும் நன்றி! நன்றி!!நன்றி!!!
ம்..ம்...ம்...அடுத்து என்ன பதிவிடலாம் என்ற என்னம் எழுந்தபொழுது சரி 30 நாளின் வெற்றிவிழாவை பற்றி எழுதுவிடலாம்னு முடிவுக்கு வந்துள்ளேன்.
ஆன்றோர்களே, சான்றோர்களே, மொக்கைபதிவிடும் அன்பர்களே, பார்ப்பீணீய-திராவிட ஜல்லிகளே, சில பல நல்ல செய்திகளை தரும் வலைப்பதிவாளர்களே, பீம்பாய்-ஈரோடு அவர்களின் 30தாவது நாள் விழாவை சிறப்பிக்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்:
வரவேற்புரை: எங்க மாமா சு.சாமி
வாழ்த்துவோர்: அத்தை, மற்றும் சித்தப்பா. (இவருக்கு குடி உள்ளே போகமல் இருந்தால் வாழ்த்துவார்)
சிறப்பு விருந்தினர்: தாத்தா தி.(ரு.) மு.க
நிறைவுரை: பீம்பாய்
பின் குறிப்பு: நிகழ்சியின் முடிவில் வாழை இலை விருந்து நடைபெறும், அத்துடன் தலைக்கு ஒரு கிளாஸ் பிராந்தி வைக்கப்படும்
பிராந்தி விருப்பம் இல்லாதவர்கள் பீர் அல்லது கள்ளு தரப்படும்
அட்லான்டிக் கடலை தான்டி ஐரொப்பியா, வளைகுடா, கிழக்கசியா வழியாக ஒர் இலவச விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (ஒரு வழி பயனம் மட்டும்) முதலில் வரும் பின்னூட்டங்களுக்கு மட்டும் சீட் ஒதுக்கப்படும். கவனத்தில் கொள்க இருக்கையின் அளவு 75 மட்டுமே)
(அப்பாடா எங்க அத்தையின் பனத்திற்கு கணக்கு எழுத ஒரு காரனம் கிடைத்தாயிற்று.)
ஐய்யய்யோ.....விழா ஈரோடுட்ல தாங்க!!!!!!!!!! பிளைட் கோயமுத்தூர் வரைக்கும் வரும்ங்னா!!!!!!!1 கோவை டு ஈரோடு சரியாக 100 கி.மீ 1.45 மனித்துளிகள் வந்துவிடலாம். என்.ஹெச். 47னா, அருமையான் ரோடுங்னா