26 Oct 2007

சலவைகடைக்கு விளம்பரம்.18+ Only


ரொம்ப நாளைக்குமுன் (சுஜாதாவின்) மெக்சிகோ சலவைகாரி ஜோக் தெரியுமானு வலையில் கேட்டிருந்தேன் சிலர் பதிலலித்தார்கலள், அதுலாம் சரியான் பதில் இல்லை. அன்மையில் மெக்சிகோ சென்றிருந்தபோது சிலரிடம் விசாரித்ததில் ஒரே ஒரு வயாதானவருக்கு மட்டும் விடை தெரிந்திருந்தது...கேட்டவுடன் சரியான சிரிப்பு..ஆனால் அவ்வளவு அசிங்கம்....அந்த பதிலை யாரும் தைரியமாக அச்சில் ஏற்றமாட்டார்கள்.
அந்த வயதான மனிதர் உனக்கு எப்படி இந்த ஜோக் தெரியும் என்று கேட்டார்...இது ரொம்ப பழசாச்செனு ஆச்சிரஇயபட்டார்....(அவரின் அரைகுரை ஆங்கில அறிவிர்கு ஒருமனி நேரம் ஆனது புரிய வைப்பதற்கு...அவர் ஒரு உனவகத்தில் வேலை செய்பவர்...)

இது நெசமா? இது நெஜமா?

மெய்யாலுமா? இல்லனா டுபாகூரா?

7 Oct 2007

SFO-2 கட்டுமான பொறியாளர்களுக்கு ஒர் சிறு கேள்வி?

இது எதற்கு?

எதோ போகுதுங்க


கேமரா கோனம் நல்லாருக்குங்களா?

மற்றொறு கோனம்




இந்த தீவு அந்தகாலத்தில் சிறைச்சாலை யாக இருந்ததாம்.









பாலத்தை வடிவமைத்த புன்னியவான்...
கட்டுமான பொறியாளர்களுக்கு ஒர் சிறு கேள்வி?
நம்ப ஊரில் பாலங்கள் வடிவமைக்கும் பொழுது பாலத்திற்கு கீழே நிறைய பலம் இருக்கும்படி வடிவமைப்பார்கள், ஆனால் இங்கு தலைகீழ், பாலத்திற்கு கீழ் தூன்கள், மற்றும் பாலத்திற்கு மேலே நிறைய வடிவமைப்புகள்.
(சில நாட்களுக்கு முன் ஒரு பிளாகர் கட்டிட கலையை பற்றி எழுதிவந்தார், அருமையான் கட்டுரைகள், தற்பொழுது அவரை கானவில்லை, வேலைப்பளுவோ?)

SFO-







நிறைய கார்கள் இருப்பதால் OIL மாற்ற நேரம் இல்லை









பூக்கடை?












ரவுட்- 1 (CA-1)

6 Oct 2007

லிவர் மோர் கோவிலில் EVR @ பெரியார்

லிவர் மோர் சிவா விஷ்னு கோயில்






லிவர் மோர் சிவா விஷ்னு கோயில் போனபொழுது ஒரு சுவையான டயலாக்...ஒரு தந்தை மகனுடன் பேசியது. He is around 7-8 years.

அப்பா today is my bad day, u know why?

ஏன்டா கன்னு என்னா ஆச்சு?

நான் மெதிச்சிட்டேன்... the shaddows of the grass...

புரியலயே கண்ணம்மா... could you explain more

நான் சொல்லுரேன் நான் மெதிச்சிட்டேன் அந்த shadows of the grass...so it is bad luck அதான் சொன்னேன் இன்னிக்கு எனக்கு bad day.

ஓ...நீ அந்த புல்ல stepon பன்னிட்ட so u belive ur day is bad am I right?
yes but I stepd on the shadows..that is belief of bad day அப்பா.

இல்ல கண்ணம்மா உன்னோட belief தப்பு கண்னா.....இதுலாம் யாரவது சும்மா சொல்லிருப்பாங்க....இங்க பாரு நான் ஒரு கதை சொல்லுரேன்... but this is real it happend in India.

இந்தியாவுல ஒரு தாத்தா இருந்தாரு அவர் பேரு ராமசாமி, ஆனா அவர எல்லாரும் பெரியார்னு தான் சொல்லுவாங்க..

Is that his nic name அப்பா?

ஆமாம்டா கண்ணா..உன்னமாதிரியே இந்தியாவுல நிறைய பேரு இந்த மாதிரி bad beliefs trust பன்னாங்க..அவரு தான் இதுலாம் தப்புனு சொல்லி எல்லாருக்கும் அட்வைஸ் பன்னாரு..

Did anyone listen to him அப்பா ? yes da கண்ணா

இப்ப நீ step on பன்னது ஒரு accident.. so இதுலாம் நீ trust belive பன்னது கூடது சரியா?

OK அப்பா அவரு என்னா மாதிரி அட்வைஸ் பன்னாருபா?

கன்னு கார்ல போகும் போது கேளு சொல்லுரேன்...இப்பா வா தாத்தாவுக்கு கோயில் சுத்திகாட்டலாம்...

எனக்கு அவர்கள் பேசியதை கேட்க ஆச்சர்யமாகவும், அதிசியமாகவும் இருந்தது, அவரிடம் என்னை அறிமுகப்படுத்திகொன்டு சற்று நேரம் பேசிக்கொன்டுருந்தேன்...இல்லீங்க பய்யனுக்கு கடவுள் என்றால் என்னனு தெரியனும், அதே நேரம் மூடநம்பிக்கை இருக்ககூடாது...அதனாலதான் கோயிலுக்கு கூட்டிடு வந்தேன்...அவனுடைய டீன் ஏஜில் அவன் deceide செய்துகொள்ளட்டும்...ஆனால் எந்த ஒரு காரணத்தை கொன்டும் மூடநம்பிக்கை மட்டும் வரக்கூடாது...

When data and belief come into conflict, the brain does not give preference to data.The brain doesn't care whether or not the belief matches the data. It cares whether the belief is helpful for survival.

அதனாலதான் இப்பவே அவனுக்கு இந்தமாரி சொன்னேன்...இல்லனா கருப்பு பூனை போச்சுனா BADLUCK, I got # 13 so this will be a bad for me...இல்லனா red பூ will bring a accident or blood on the day அப்படினு ஆரமிச்சிடுவானுங்க..வித்யாசமான சிந்தனையுள்ள மனிதர்....

சரி பெரியாரின் பிரசங்கம் லிவர் மோர் கோயில் வரை வந்துள்ளது நினைத்தால் சந்தோசமாகதான் இருக்கிறது அதைவிட சந்தோசம் பையன் 90 சதவிகிதம் தமிழ் பேசியது





21 Sept 2007

உழவர் சந்தை- Farmers Market.



சன்ரைஸ் புலவாட், சன்ரைஸ் மாலில் உள்ள சியர்ஸ்
( Sunrice Blvd, Sunrice Mall, Sears ) கடையின் பார்கிங் லாட்டில் ஒவ்வொரு சனிக்கிழமை காலை 7 மணி முதல் மதியம் 12 வரை உழவர் சந்தை இருக்கும். நிறைய உழவர் சந்தைகள் இருக்கிறதாம், 65 th street, புளோரின் ( Florin) ரோடு மற்றும் பல இடங்களில் உள்ளதாம்.

ஒருசனிக்கிழமை காலையில் நானும் நன்பரும் சென்றுவந்தோம், கடைகள் டென்டு போட்டு தான் வைத்துஇருக்கிரார்கள். அனைவரும் விவசாயிகள், மற்றும் அவர்கள் குடும்பத்தார்கள் தான். அதிசியமாக பார்ம்மில் வேலை செய்யும் சில ஸ்பானிஷ் வேலையாட்களை இருந்தார்கள்.

விவசாயிகளிடம் பேசியபொழுது நம்நாட்டு விவசாயிகளை போலவே புலம்பல்தான். ( மழை இல்லையாம், இந்த வருடம் ( Drout) டிரவுட்-ம், வேலைக்கு ஆட்கள் பற்றாகுறை, உற்பத்தி செலவு அதிகம், ) இதையெலாம் மீரி வருட மொத்த வருமானமே 70, 80-k தானாம்.
(அடப்பாவிகளா copy & Paste செய்ரவங்களுக்கு இதைவிட ஜாஸ்தியா கிடைக்குதே)
அது சரி இவங்களுக்குலாம் டேக்ஸ் கிடையாது. Copy & Paste செய்ரவங்க நிறைய டேகஸ் கட்டுராங்க.
( அப்பாடா யாரும் திட்டமாட்டிங்க தானே).
இவர்களின் கல்வி அறிவு பற்றி பின்னாளில் எழுதலாம் என்று இருக்கிறேன், இது சம்பந்தமாக சிலரிடம் பேசிகொன்டு இருக்கிரேன்.

கேரட், முள்ளங்கி, வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், ஆரஞ்சு, ஆப்பிள், தேன், சீஸ், தர்பூஸ், சலரி, லீக்ஸ், காளான் கீரைககளனைத்தும் கிடைக்கிறது. விலையும் சரியான சீப்புதான்....நன்பரின் குடும்பம் பெரியது என்பதால் நிறய அள்ளி போட்டுகொண்டு வந்தோம்.

எல்லாம் வாங்கிகொண்டு வந்து கணக்கிட்டு பார்த்தால் மொத்தமே 25 டாலர் தான் ஆகியிருந்தது, இதேயே சேப் வே ( SAFEWAY)- ராலி (RALE) யில் வாங்கியிருந்தால் 80- 100 டாலர் ஆகியிருக்கும் என்று கூறினார்.என்ன ஒரே பிரச்சனையென்றால் இவைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும், ( நம்ப ஊர் மாதிரி) Super stores- ல் வாங்கினால் கழுவவேன்டியதில்லை. நன்பரின் வீட்டில் பெற்றோர் இருப்பதால் அவர்களுக்கு இது எல்லாம் ஒரு விஷயமே இல்லை.
அப்படியே பால்ஸம், ஈஸ்ட் பிட்வில் ரோடில் ( Folsom, E.Bidwell) உள்ள கடைக்கு சென்று சிக்கன் வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். இங்கு சற்றே விலை அதிகம் ( பவுன்டுக்கு 10 சென்டு) என்றாலும் நம் ஊர் கடைகளைபோல் தோல் எடுத்து சிறியதாக கட் செய்து கொடுக்கிறார்கள். Safeway- Costco- வில் வாங்கினால், நாம் தான் கசாப்பு கடைகாரர் வேலை செய்யவேண்டும், (பின்னர் அந்த இடத்தை சுத்தம் செய்ய ஒரு அரைமனி நேரம் செலவிட வேன்டும்).
வாங்கிவந்த சிக்கனை பார்( என்னை பார்) (படுத்து) கியு (கில்பன்னி சாப்பிடு) BAR B Q செய்து சாப்பிட்ட அனுபவம் பின்னொருநாளில் படத்துடன் போடலாம் என்று இருக்கிறேன், வேன்டாம்னா பின்னூட்டத்தில் சொல்லிடுங்கனா.....( சேம்பிள் சிக்கன் பாருங்க...)



19 Sept 2007

ஆப்பிள் பிக்கிங்- APPLE PICKING




































































நன்பரின் அழைப்பிற்கு மதிப்பளித்து, கலிபோர்னிய தலைநகர் சாக்ரமென்டோ விலிர்ந்து 50 மைல் தொலைவில் இருக்கும் ஆப்பிள் ஹில் என்னும் இடத்திற்கு சென்றவாரம் போயிருந்தோம். மிதமான தட்பவெப்பநிலை பயனத்திற்கு மேலும் வலூவூட்டியது.

சாக்ரமென்டோவிலிருந்து ஹைவே- 50 (East) யில் ஒரு 40 மைல் பயனித்து எக்ஸிட்- 54 எடுத்து ஒரு 3 மைல் பயனித்தால் ஆப்பிள் ஹில் வரவேற்ப்பு அலுவலகம் நம்மை வாங்க..வாங்க என்று வரவேற்கிறார்கள்.

அங்கு சூடாக ஒர் வரகாபி குடித்துவிட்டு மேலும் விவரங்களை பெற்றுகொண்டு அந்த ஏரியா மேப் எடுத்துகொன்டு பயணித்தோம்.

இங்கு நிறைய ஆப்பிள் தோட்டங்கள் உள்ளது, எங்கு வேண்டுமானாலும் நமக்கு வேண்டிய அளவு பறித்துகொள்ளலாம், பின்னர் அதை எடை போட்டு பணம் கொடுக்கவேண்டும்.

நாங்கள் தேர்வு செய்த இடம் டென்வர் டேஸ் ( Denver Day's) என்னும் ஆப்பிள் தோட்டம்
சிறிய தோட்டம் தான் என்றாலும், நிறைய மரங்கள் இருந்தன. ஆப்பிளில் நிரைய வெரைட்டிகள் உள்ளது. பிஜி, கேலா, ரெட் மாக்கின்டோஷ், கிரின் ஆப்பிள், மற்றும் பல....

மரத்திலிருந்து பறிக்கலாம், கடிக்கலாம், பிடித்திருந்தால் மேலும் பறித்துகொள்ளாலாம், அல்லது கீழே போட்டுவிடலாம்.ஒரு 100 ஆப்பிளாவது சுவைத்து இருப்பேன், சுவை பிடித்திருந்த மரத்தில் இருந்த ஆப்பிளை பறித்து எங்களின் பக்கடில் (Bucket) ஒன்றிரன்டு போட்டுகொண்டோம்.இப்படியே அனைத்து மரங்களிளும் சுவைத்து, பறித்து சோர்வடைந்து எடை போட வந்தோம்.

ஆஹா...ஆஹா....அங்கு ஆப்பிளிள் தயாரான உணவு பொருட்களை விதவிதமாக சுவைக்க கொடுத்தார்கள், விற்பனைக்கும் உண்டு ஆனால் நம்க்குலாம் அது ஒத்து வராது.

ஆப்பிள் தோல் உரிக்க ஒரு மெசின், ஆப்பிளை கட்பன்ன ஒர் கருவி, ஆப்பிளில் தயாரான ஜாம், ஆப்பிள் பட்டர், ஆப்பிள் வைன்,ஆப்பிள் வினிகர், மற்றும் ஆப்பிளின் மகத்துவங்கள் நிரைந்த அட்டவனை இருந்தது.

அனைத்தையும் பார்வையிட்டுகொண்டு பறித்த ஆப்பிளை எடை போட்டால் 40 பவுன்டு என்று வந்தது, ஒரு பவுன்டு 75 சென்டு என்று கணக்கிட்டு 30 டாலர் கொடுத்து விட்டு வெளியே வந்து அங்கிருந்த பிக்னிக் டேபிளில் கட்டுசாதம் சாப்பிட்டோம்.(அதுதானே புளி சாதம் கட்டிடு போலனா அது ஒரு டூரே கிடையாதுங்க).

கடிகாரத்தை பார்த்தால் மணி 2 தான் ஆகிருந்தது இன்னும் சில நேரம் செலவழிக்கலாமே என்று மேப் எடுத்து கண்களை மேய விட்டோம், போ விஸ்டா ஆர்ச்சேடு (Bow vista Orchard)என்னும் இடத்தில் ஆப்பிளை தவிற பேரிக்காய், மற்றும் பல வகையான் பழங்கள் கிடைப்பதாக மேப் தெரிவித்தது சரியென்று அங்கு சென்றால், அது ஒர் பஜார் போல் இருந்தது, ( நம் ஊரில் மலை வாசஸ்தலம் டூர் சென்றால் அங்குள்ள கடைகளைப்போல்)
அங்கு சென்றபிறகு தான் தெரிந்தது, நாங்கள் பறித்த ஆப்பிளுக்கு இங்கு விலை 65 சென்டு தான். விதியை நொந்துகொண்டு மேலும் சிலபழங்களை வாங்கினோம். இருந்தாலும் ஒரு சந்தோசம் நாங்கள் பறித்தது பிரஷ் ஆக இருக்கும் அதனால் 10 சென்டு அதிகம் கொடுத்தால் தப்பில்லை என்று மனதை தேற்றிகொண்டோம்.(நொன்டி சாக்கு?)இப்படிதான் எனது ஆப்பிள் நிறைவடைந்தது.

இங்குள்ள படங்கள் அங்கு எடுக்கபட்டது, படத்தில் உள்ள விலங்கு ( பல்லை நீட்டிகொண்டிருக்கும் விலங்கு என்ன வகை விலங்கு? யாராவது சொல்லுங்களேன்)

18 Sept 2007

ரஜினி அடுத்தபடம் என்னா?

ஒரு கற்பனை உரையாடல்
இயக்குநர்: சார் வணக்கம். ரஜினிசாருக்கு ஏத்த ஒரு அருமையான கதையோட வந்திருக்கேன். ஏ,பி,சி, எல்லா சென்டர்லயும் பின்னி எடுத்துரும்.

தயாரிப்பாளர்: இப்பல்லாம் அவருக்கு வேர்ல்ட் மார்க்கெட் சார். கதையைவிட இன்னொரு விசயந்தான் ரொம்ப முக்கியம். சந்திரமுகி, சிவாஜியில வந்த மாதிரி அவர் இளமையா இருக்கனும் பாபா மாதிரி ஆயிடக்கூடாது.

இயக்குநர்: அடடே நீங்க வேற. நம்ம கதையில தலைவருக்கு அதக்காட்டிலும் இளமையான வேஷம் சார். அவரு +2 ஸ்டூடண்டுன்னா பாத்துக்கங்களேன்.

தயாரிப்பாளர்: என்னது, +2 ஸ்டூடண்டா? மக்கள் நம்புவாங்களா?

இயக்குநர்: அதெல்லாம் எது சொன்னாலும் நம்புவாங்க. நீங்க ஏன் கவலைப்படுறீங்க.

தயாரிப்பாளர்: அப்ப ஸ்ரேயா +1 ஸ்டூடண்டா?

இயக்குநர்: ம்ஹும்... உண்மையான +1 மாணவிதான் கதாநாயகி. வேணுமின்னா, ஸ்ரேயாவுக்கு கதாநாயகனோட அக்கா வேஷம் கொடுத்துரலாம்.

தயாரிப்பாளர்: அய்யய்யோ, அந்தப் பொண்ணு கோவிச்சுக்கப்போகுது சார், சரி அத விடுங்க, கத என்னான்னு சொல்லுங்க.

இயக்குநர்: படத்தை ஓப்பன் பண்னுனா, ஒரு பெரிய பாலைவனம், அதுல 20,000 ஒட்டகங்கள் வரிசையாப் போகுது.

தயாரிப்பாளர்: (அதிர்ச்சியுடன்) இருபதாயிரமா... நான் ஒரு வழி ஆயிடுவேன் போலருக்கே.

இயக்குநர்: சிவாஜியைத் தாண்டனும்னா சும்மாவா? ஒரு பிரம்மாண்டம் இருந்தாத்தானே மக்கள் இரசிப்பாங்க, பட்ஜெட் நூறு கோடின்னு வச்சிக்குங்க. அப்புறம் உங்களுக்கு மலைப்பே வராது.

தயாரிப்பாளர்: ஆனா எனக்கு இப்ப மூச்சே வராது போலிருக்கே.

இயக்குநர்: ஒண்ணும் பயப்படாதீங்க, 3300 பிரிண்ட் போட்டு மூணே நாள்ல பணத்த அள்ளிடலாம். முதல்ல கதையைக் கேளுங்க.

தயாரிப்பாளர்: முழுக் கதையும் அப்புறம் கேட்டுக்கிறேன். முதல்ல ஒரு ஒன்லைன் சொல்லிருங்க.

இயக்குநர்: ஓ.கே. சார். ஈரான்மேல அமெரிக்கா படை எடுக்குது. அதக் கேள்விப்பட்டு இங்கயிருந்து ஒரு +2 ஸ்டூடண்ட் அங்கே போயி அமெரிக்காவை எப்படி எதிர்க்கிறான் அப்பிடிங்கறதுதான் கதை.

தயாரிப்பாளர்: அமெரிக்காவையா?

இயக்குநர்: ஆமா சார். அமெரிக்க இராணுவத்தை, ஒத்தை ஆளா நின்னு ரஜினி எப்பிடி சமாளிக்கிறார் அப்படிங்கறதுதான் கிளைமேக்ஸ்.

தயாரிப்பாளர்: கொஞ்சம் லாஜிக் இடிக்குதே சார்.

இயக்குநர்: ரஜினி படத்துல மக்கள் லாஜிக் கெல்லாம் பாக்கவே மாட்டாங்க. பொழுது போகணும்னுதான் படத்துக்கு வாராங்க, லாஜிக்கெல்லாம் யார் சார் பாக்குறாங்க.

தயாரிப்பாளர்: சரி படத்துல ஹைலைட்டா ஏதாவது ஒரு சீன் சொல்லுங்க.

இயக்குநர்: ஓ. யெஸ். நம்ம ஹீரோ மீனம்பாக்கத்துல இருந்து டெஹ்ரான் வரைக்கும் ஒரு விமானத்துல தொத்திக்கிட்டே போறாரு.

தயாரிப்பாளர்: ஏன் டிக்கெட் எடுத்துக்கிட்டே போகலாமே?

இயக்குநர்: போகலாம். ஆனா அதுல என்னசார் திரில் இருக்கு?, தொத்திகிட்டே போகும்போதுதான் நம்மால கிராபிக்ஸையும் பயன்படுத்தமுடியும். ஒரு ஷாட் பியுட்டியும் கிடைக்கும்.

தயாரிப்பாளர்: சரி செய்யுங்க. செலவையும் கொஞ்சம் பாத்துக்குங்க, மேல சொல்லுங்க.

இயக்குநர்: அங்க போயி எறங்கும்போது, அமெரிக்காவோட இராணுவ விமானங்கள் ஹீரோவை நோக்கி சீறிப் பாய்ஞ்சு வருது.

தயாரிப்பாளர்: அய்யய்யோ.... அடுத்து.

இயக்குநர்: ரஜினியா சார் அதெல்லாம் பாத்துப் பயப்படுவாரு?. என்ன செய்றாரு தெரியுமா? ஒரு டைவ் அடிச்சி ஓங்கி எட்டி காலால் உதைக்கிறாரு. அப்படியே விமானங்க எல்லாம் பறந்து போயி அந்தப் பக்கமா விழுகுது. எப்படி சார் இருக்கு இந்த சீன்?

தயாரிப்பாளர்: பிரமாதமா இருக்கு போங்க. நானே அசந்துட்டேன். தியேட்டர் ச்சும்மா அதிருமில்ல...

இயக்குநர்: கண்டிப்பா.

தயாரிப்பாளர்: ரொம்ப சந்தோஷம். நாளைக்கே நான் ரஜினி சார்ட்ட பேசிடுறேன். அடுத்த அமாவாசையில வேலய ஆரம்பிச்சிருலாம்.(இருவரும், கை கொடுத்து மகிழ்ச்சியோடு பிரிகின்றனர்)



Thanks to : Click here

17 Sept 2007

ராம பக்தர்களே


ராம பக்தர்களே, ஆத்திகவாதிகளே, மற்றும் நியாயம் பேசும் உன்மை கனவான்களே நீங்கள் அனைவரும் சற்றே நியாயத்துடன் பேசுங்கள்/யோசியுங்கள்.


ஒரு பாலம் இத்தனை வருடம் இருக்குமா?


அரசியல்/ கட்சி/இவற்றை எல்லாம் கணக்கிடாமல் நியாயமாக பேசுங்கள்.


இந்திய பொருளாதாரம் வளர்சியடைவதற்கு உங்களுக்கு விருப்பம் இல்லையா?


சென்னை மேம்பாலம் கட்டும் பொழுது எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்திர்கள், இப்பொழுது அதன் பலனை நீங்கள் அனுபவிக்கவில்லையா?


காலத்திற்கு ஏற்றார்போல் கோவனத்திலிருந்து டிராயருக்கு, பின் ஜட்டிக்கு மாறவில்லையா அதுபோல 21-ம் நூற்றான்டிற்கு மாருங்கள்.


சற்றே யோசியுங்கள், சிந்தியுங்கள்.